மலேசியாவில் மே மாதம் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபெறவுள்ள 25 பேர்களைக் கொண்ட இலங்கை ரக்பி குழாமின் விபரங்களை, இலங்கை தேசிய ரக்பி தெரிவுக் குழுத் தலைவர் மைக்கல் ஜயசேகர வெளியிட்டுள்ளார்.
மலேசியா செல்லும் இலங்கை ரக்பி அணியின் தலைவராக ரொஷான் வீரரத்ன
31 பேர் கொண்ட குழாமிலிருந்து ரதீஷ செனவிரத்ன (பொலிஸ் விளையாட்டு கழகம்), தமித் திசாநாயக்க (கண்டி விளையாட்டு கழகம்), கயான் ஜயமான மற்றும் சஷான் முஹம்மத் (CR & FC), ஸ்டெபான் கிரேகரி (கடற்படை விளையாட்டு கழகம்,) சுதம் சூரியஆராய்ச்சி (ஹெவலொக் விளையாட்டு கழகம்) ஆகியோர் உதிரி வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
அதேநேரம், தாரிக் சாலிஹ் (CR & FC), அஷான் டார்லிங், நிஷோன் பெரேரா, உமேஷ் மதுஷான் (ஹெவலொக் விளையாட்டு கழகம்), ஜோயல் பெரேரா (பொலிஸ் விளையாட்டு கழகம்), திலின விஜேசிங்க (கண்டி விளையாட்டு கழகம்), ரிச்சர்ட் தர்மபால (கண்டி விளையாட்டு கழகம்) மற்றும் அவருடைய சகோதரர் ரிச்சி தர்மபால (கடற்படை விளையாட்டு கழகம்) ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கவுள்ளனர்.
தாரிக் சாலிஹ், நிஷோன் பெரேரா மற்றும் உமேஷ் மதுஷான் ஆகியோர் 2015ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்ட கனிஷ்ட ரக்பி அணியில் விளையாடியிருந்தனர். அத்துடன் இந்த சுற்றுப்பயணம் இவர்களுக்கு சிறந்த அனுபவங்களை வழங்கும்.
அணித் தலைவர் ரொஷான் வீரரத்னவுக்கு இளம் மற்றும் அனுபவமுள்ள வீரர்களைக் கொண்ட கலவையுடன் கூடிய அணி கிடைத்துள்ளது. எனினும் முக்கிய வீரரான தனுஷ்க ரஞ்சன் வைரஸ் காய்ச்சலால் சுகவீனமுற்றிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறெனினும், எதிர்வரும் வாரத்துக்கு முன்னதாக நலம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில், முதல் போட்டியாக இலங்கை ரக்பி அணி, பிலிப்பைன்ஸ் அணியுடன் எதிர்வரும் 14ஆம் திகதி மோதவுள்ளதுடன், அதனையடுத்து, 17ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சிய அணியுடன் மோதவுள்ளது. அத்துடன், 20ஆம் திகதி போட்டியை நடாத்தும் மலேசிய அணியுடன் மோதவுள்ளது.
இலங்கை ரக்பி அணி மீது முழு நம்பிக்கை வைத்துள்ள பிஜி பயிற்றுவிப்பாளர்
இலங்கை ரக்பி குழாம்
கண்டி விளையாட்டு கழகத்திலிருந்து – ரொஷான் வீரரத்ன (அணித் தலைவர்), பாசில் மரிஜா, தனிஷ்க ரஞ்சன், லவங்க பெரேரா, ரிச்சர்ட் தர்மபால, ஜேசன் திசாநாயக்க, திலின விஜேசிங்க, கனுக்க திசாநாயக்க, சுஹிறு அந்தனி
ஹெவலொக் விளையாட்டு கழகத்திலிருந்து – துஷ்மந்த பிரியதர்ஷன, ஷரோ பெர்னாண்டோ, பிரசாத் மதுசங்க, உமேஷ் மதுஷான், அஷான் டார்லிங், நிஷோன் பெரேரா, நிரோஷன் பெர்னாண்டோ
கடற்படை விளையாட்டு கழகத்திலிருந்து – சஜித் சாரங்க, சத்யா ரணதுங்க, சானக்க சந்திமால் லீ கீகள், ரிச்சி தர்மபால
CR & FC கழகத்திலிருந்து – ஒமல்க குணரத்ன, தாரிக் சாலிஹ்
இராணுவப்படை விளையாட்டு கழகத்திலிருந்து – அசோக ஜயலால்
பொலிஸ் விளையாட்டு கழகத்திலிருந்து – ஜோயல் பெரேரா
பயிற்றுவிப்பாளர் – பிரெட்டி வேர்புல்லா
உதவி பயிற்றுவிப்பாளர் – ரஜீவ் பெரேரா
முகாமையாளர் – ரொஹான் சிந்தக