இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக செயற்பாட்டு முகாமையாளராக அருண டீ சில்வா

349
Aruna De Silva

இவ்வாண்டு, இந்தியா மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள சுற்றுப் பயணத்துக்கான செயல்பாட்டு முகாமையாளராக அருண டீ சில்வாவை இலங்கை கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.   

.சி.சி. இன் ஒரு நாள் தரவரிசையில் மேலும் வீழ்ச்சி கண்டுள்ள இலங்கை

அருண டீ சில்வா, இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்த அதேவேளை, 2016ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசிய இளையோர் கிண்ணம் மற்றும் அண்மையில் நடைபெற்ற 2017ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி மகளிர் கிண்ணத் தகுதி காண் போட்டிகளை ஒழுங்கு செய்து வெற்றிகரமாக நடாத்தியிருந்தார்.

அந்த வகையில், கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி நிறைவேற்று குழுவால், இலங்கை கிரிக்கெட் சபையின் அங்கமாக இயங்கி வரும் நிர்வாகம் மற்றும் செயற்பாட்டுப் பிரிவின் இடைவெளியை நிரப்புவதற்காக இவர்  அழைக்கப்பட்டிருந்தார்.

அதன்படி, அவர் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில், நிறைவேற்று குழு அங்கத்துவத்திலிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக பிரியந்த சொய்சா ஏகமனதாக நிர்வாகக் குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள குறித்த இரண்டு அணிகளினதும் சுற்றுப் பயணங்களுக்கான மேம்பட்ட வசதிகளை உறுதிசெய்யும் வகையில் சில்வா பொறுப்புகளை உடனடியாக ஏற்கவுள்ளார்.

மாகாண மட்ட அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி

கடந்த இரண்டு தசாப்த காலமாக நிர்வாகத் துறையில் முகாமை மேலாளராக இருந்து அனுபவம் பெற்றுள்ள அருண டீ சில்வா, கடந்த 6 மாதங்களுக்குள் இலங்கையில் நடைபெற்ற இரண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு அவற்றை வெற்றிகரமாக நிறைவு செய்தார். அதற்காக ஆசிய கிரிக்கெட் சபை மற்றும் சர்வதேச கிரிக்கெட் சபையின்  நன்மதிப்பையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், பிரதம நிர்வாக குழுவில் இணைந்துகொண்ட பிரியந்த சொய்சா, இதற்கு முன்னதாக 1995/1996ஆம் ஆண்டு, இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று குழுவில் பணியாற்றியிருந்ததோடு மீண்டும் 2004/2005ஆம் ஆண்டிலும் சேவையாற்றியிருந்தார்.