கவிந்து இஷானின் ஹட்ரிக் கோலினால் வீழ்ந்தது மாத்தறை சிட்டி

707
Kavindu Ishan

இந்த பருவகால FA கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிகளுக்கான மாத்தறை சிட்டி விளையாட்டுக் கழகத்தின் கனவுகளை தகர்த்த இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம், கவிந்து இஷானின் ஹட்ரிக் கோல் மூலம் 3-0 என வெற்றி பெற்றுள்ளது.

கிறிஸ்டல் பெலசை வீழ்த்தி காலிறுதிக்குள் தடம் பதித்த ஜாவா லேன்

வெலிசரை கடற்படை விளையாட்டு மைதானத்தில் இந்தப் போட்டி ஆரம்பமானதிலிருந்து சில நிமிடங்களுக்கு இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. மாத்தறை அணியின் பின்களத் தடுப்பினூடாக சதுரங்க பெர்னாண்டோ உள்ளனுப்பிய பந்தினை கவிந்து இஷான் கோலாக மாற்றினார். எனினும் ஒப் சைட் காரணமாக அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து போட்டி முழுவதும் ஆதிக்கம் செல்லுத்தியது இலங்கை விமானப்படை அணி. சம்பத் பெரேரா தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் மாத்தறை சிட்டி அணியின் வாய்ப்புக்களைத் தடுத்து வந்தார்.

போட்டியின் 11ஆவது நிமிடம் ஹர்ஷ பெர்னாண்டோவின் நகர்த்தலின் மூலம் கிடைக்கப்பெற்ற பந்தினை கவிந்து இஷான் கோலாக மாற்றி விமானப்படை அணியை முன்னிலைப் படுத்தினார்.

அதனையடுத்து, மூன்று நிமிடங்களுக்குப் பின்னர் கெலும் பெரேரா மூலம் மீண்டும் கிடைக்கப்பெற்ற பந்தினை இரண்டாவது கோலாக மாற்றினார் கவிந்து இஷான்.

அந்த வகையில் முதல் பாதி நேரத்தில் இலங்கை விமானப் படை அணி இரண்டு கோல்களால் முன்னிலை பெற்றிருந்தது.

முதல் பாதி: விமானப்படை விளையாட்டுக் கழகம் 2-0 மாத்தறை சிட்டி விளையாட்டுக் கழகம்

முதல் பாதி நேரத்தில் பின்தங்கியிருந்த மாத்தறை அணி இரண்டாவது பாதி நேரத்தில் முதல் கோலைப் பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்கியது. எனினும் அவ்வணிக்கு கிடைக்கப்பெற்ற இலகுவான வாய்ப்பொன்றினை பிரையன் வீரப்பிள்ளை நழுவ விட்டார்.

காலிறுதி மோதலுக்குள் நுழைந்த ராணுவப்படை மற்றும் ரினௌன் அணிகள்

அதையடுத்து, விமானப்படை அணிக்கும் பல வாய்ப்புகள் கிடைக்கப்பெற்ற போதிலும் அவை தவறவிடப்பட்டன. போட்டியின் 89ஆம் நிமிடம் கவிந்து இஷான் மூன்றாவது கோலைப் பெற்று தனது மற்றொரு ஹட்ரிக்கை பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் களநடுவர் எஸ்.எம் ஜெப்ரி போட்டி நிறைவடைவதற்கான தனது இறுதி சைகையைக் காண்பிக்க, மாத்தறை சிட்டி அணியின் காலிறுதிக் கனவுகள் படைத் தரப்பினரால் தகர்க்கப்பட்டன.

முழு நேரம்: விமானப்படை விளையாட்டுக் கழகம் 3 – 0 மாத்தறை சிட்டி விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகன்கவிந்து இஷான் (விமானப்படை விளையாட்டுக் கழகம்)  

இப்போட்டி குறித்து கருத்து தெரிவித்த இலங்கை விமானப்படையின் பயிற்றுவிப்பாளர் சம்பத் பெரேரா, இது ஒரு நோக் அவுட் போட்டித் தொடராக இருப்பதால் போட்டிக்கு போட்டி வேறுபட்ட வியூகங்களுடன் அணியை களமிறக்குகின்றேன். அந்த வகையில் இந்தப் போட்டிக்கான வியூகம் மிகவும் சாதகமான பெறுபேறுகளை எமக்கு அளித்தது.

அத்துடன், வெப்பமான காலநிலையில் எதிர்பார்த்ததை போலவே எனது அணி சிறப்பாக விளையாடியது. எங்களுடைய அடுத்த பயிற்சியின்போது அடுத்த போட்டிக்கான வியூகத்தை மாற்றி அமைப்போம் என்றார்.

மாத்தறை சிட்டி அணியின் பயிற்றுவிப்பாளர் T.H.S இந்திக்க ThePapare.com இடம் கருத்து தெரிவிக்கையில், ”என்னுடைய அணி திருப்தியடையக்கூடிய திறமைகளை வெளிப்படுத்தியிருந்தது. ஆனால், முழு அளவில் திறமைகளை வெளிப்படுத்தவில்லை. அத்துடன், மிக திறமையான இலங்கை விமானப்படை போன்ற அணிகளுடன் விளையாடும்பொழுது முழு அளவில் திறமைகளை வெளிப்படுத்தியிருக்க  வேண்டும்.  எங்களுடைய தவறுகள் இரண்டு கோல்களை அவர்களுக்கு வழங்கி அவர்களை முன்னிலைப் படுத்த உதவியது. எனினும், எதிர்வரும் போட்டிகளில் எங்களுடைய தவறுகளை திருத்தி பருவகால போட்டிகளில் சிறப்பாக செயல்பட எதிர்பார்கின்றோம் என்றார்.

கோல் பெற்றவர்கள்

விமானப்படை விளையாட்டுக் கழகம் – கவிந்து இஷான் 11’, 14’, 89’

மஞ்சள் அட்டை

மாத்தறை சிட்டி விளையாட்டுக் கழகம் – S.K. ஆரச்சிகே 30’