இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையில், எதிர்வரும் ICC சம்பியன் கிண்ண போட்டிகளை இலக்காக கொண்டு நடைபெற்று வருகின்ற மாகாண ரீதியிலான ஒருநாள் போட்டித் தொடரில் நேற்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெற்றன.
அந்த வகையில், கொழும்பு மற்றும் காலி அணிகளுக்கு இடையிலான போட்டியில், திசர பெரேராவின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் கொழும்பு அணி வெற்றியை சுவீகரித்தது. அதேவேளை கண்டி அணித் தலைவர் சாமர கப்புகெதரவின் அதிரடி சதத்தின் உதவியினால் கண்டி அணி 39 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடர்ந்தும் புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது.
கொழும்பு எதிர் காலி
இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பு ஆர். பிரமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி அணித் தலைவர் உபுல் தரங்க முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
அந்த வகையில் முதலில் துடுப்பாடக் களமிறங்கிய காலி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சமரவிக்ரமவை வெறும் மூன்று ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து அதிர்ச்சியளித்தார் கொழும்பு அணியின் சசித்திர சேனாநாயக்க. எனினும், அதனையடுத்து அணித் தலைவர் உபுல் தரங்கவுடன் இரண்டாம் விக்கெட்டுக்காக இணைந்து கொண்ட திமுத் கருணாரத்ன நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 174 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுகொண்டார்.
84 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 78 ஓட்டங்களை பெற்றிருந்த போது துரதிஷ்டவசமாக ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்து சென்றார். அதனையடுத்து களமிறங்கிய தனஞ்சய டி சில்வாவும் நிதானமாக துடுப்பாடி அணித் தலைவர் உபுல் தரங்கவுடன் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த பங்களிப்பு வழங்கினார்.
சிறப்பாக துடுப்பாடிய உபுல் தரங்க 113 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்கலாக 101 ஓட்டங்களை பெற்றிருந்த போது வணிந்து ஹசரங்கவின் பந்து வீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அதையடுத்து களமிறங்கிய ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்து சென்றமையினால் காலி அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 299 ஓட்டங்களைக் குவித்தது.
எனினும், காலி அணி சார்பாக இறுதி வரை ஆட்டமிழக்காமல் துடுப்பாடிய தனஞ்சய டி சில்வா 6 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்களை விளாசினார். கொழும்பு அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய விஷ்வ பெர்னாண்டோ 56 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதனையடுத்து, 299 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய கொழும்பு அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ருவிந்து குணசேகற ஓட்டமெதுவும் பெறாமலேயே சுரங்க லக்மாலின் பந்துவீச்சில் நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழந்து சென்றார்.
அதனையடுத்து களமிறங்கிய அஞ்சலோ ஜயசிங்க, டில்ஷான் முனவீரவுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 104 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டார். அதிரடியாக துடுப்பாடிய டில்ஷான் முனவீர 54 பந்துகளை மாத்திரமே எதிர்கொண்டு 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 86 ஓட்டங்களுடன் மலிந்த புஷ்பகுமாரவின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து களம் வந்த ஷெஹான் ஜயசூரிய, கித்ருவன் விதானகே மற்றும் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் இம்முறை கொழும்பு அணி சார்பாக குறைந்த ஓட்டங்களே பெற்றுக்கொண்டனர்.
அந்த வகையில், அணியின் ஓட்ட எண்ணிக்கை 40.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ஓட்டங்களாகக் காணப்பட்டது. கொழும்பு அணி வெற்றியீட்ட 9.2 ஓவர்களில் 72 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில், களமிறங்கிய அதிரடி துடுப்பாட்ட வீரர் திசர பெரேரா ஆட்டமிழக்காமல் 30 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 42 ஓட்டங்களை விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு வழி நடத்தினார். அதேநேரம் 10 பந்துகளில் 17 ஓட்டங்களை விளாசி பந்து வீச்சாளரான சச்சித்ர சேனாநாயக்க கொழும்பு அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்தார்.
அந்த வகையில், ஒரு ஓவர் எஞ்சிய நிலையில், 301 ஓட்டங்களைப் பெற்று மூன்று விக்கெட்டுகளால் கொழும்பு அணி வெற்றியீட்டியது.
ஸ்கோர் விபரம்
Galle - Batting | Toss: Galle | |
---|---|---|
Sadeera Samarawickrama | c Perera b Senanayake | 3 (5) |
Upul Tharanga | c Sub b Hasaranga | 101 (113) |
Dimuth Karunarathne | Run Out | 78 (84) |
Dhananjaya De Silva | Not Out | 52 (43) |
Chathuranga De Silva | b Jayasuriya | 4 (7) |
Dasun Shanaka | c Vithanage b Fernando | 25 (22) |
Seekkuge Prasanna | c Hasaranga b Vandersay | 7 (5) |
Chamika Karunarathne | c Vithanage b Fernando | 1 (3) |
Suranga Lakmal | Run Out | 11 (14) |
Akila Dhananjaya | Run Out | 2 (3) |
Malinda Pushpakumara | Not Out | 1 (2) |
Total | Extras (14) | 299/9 (50 overs) |
Colombo - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Vishwa Fernando | 9 | 0 | 56 | 2 |
Sachithra Senanayake | 8 | 0 | 26 | 1 |
Thisara Perera | 7 | 0 | 31 | 0 |
Shehan Jayasuriya | 9 | 0 | 58 | 1 |
Jeffrey Vandersay | 10 | 0 | 57 | 1 |
Dilshan Munaweera | 3 | 0 | 27 | 0 |
Wanindu Hasaranga | 4 | 0 | 37 | 1 |
Colombo - Batting | Toss: Galle | |
---|---|---|
Dilshan Munaweera | b Pushpakumara | 86 (54) |
Ruvindu Gunasekara | b Lakmal | 0 (2) |
Angelo Jayasinghe | c Samarawickrama b Lakmal | 70 (99) |
Kithruwan Vithanage | b Prasanna | 27 (39) |
Dinesh Chandimal | c Samarawickrama b Prasanna | 17 (26) |
Shehan Jayasuriya | c C De Silva b Shanaka | 30 (28) |
Wanindu Hasaranga | c Prasanna b Dhananjaya | 5 (6) |
Thisara Perera | Not Out | 42 (30) |
Sachithra Senanayake | Not Out | 17 (10) |
Jeffrey Vandersay | ||
Vishwa Fernando | ||
Total | Extras (6) | 300/7 (49 overs) |
Galle - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Suranga Lakmal | 8 | 0 | 61 | 2 |
Chamika Karunarathne | 7 | 0 | 52 | 0 |
Malinda Pushpakumara | 9 | 0 | 54 | 1 |
Seekkuge Prasanna | 10 | 0 | 59 | 2 |
Chathuranga De Silva | 4 | 0 | 24 | 0 |
Akila Dhananjaya | 10 | 1 | 41 | 1 |
Dasun Shanaka | 1 | 0 | 8 | 1 |
கண்டி எதிர் தம்புள்ளை
இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி அணித் தலைவர் சாமர கபுகெதர முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
அந்த வகையில், முதலில் துடுப்பாடக் களமிறங்கிய கண்டி அணி முதலாவது விக்கெட்டினை வெறும் 18 ஓட்டங்களுக்கு பறிகொடுத்த போதிலும், இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்து கொண்ட சாமர கபுகெதர மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்க ஆகியோர் தங்களுக்கிடையில் 114 ஓட்டங்களை பகிர்ந்து கொண்ட அதேவேளை அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றனர்.
தனுஷ்க குணதிலக்க 75 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது துரதிஷ்டவசமாக அஷான் ப்ரியஞ்சனின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினார். அதேநேரம் இறுதி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக துடுப்பாடிய சாமர கபுகெதர 50 பந்துகளை மாத்திரமே எதிர்கொண்டு 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 105 ஓட்டங்களை விளாசினார். அத்துடன் இத்தொடரில் மொத்தமாக 287 ஓட்டங்களை குவித்து துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் முன்னிலையில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதி ஓவர்களின் போது களமிறங்கியிருந்த சசித் பத்திரன 16 பந்துகளை மாத்திரமே எதிர்கொண்டு, 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உள்ளடங்கலாக அதிரடியாக 25 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட எண்ணிகையை உயர்த்தினார்.
இறுதியில் கண்டி அணி குறித்த 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 323 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. கண்டி அணி சார்பாக சாமர கபுகெதர ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களையும் தனுஷ்க குணதிலக 75 ஓட்டங்களையும் குவித்தனர்.
தம்புள்ளை அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய அஷான் ப்ரியஞ்சன் 32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதனையடுத்து, கடின வெற்றி இலக்கான 324 ஓட்டங்களைப் பெற களமிறங்கிய தம்புள்ளை அணி, 48.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 284 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக பாணுக்க ராஜபக்ஷ 81 ஓட்டங்களை அதிக பட்ச ஓட்டங்களாக பதிவு செய்தார்.
மேலும் குசல் மென்டிஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் அரைச்சதங்கள் கடந்த போதிலும், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர்.
கண்டி அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய சரித் அசலங்க 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் நுவன் பிரதீப் 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக சாமர கபுகெதர தெரிவு செய்யப்பட்டார்.
ஸ்கோர் விபரம்
Kandy - Batting | Toss: Kandy | |
---|---|---|
Danushka Gunathilaka | LBW b Priyanjan | 75 (75) |
Dilhan Cooray | ct & b Priyanjan | 43 (64) |
Sandun Weerakkody | c K Perera b Priyanjan | 10 (15) |
Hashan Dumindu | c K Mendis b Priyanjan | 22 (30) |
Charith Asalanka | c & b Perera | 35 (50) |
Chamara Kapugedara | Not Out | 105 (50) |
Sachith Pathirana | Not Out | 25 (16) |
Chathura Peiris | ||
Amila Aponso | ||
Lahiru Gamage | ||
Nuwan Pradeep | ||
Total | Extras (8) | 323/5 (50 overs) |
Dambulla - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Nuwan Kulasekara | 9 | 0 | 56 | 0 |
Asitha Fernando | 10 | 0 | 72 | 0 |
Bhanuka Rajapaksha | 1 | 0 | 16 | 0 |
Dilruwan Perera | 10 | 0 | 59 | 1 |
Lahiru Kumara | 5 | 0 | 59 | 0 |
Ashan Priyanjan | 10 | 0 | 32 | 4 |
Milinda Siriwardena | 5 | 1 | 26 | 0 |
Dambulla - Batting | Toss: Kandy | |
---|---|---|
Kusal Janith Perera | b Aponso | 56 (53) |
Udara Jayasundera | b Asalanka | 12 (22) |
Kusal Mendis | LBW b Pathirana | 59 (65) |
Bhanuka Rajapaksha | c Asalanka b Pradeep | 81 (72) |
Harsha Cooray | st Weerakkody b Asalanka | 0 (12) |
Milinda Siriwardena | st Weerakkody b Asalanka | 14 (14) |
Ashan Priyanjan | c Dumindu b Asalanka | 0 (3) |
Dilruwan Perera | c Peiris b Gamage | 36 (33) |
Nuwan Kulasekara | c Pathirana b Pradeep | 10 (7) |
Lahiru Kumara | Not Out | 3 (4) |
Asitha Fernando | b Pradeep | 1 (4) |
Total | Extras (12) | 284/10 (48.3 overs) |
Kandy - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Lahiru Gamage | 9 | 0 | 68 | 1 |
Chathura Peiris | 4 | 0 | 36 | 0 |
Nuwan Pradeep | 9.3 | 0 | 65 | 3 |
Charith Asalanka | 10 | 1 | 27 | 4 |
Amila Aponso | 6 | 0 | 30 | 1 |
Sachith Pathirana | 6 | 0 | 29 | 1 |
Dilhan Cooray | 4 | 0 | 29 | 0 |