பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் எதிர்வரும் ஜூன் மாத ஆரம்பத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆரம்பமாகவுள்ள சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவிருக்கும் இலங்கை அணி, தியதலாவ மற்றும் கண்டியில் ஆறு நாட்கள் கொண்ட கடும் செயற்திறன் மிக்க பயிற்சி முகாமொன்றில் பங்கேற்றுள்ளது.
த்ரில்லர் வெற்றியுடன் தொடரை சமப்படுத்திய இலங்கை கனிஷ்ட அணி
நடைபெற்று முடிந்த இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய கனிஷ்ட அணிகளுக்கு இடையிலான இளையோர் ஒரு நாள் தொடரின்..
தேசிய அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், இது இலங்கை கிரிக்கெட் வாரியம் மூலம் தமது அணிக்கு கிட்டிய ஒரு வரப்பிரசாதம் என்றவாறு தனது அணி வீரர்கள் பங்கேற்கவுள்ள இந்த பயிற்சி முகாம் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.
“ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து நிற்கும் எமது இலங்கை அணிக்கு நடைபெறவிருக்கும் ஐ.சி.சி. இன் சம்பியன் கிண்ணத் தொடரானது முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. அதி திறமைசாலிகளான எமது அணியின் இளம் வீரர்கள், உயர்தரமான கிரிக்கெட்டில் உள்ள சவால்களையும், சிறந்த கிரிக்கெட் விளையாட்டினை வெளிப்படுத்த தேவையானவற்றையும் தற்போது கற்று, அவற்றை சரியான முறையில் எதிர்கொள்ளவும் பழகி வருகின்றனர்.
இந்த பயிற்சி முகாம் நிச்சயமாக எமது வீரர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும். அவர்களின் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பாகவும் அமையும் என்பதிலும் சந்தேகமில்லை. இவற்றினால், வரும் சம்பியன் கிண்ண சுற்றுத்தொடரில் நாம் பயனுள்ள ஆட்டத்தினை வெளிக்காண்பிக்க முடியும் “ என்று மெதிவ்ஸ் தெரிவித்தார்.
இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளரான கிரகம் போர்டும் இப்படியான ஒரு பயிற்சி முகாமை ஏற்பாடு செய்திருந்த இலங்கை கிரிக்கெட் வாரியத்தினை பாராட்டியுள்ளார். மேலும், தமது இளம் அணி சம்பியன் கிண்ணத்தில் பங்கேற்கும் எந்த அணியினரையும் இலகுவாகத் தோற்கடிக்கக் கூடிய ஒரு அணி எனவும், அதற்கு தமது அணிக்கு தாம் வழங்க வேண்டியது ஒரு சிறந்த ஊக்கமே என்றும் கருத்து வெளியிட்டிருந்தார்.
“எங்களுக்கு வளங்களில் எந்த குறைபாடுகளும் இல்லை. ஒரு சிறந்த மனநிலையை உருவாக்குவதில் தான் முயற்சிக்க வேண்டியுள்ளது“ என்றார்.
இந்த நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த தேசிய அணியின் முகாமையாளரும் அணித்தேர்வாளர்களில் ஒருவருமான அசங்க குருசிங்க, ”நாம் தேர்வு செய்திருக்கும் கண்டி மற்றும் தியத்தலாவ ஆகிய இடங்களின் காலநிலை, கிட்டத்தட்ட எமது அணி விளையாடப்போகும் இங்கிலாந்து நாட்டின் காலநிலைகளை ஒத்தது. எனவே, இவ்வாறானதொரு நிலைமையில் எமது வீரர்களை ஆயத்தப்படுத்துவது பயனளிக்ககூடியது. மேலும், கண்டி நகரில் வைத்து வீரர்களுக்கு வசதிகளை ஏற்பாடு செய்து தருவது சிறந்த விடயமாகும்” என்றார்.
இலங்கை அணியின் ஸ்கொட்லாந்து சுற்றுப்பயணம் எதற்காக?
எதிர்வரும் மே மாதத்தில் ஸ்கொட்லாந்திற்கு சுற்றுப்பயணம்…
“இலங்கை அணி எட்டு நாட்களுக்கு முன்னதாகவே இங்கிலாந்திற்கு புறப்படுகின்றது. இதன் மூலம் ஸ்கொட்லாந்தின் தேசிய அணியுடன் இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளது. இப்பயணத்திற்கான செலவுகளை பொறுப்பேற்றிருக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம், இந்த பயிற்சிப் போட்டிகள் மூலம் இங்கிலாந்து நாட்டின் மைதான நிலைமைகளை சரிவர அவதானித்து, அதன்மூலம் இலங்கை அணி சிறப்பாக செயற்பட முடியும் என்பதனை எதிர்பார்க்கின்றது “ என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் ஒரு புறம் இருக்க, இதற்கு மேலதிகமாக சம்பியன் கிண்ணத்தில் பங்குபற்றும் அனைத்து அணிகளுக்குமான பயிற்சிப் போட்டிகளையும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.