மதுசங்கவின் இறுதி நிமிட கோலினால் சிவில் பாதுகாப்பு கழகம் வெற்றி!

236
Old Mezadinians

தற்பொழுது நடைபெற்று வரம் FA கிண்ண தொடரின் இரண்டாவது சுற்றான நொக் அவுட் சுற்றுப் போட்டியில் மோதிக்கொண்ட ஓல்ட் மொசனோடியன்ஸ் விளையாட்டு கழகம் மற்றும் சிவில் பாதுகாப்பு கழக அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டியில் சிவில் பாதுகாப்பு கழகம் 3-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

சம வலிமைமிக்க இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி கந்தான, டி மெசனொட் கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது. ஆரம்பம் முதலே வேகத்துடன் செயல்பட்ட ஓல்ட் மெசனோடியன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு போட்டியின் நான்காவது நிமிடம் கிடைக்கப்பெற்ற வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட கசுன் நந்திக்க, கோல் ஒன்றினைப் பெற்று அணியை முன்னிலைப்படுத்தினார்.

பெனால்டி வெற்றியினால் FA கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது செரண்டிப்

அதனையடுத்து, இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டதால் இரு அணிகளுக்கிடையே முறுகல் நிலை ஏற்பட்டது. அந்த வகையில் போட்டியின் விதி முறைகளை மீறியதன் காரணாமாக 15ஆவது நிமிடம் கசுன் நந்திக்கவுக்கு மஞ்சள் அட்டை காண்பித்து நடுவர் எச்சரிக்கை செய்தார்.

தொடர்ந்து ஓல்ட் மெசனோடியன்ஸ் அணிக்கு சில வாய்ப்புகள் கிடைக்கப்பெற்ற போதிலும், அவையனைத்தும் வீணடிக்கப்பட்டன. எனினும், போட்டியின் முதல் பாதி நேரம் நிறைவடைய சில நிமிடங்களே எஞ்சிய நிலையில், போட்டியின் 40ஆவது நிமிடம் W.D.D. வீரமந்த்ரி, தனக்கு கிடைத்த வாய்ப்பினை கோலாக மாற்றி போட்டியை சமநிலைப்படுத்தினார்.

முதல் பாதி: ஓல்ட் மெசனோடியன்ஸ் விளையாட்டுக் கழகம் 01 – 01 சிவில் பாதுகாப்பு கழகம்

இரண்டாம் பாதி நேரம் ஆரம்பித்து சில நிமிடங்களுக்குள் சாரிந்து சம்பத் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு சிவில் பாதுகாப்பு கழகம் சார்ப்பாக இரண்டாவது கோலை பதிவு செய்து, அணியை முன்னிலைப் படுத்தினார். தொடர்ந்தும் கோல்களை அடிக்க முனைந்த இரு அணிகளுக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்ற போதிலும், அவை பயனற்றுப் போயின.

சுபுன் குமாரவுக்கு 73ஆவது நிமிடம் கிடைக்கப் பெற்ற வாய்ப்பை, அவர் கோலாக மாற்றி போட்டியை சமநிலைப் படுத்தினார். எனினும், அவர்களுடைய மகிழ்ச்சி நீண்ட நேரத்துக்கு நிலைக்கவில்லை.

அதற்கு 5 நிமிடங்கள் கடந்த நிலையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட N.U. மதுசங்க அதன்மூலம் கோல் ஒன்றைப் பெற்று, சிவில் பாதுகாப்பு அணியை முன்னிலைப்படுத்தினார்.

ஜனாதிபதிக் கிண்ண அரையிறுதிக்குள் ஜாவா லேன் : செளண்டர்சிடம் கோட்டை விட்ட மொறகஸ்முல்ல

கோல் கணக்கில் முன்னிலை வகித சிவில் பாதுகாப்பு அணி இறுதி நிமிடங்களில் பந்துப் பரிமாற்றங்களின் மூலம் நேரத்தை வீணடித்து, வெற்றி வாய்ப்பினை இறுதி நேரம் வரை தக்க வைத்துக்கொண்டது. ஓல்ட் மெசனோடியன்ஸ் பல்வேறான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எதிரணியின் தடுப்புக்களை அவர்களால் ஊடுறுக்க முடியவில்லை.

முழு நேரம் : ஓல்ட் மெசனோடியன்ஸ் விளையாட்டுக் கழகம் 02 – 03 சிவில் பாதுகாப்பு கழகம்

போட்டியின் பின்னர் ThePapare.com இற்கு சிவில் பாதுகாப்பு கழகத்தின் பயிற்றுவிப்பாளர் B.L. பிரியங்க பிரிஸ் பிரத்தியேகமாகக் கருத்து தெரிவிக்கையில், ”எங்களிடம் பல சிறந்த வீரர்கள் இருந்தனர். எனினும் அவர்களில் சிலர் எமது கழகத்திலிருந்து பிரிந்து பொலிஸ், கடற்படை விளையாட்டுக் கழகங்களுடன் இணைந்து கொண்டனர். எஞ்சிய வீரர்களுடனேயே இந்த போட்டிக்கு வந்து வெற்றியீட்டினோம்.

எதிர்காலத்தில் இந்த அணியை மேலும் மேம்படுத்த எதிர்பார்த்துள்ளோம். உண்மையில் இது ஒரு நல்ல வெற்றி, பல போட்டிகளில் தோல்யியுற்ற நிலையில் மீண்டுள்ளமை மகிழ்ச்சியை தருகிறது. எதிர்வரும் போட்டிகளிலும் வெற்றி பெறவே பார்த்துள்ளோம்” என்றார்.

அதேநேரம், தமது தோல்வி குறித்து கருத்து தெரிவித்த ஓல்ட் மெசனோடியன்ஸ் விளையாட்டுக் கழக பயிற்றுவிப்பாளர் லக்ஷமன் குரே, ”இந்த போட்டிக்கு முன்னதாக எங்களால் சரியாக பயிற்சிகளில் ஈடுபட முடியவில்லை. அத்துடன் வீரர்களிடையே போதுமான புரிந்துணர்வு இருக்கவில்லை.

மேலும், நிறைய கோல் வாய்ப்புக்கள் வீணடிக்கப்பட்டமையும் இந்த போட்டியில் நாம் தோல்வியுற காரணமாக அமைந்தது. இந்த அணியை டிவிசன் 1 பிரிவுக்கே தாயார் செய்திருந்தோம். எதிர்காலத்தில் கடுமையான பயற்சிகளை மேற்கொண்டு அணியை மேம்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.

கோல் பெற்றவர்கள்  

ஓல்ட் மெசனோடியன்ஸ் விளையாட்டுக் கழகம் கசுன் நான்திக்க  4’, சுபுன் குமார 73’

சிவில் பாதுகாப்பு கழகம் W.D.D. வீரமந்த்ரி 40’, சாரிந்து சம்பத் 51’, N.U. மதுசங்க 78’