ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்கு இடையில் நடைபெறும் தொடர்களின் தீர்மானம் மிக்க சமீபத்திய போட்டி முடிவுகளின் ஓர் அலசல்
Serie A கால்பந்து கால்பந்து தொடர்
Serie A போட்டியொன்றில் ரோமா கழகத்தினை 2-1 என வீழ்த்தியிருக்கும் இத்தாலியின் நபோலி கழகம் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் 16ஆவது சுற்றில், தமது அணிக்கெதிராக ரியல் மட்ரிட் அணியுடன் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் திறம்பட செயற்பட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது.
Serie A தொடரில் அதிக கோல்களினைப் பெற்றிருக்கும் அணியான நபோலி கழகம் எதிர்வரும் போட்டியில், கடந்த வருடத்தின் சம்பியன் அணியான ரியல் மட்ரிட்டை வீழ்த்தும் வல்லமை மிக்க அணிகளில் ஒன்றாக இருக்கின்றது.
நபோலி கழகத்தின் பிரதான பயிற்றுவிப்பாளர், அவரது அணியின் மரேக் ஹம்சேக், ட்ரைஸ் மெர்டன்ஸ், ஜோஸ் கலிஜோன்ஸ் மற்றும் லோரென்சோ இன்சைக்ன் ஆகியோர் எதிர்வரும் போட்டியில் சிறப்பாட்டத்தினை வெளிப்படுத்துவர் என்னும் நம்பிக்கையினை வெளியிட்டுள்ளார்.
சனிக்கிழமை நடைபெற்ற Serie A போட்டியில், 2-1 என ரோமா கழகத்தினை நபோலி வீழ்த்தியிருந்தது. எனினும், இத்தொடரின் இறுதி நேரத்தில் கோலினைப்பெற்ற ரோமா கழகம் அத்தொடரின் புள்ளிகள் அட்டவணையில் இரண்டாம் இடத்தினைப் பெற்று இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இத்தொடரில் நேற்று நடைபெற்ற மற்றுமொரு போட்டியில், 8 நிமிட இடைவெளிக்குள் அசத்தல் ஆட்டத்தினை வெளிக்காட்டி ஹட்ரிக் கோல் போட்ட அன்ட்ரியா பெலோட்டி, பலேர்மோ அணியினை டொரினோ கழகம் வீழ்த்தியுள்ளது.
அத்துடன், இத்தொடரில் அதே நாளில் இடம்பெற்ற போட்டியொன்றில் கடந்த வருட சம்பியனான ஜுவென்டெஸ் அணி மற்றும் உடினீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என சமநிலை அடைந்துள்ளது.
இப்போட்டியில், முதற்தடவையாக இந்த பருவகாலத்திற்குரிய Serie A போட்டியில் சமநிலை ஒன்றினைப் பெற்றுக் கொண்ட ஜூவன்டஸ் அணியில் லியனர்டோ பொனுக்கி இரண்டாம் பாதியில் தனது அணிக்காக கோல் ஒன்றினை பெற்றுத் தந்திருந்தார்.
பிரிமியர் லீக் தொடர்
நேற்று (5) நடைபெற்று முடிந்த போட்டிகளில், அபார வெற்றிகளை சுவீகரித்து இருக்கும் டொட்டேன்ஹம் ஹொட்ஸ்பர் கழகம் மற்றும் மன்செஸ்டர் சிட்டி கழகம் ஆகியவை ஆங்கில பிரிமியர் லீக் தொடரின், சம்பியன் தொடரின் வெற்றியாளர் யார் எனத் தீர்மானிக்கும் பந்தயத்தில் இன்னும் இருக்கின்றனர் என்பதனை செல்ஸி அணிக்கு நினைவுபடுத்தியுள்ளனர்.
தொடரின் முன்னனி அணிகளான, மன்செஸ்டர் யுனைட்டட் கால்பந்து கழகம் மற்றும் ஆர்சனல் கழகம் ஆகியவை சனிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் பின்னடைவினை சந்தித்த காரணத்தினால், ஹர்ரிக்கேன் பெற்றுக்கொண்ட இரட்டை கோல்களுடன் 3-2 என எவர்ட்டன் கழகத்தினை வீழ்த்தி தொடரில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டாம் இடத்தினைப் பெற்று ஸ்பர்ஸ் கழகம் முன்னேறுகின்றது.
அத்துடன், சன்லேன்ட் கழகத்திற்கு எதிரான போட்டியொன்றில், சேர்ஜியோ அகுய்ரோ மற்றும் லேரொய் சேன் ஆகியோரின் கோல்கள் உடன் 2-0 என வெற்றி பெற்ற மன்செஸ்டர் சிட்டி கழகம் தொடரில், புள்ளிகள் அடிப்படையில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுள்ளது.