கடின போராட்டத்துக்கு மத்தியில் லக்ஷித ரசாஞ்சன ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 113 ஓட்டங்களின் மூலம் ஆனந்த மற்றும் நாலந்த கல்லூரிகளுக்கு இடையிலான 88ஆவது பெரும் சமர் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.
நேற்றைய தினம், SSC விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்த ஆனந்த மற்றும் நாலந்த கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், 16 ஓட்டங்களால் முன்னிலை வகித்த நிலையில் இறுதி நாளான இன்று தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பாட்டத்தை தொடர்ந்த ஆனந்த கல்லூரி, 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ஓட்டங்களை பெற்று 46 ஓட்டங்களால் முன்னிலை வகித்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
அதேநேரம் பந்து வீச்சில் திறமையை வெளிப்படுத்திய கலன பெரேரா முதலில் அனுபவம் வாய்ந்த அதிரடி துடுப்பாட்ட வீரரான சம்மு அஷானை 67 ஓட்டங்களுக்கு வீழ்த்தினார். அத்துடன், அவரை தொடர்ந்து அதே பாணியில் காமேஷ் நிர்மல் 28 ஓட்டங்களுக்கு வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். மேலும் ஆனந்த கல்லூரி சார்பாக, சுபுன் வாரகோட 27 ஓட்டங்களைக் குவித்தார்.
அந்த வகையில் பதிலுக்கு துடுப்பாடக் களமிறங்கிய நாலந்த கல்லூரி, முதல் இன்னிங்சில் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததை போலல்லாது, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தது. அணித் தலைவர் தசுன் செனவிரத்ன 39 ஓட்டங்களால் பங்களிப்பு செய்தார். அதனை தொடர்ந்து அவிஷ்க பெரேரா 7 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
[rev_slider dfcc728]
.
அதனை தொடர்ந்து களமிறங்கிய மலிங்க அமரசிங்க மற்றும் சுஹங்க விஜேவர்தன முறையே 21, 43 ஓட்டங்களை பெற்று தமது அணிக்காக பங்களிப்பு செய்தனர்.
நாலந்த கல்லூரியின் துடுப்பாட்ட வீரர் லக்ஷித ரசன்ஜன 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 113 ஓட்டங்களை குவித்த செய்த அதேவேளை போட்டியை சமநிலைப்படுத்த பங்களிப்பு செய்தார். அதேநேரம் மறுமுனையில் சிறப்பாக துடுப்பாடிய விக்கெட் காப்பாளர் கசுன் சந்தருவன் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களை விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திய அதேவேளை லக்ஷித ரசாஞ்சன உடன் இணைந்து பிரிக்கப்படாத 111 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டார். அதனையடுத்து போதிய நேரமின்மை காரணமாக போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.
போட்டியின் சுருக்கம்
நாலந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 144 (51.5) – சுஹங்க விஜேவர்தன 37, மதுஷான் ஹசரங்க 31, அவிஷ்க பெரேரா 26, கசுன் சந்தருவன் 19, கவிஷ்க அஞ்சுல 3/37, சாமிக குணசேகர 2/23, சுபுன் வாரகோட 2/26
ஆனந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 190/8d (47) – சம்மு அஷான் 67, துஷான் ஹெட்டிகே 37, கமேஷ் நிர்மல் 27, கவிஷ்க அஞ்சுல 25, கழன பெரேரா 3/35, அசேல் குலதுங்க கமகே 3/47, மலிங்க அமரசிங்க 2/47
நாலந்த கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 280/5 (86) – லக்ஷித ரசாஞ்சன 113*, கசுன் சந்தருவன் 50 *, தசுன் செனவிரத்ன 39, கவிஷ்க்க அஞ்சுல 2/28, சம்மு அஷான் 1/36
தனிப்பட்ட விருதுகள்
- சிறந்த துடுப்பாட்ட வீரர் – லக்ஷித ரசாஞ்சன (நாலந்த கல்லூரி)
- சிறந்த பந்து வீச்சாளர் – கவிஷ்க்க அஞ்சுல (ஆனந்த கல்லூரி)
- சிறந்த களத் தடுப்பளார் – அசேல் குலதுங்க (நாலந்த கல்லூரி)
- போட்டியின் ஆட்ட நாயகன் – லக்ஷித ரசாஞ்சன (நாலந்த கல்லூரி)