லசித் உடகேயின் அதிரடி பந்து வீச்சில் 99 ஓட்டங்களால் புனித மரியார் கல்லூரி வெற்றி

228

இன்று இடம்பெற்று முடிந்த பாடசாலைகளுக்கு இடையிலான சிங்கர் கிண்ணத்திற்கான இரண்டு போட்டிகளில் கேகாலை புனித மரியார் கல்லூரி மற்றும் ரிச்மண்ட் கல்லூரி அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

புனித மரியார் கல்லூரி, கேகாலை எதிர் மொறட்டுவ வித்தியாலயம்

மொறட்டுவ வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் லசித்  உடகேயின் அதிரடி பந்து வீச்சின் மூலம் புனித மரியார் கல்லூரி 99 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

ஏற்கனவே முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த லசித், இரண்டாவது இன்னிங்சில் மேலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

மொறட்டுவ வித்தியாலயத்தை முதல் இன்னிங்சில் 11௦ ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்திய மரியார் கல்லூரி, 50 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாம் இன்னிங்சை தொடர்ந்தது. முதல் இன்னிங்சில் பிரகாசிக்கத் தவறிய கஜித கொட்டுவகோட இரண்டாம் இன்னிங்சில் சிறப்பாக துடுப்பாடி 70 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். அதேநேரம் நியோமல் பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 29 ஒட்டங்களுடன் இறுதி வரை களத்தில் இருந்தார்.

அந்த வகையில், இரண்டாம் இன்னிங்சில் மொறட்டுவ வித்தியாலயதுக்கு மரியார் அணி 229 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது. கடின இலக்கை நோக்கி களமிறங்கிய அவ்வணி மீண்டும் லசித்த உடகேயின் பந்து வீச்சை எதிர்கொள்ள தடுமாறிய நிலையில் 44.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 130  ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்ட நிலையில் தோல்வியை தழுவிக்கொண்டது.

செஹான் ஜீவந்த தோல்வியை தவிர்க்க போராடிய போதிலும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததால் அவரால் அணியை மீட்க முடியாமல் போனது. எனினும் சிறப்பாக துடுப்பாடிய அவர் அதிக பட்ச ஓட்டங்களாக 65 ஓட்டங்களை பதிவு செய்தார்.

போட்டியின் சுருக்கம்  

புனித மரியார் கல்லூரி, கேகாலை (முதல் இன்னிங்ஸ்): 160 (43.5) – சதரு ஸ்ரியஷந்த 52, தமிந்து  சந்திரசிறி 29 *, சஞ்சீவ ரஞ்சித் 28, ஷேஹதா சொய்சா 5/40, நஜ்ஜித் நிஷேன்ற 2/27

மொறட்டுவ வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்) :110 (43.1) ஷேஹதா சொய்சா 45, லசித் உடகே 7/41, சஞ்சய ரஞ்சித் 3/21

புனித மரியார் கல்லூரி, கேகாலை (இரண்டாம்  இன்னிங்ஸ்) :179 (60) கஜித கொட்டுவகோட 70, நியோமல் பெர்னாண்டோ 29*, மிராஜ் கவ்ஷிக்க 3/34, செஹான் ஜீவந்த 3/39, ஹஷான் அத்தித்திய 2/39

மொறட்டுவ வித்தியாலயம் (இரண்டாம் இன்னிங்ஸ்) : 130 (44.5) செஹான் ஜீவந்த 65, நிஷான் பெர்னாண்டோ 24, லசித்த உடகே 5/45, திமிர குமார 2/23, சனுஜ ரஞ்சித் 2/18

போட்டியின் முடிவு : 99 ஓட்டங்களால் புனித மரியார் கல்லூரி வெற்றி


ரிச்மண்ட் கல்லூரி, காலி எதிர் லும்பினி கல்லூரி, கொழும்பு

சிங்கர் கிண்ண டிவிசன் 1, காலிறுதிப் போட்டிக்கு முன்னைய சுற்றுப் போட்டியான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கொண்ட குறித்த போட்டியில் ரிச்மண்ட் கல்லூரி 58 ஓட்டங்களால் வெற்றியீட்டி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

கொழும்பு லும்பினி கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்த இந்த போட்டியில்  நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய லும்பினி கல்லூரி முதலில் ரிச்மண்ட் கல்லூரியை துடுப்பாடுமாறு பணித்தது. அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி கெவின் கேமித்தவின் அதிரடி பந்து வீச்சில் 22 ஓவர்களில்  106 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்ச ஓட்டங்களாக தனஞ்சய லக்ஷான் 21 ஓட்டங்களை பதிவு செய்தார்.

அதனையடுத்து களமிறங்கிய  லும்பினி கல்லூரி சதுன் மெண்டிஸ் மற்றும் திலங்க உதேஷன ஆகியோரின் அதிரடி பந்து வீச்சில் வெறும் 48 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது

போட்டியின் சுருக்கம்

ரிச்மண்ட் கல்லூரி, காலி: 106 (22) தனஞ்சய லக்ஷான் 21, கெவின் கேமித்த 5/15.

லும்பினி கல்லூரி  கொழும்பு:48 (16) சதுன் மெண்டிஸ் 3/10, திலங்க உதேஷன 3/10, அவிந்து தீக்ஷன 2/11.

போட்டியின் முடிவு : ரிச்மண்ட் கல்லூரி 58 ஓட்டங்களால் வெற்றி.