பாடசாலை மாணவர்களுக்கான 19 வயதுக்குட்பட்ட சிங்கர் கிண்ண முதல் சுற்றுப் போட்டிகளுக்காக இன்றைய தினம் மூன்று போட்டிகள் நடைபெற்றன. அதில் இன்று நிறைவுற்ற இரண்டு போட்டிகள் வீரர்களின் சிறந்த ஆட்டங்களின் காரணமாக சமநிலையில் முடிவுற்றன.

கண்டி திரித்துவக் கல்லூரி எதிர் கொழும்பு ஸாஹிரா கல்லூரி

இரண்டாம் நாளாக நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி இன்றைய தினம் சமநிலையில் முடிவுற்றது. சிறப்பாக துடுப்பாடிய ஹசித்த பயாகோட மற்றும் ஹசிந்த ஜயசூரிய ஆகியோர் சதங்களை விளாச, திரித்துவக் கல்லூரி பாரிய ஓட்டங்களால் முன்னிலை வகித்த போதிலும் ஸாஹிரா கல்லூரியை வெற்றிகொள்ள முடியாமல் போனது.

252 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸ் இலக்காகக்கொண்டு களமிறங்கிய ஸாஹிரா கல்லூரி, ஹசித்த பயாகொட மற்றும் விமுக்தி நேத்மல் ஆகியோரின் அதிரடி பந்து வீச்சில் 123 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஸாஹிரா கல்லூரி சார்பாக முஹம்மத் ஷம்மாஸ் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

அதனையடுத்து களமிறங்கிய திரித்துவக் கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின்போது 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 394 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஆட்டம் நிறைவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

கண்டி திரித்துவக் கல்லூரி: 252 (63.5) – ஹசிந்த ஜயசூரிய 66, சண்முகநாதன் ஷானகீத் 56, ஹசித்த பயாகோட 30, திசரு தில்ஷன் 28*, தியாகராஜன் பானுகோபன் 22, ஹாஷ்மி ஹுசைன் 2/42, சஜித் சமீரா 2/63, முஹம்மத் ஷம்மாஸ் 2/09

ஸாஹிரா கல்லூரி, கொழும்பு: 123 (39.5) – முகமது ஷம்மாஸ் 41*, ஹசித்த பயாகோட 3/03, விமுக்தி நேத்மல் 3/02, ட்ற்வொன் பேர்சிவல் 2/32

கண்டி திரித்துவக் கல்லூரி: 394/5 (79) – ஹசித்த பயாகோட 110, ஹசிந்த ஜயசூரிய 106, சண்முகநாதன் ஷானகீத் 60, தியாகராஜன் பானுகோபன் 44*, சானுக்க பண்டார 41, மகிடி நமிஸ் 2/105

போட்டி முடிவு – போட்டி சமநிலையில் முடிவடைந்தது. முதல் இன்னிங்சில் திரித்துவக் கல்லூரி வெற்றி


புனித தோமியார் கல்லூரி, கல்கிசை எதிர் புனித பேதுரு கல்லூரி, கொழும்பு 

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றாலும் முதல் இன்னிங்ஸ் வெற்றியை புனித பேதுரு கல்லூரி பதிவு செய்து கொண்டது.

புனித தோமியார் கல்லூரியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடர்ந்து, 145 ஒட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய புனித பேதுரு கல்லூரி, டேலோன் பீரிஸ்ஸின் அதிரடி பந்து வீச்சின் காரணமாக 152 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. எனினும் அவ்வணி 7 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

சிறப்பாகத் துடுப்பாடிய சந்தோஷ் குணதிலக 85 ஓட்டங்களைப் பெற்ற அதேநேரம், டேலோன் பிரிஸ் 44 ஓட்டங்குக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து துடுப்பாடிய தோமியார் கல்லூரி 9 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. எனவே எதிரணிக்கு அவர்கள் 177 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.

எனினும், புனித பேதுரு கல்லூரியால் இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 86 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித தோமியார் கல்லூரி, கல்கிசை: 145 (48.4) – பாக்கிய திசாநாயக்க 41, டேலோன் பீரிஸ் 28 ரவிந்து கொடிதுவக்கு 17, சத்துர ஒபேசேகர 3/34, சச்சின் சில்வா 3/18, மனில்க சில்வா 2/28

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு: 152 (56) – சந்தோஷ் குணதிலக 85, டேலோன் பிரிஸ் 7/44

புனித தோமஸ் கல்லூரி, கல்கிசை: 169/9 d(50.5) – சிதார அப்புஹின்ன 46, மந்தில விஜயரத்ன 42, முகமது அமீன் 5/63, சச்சின் சில்வா 3/49

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு: 86/3 (26) – மனல்கர் டி சில்வா 36*, வினுள் குணவர்தன 27


கொழும்பு றோயல் கல்லூரி எதிர் தர்மசோக்க கல்லூரி, களனி 

கொழும்பு றோயல் கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் ஆரம்பித்த இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய றோயல் கல்லூரி அணி, யுகீஷா திஷான்னின் அதிரடி பந்து வீச்சில் சொந்த மண்ணில் 128 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஓரளவு சிறப்பாக துடுப்பாடிய அபிஷேக் பெரேரா ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாகப் பதிவு செய்தார்.

பின்னர், துடுப்பாடிய தர்மசோக்க கல்லூரி அணி, மதுமாதவ அனுருத்தவின் அரைச் சதத்தின் பங்களிப்புடன் 6 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை பெற்ற நிலையில் இன்றைய நாள் ஆட்டம் நிறைவுற்றது.

எனவே, அவர்கள் 12 ஓட்டங்களால் பின்னிலையுற்று காணப்படுகிறனர். நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.
போட்டியின் சுருக்கம்

போட்டியின் சுருக்கம்

கொழும்பு றோயல் கல்லூரி: 128 (44.5) – அபிஷேகக் பெரேரா 31*, ரோனுக்க ஜயவர்தன 30, தேவிந்து சேனாரட்ன 23, யுகீஷா திஷான் 4/28, மதுமாதவ அனுருத்த 2/36, வேனுரா கயேஷான் 2/26

தர்மசோக்க கல்லூரி, களனி: 116 / 6 (48) – மதுமாதவ அனுருத்த 58, சமித்த ரங்க 29 *, ஹெலித விதானகே 2/14, கணித் சந்தீப 2/20