நவீன் குணவர்தன 14 விக்கெட்டுகள்: தர்ஸ்டன் கல்லூரிக்கு இலகு வெற்றி

240

இன்று நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட சிங்கர் கிண்ணத்துக்கான போட்டிகளில் கல்கிசை புனித தோமியர் கல்லூரி பவித் ரத்நாயக்கவின் அதிரடி பந்து வீச்சின் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களால் இலகுவாக வெற்றியீட்டியது. மேலும் மலியதேவ கல்லூரிக்கு எதிரான போட்டியில் தர்ஸ்டன் கல்லூரி இலகு வெற்றியை சுவீகரித்தது.  

மலியதேவ கல்லூரி, குருநாகல் எதிர் தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு

இரண்டாம் நாளாக நடைபெற்ற இந்த போட்டியில் கொழும்பு, தர்ஸ்டன் கல்லூரி நவீன் குணவர்தனவின் அதிரடி பந்து வீச்சின் மூலம் 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

மலியதேவ கல்லூரி பெற்றுக்கொண்ட 181 ஓட்டங்களுக்கு பதிலாக முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய தர்ஸ்டன் கல்லூரி 58.5 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 279 ஓட்டங்களுக்கு  ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. அதனையடுத்து 98 ஓட்டங்களால் பின்னிலையுற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய மலியதேவ கல்லூரி நவீன் குணவர்தனவின் அதிரடி பந்து வீச்சில் சிக்குண்டு 102 ஓட்டங்களுக்கு சுருண்டது.

சிறப்பாக பந்து வீசிய நவீன் குணவர்தன 30 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த வகையில் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய தர்ஸ்டன் கல்லூரி ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து இலக்கை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்:

மலியதேவ கல்லூரி, குருநாகல் (முதல் இன்னிங்ஸ்): 181 (53.1) – தமித சில்வா 86, தில்ஷான் கொல்லுரே 70, நவீன் குணவர்தன 5/55, சரண நாயக்கர 2/19, சவன் பிரபாஷ் 2/30

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 279/9d (58.5) – நிமேஷ் லக்ஷான் 82, யெஷான் விக்கிரமாராச்சி 44, இமேஷ் விரங்க 37, பிரகீஷ மென்டிஸ் 25, சவன் பிரபாஷ் 23, தமித சில்வா 5/102

மலியதேவ கல்லூரி, குருநாகல் (இரண்டாம் இன்னிங்ஸ்): 102 (26.4) – தமித சில்வா 31, டில்ஷான் கொல்லுரே 33, மனேல்க தர்மதாஸ் 20, நவீன் குணவர்தன  9/30

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்): 9/1 (1.2)

போட்டி முடிவு: தர்ஸ்டன் கல்லூரி 9 விக்கெட்டுகளால் வெற்றி


புனித பேதுரு கல்லூரி, கொழும்பு எதிர் புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி

இரண்டாம் நாளாக நடைபெற்ற இந்த விறுவிறுப்பான போட்டியில் புனித பேதுரு கல்லூரி வெற்றி பெறுவதற்காக இறுதி வரை போராடிய நிலையில் போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

புனித பேதுரு கல்லூரி பெற்றுக்கொண்ட 282 ஓட்டங்களுக்கு பதிலாக களமிறங்கிய புனித அந்தோனியார் கல்லூரி முதல் இன்னிங்சில் 141 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 141 ஓட்டங்களால் பின்னிலையுற்றதால் மீண்டும் துடுப்பாடுமாறு பணிக்கப்பட்டது. அந்தவகையில் மீண்டும் களமிறங்கிய அவ்வணி 98 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் போதிய நேரமின்மை காரணமாக போட்டி நிறைவுற்றதால் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவுற்றது.

சிறப்பாக அப்ந்து வீசிய மொஹமட் அமீன் 5 விக்கெட்டுகளையும் சதுர ஒபேசேகர 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்:

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 282/6d (78) – வினுள்  குணவர்தன 61, சந்துஷ் குணதிலக்க 53, ஷாலித் பெர்னாண்டோ 52, அனிஷ்க பெரேரா 39, மனேல்கா டி  சில்வா 31*, ஷிவான் பெரேரா 23*, கிஹான் அச்சிந்த 2/42, எம் அல்பார் 2/34

புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 141 (52) – நிபுன் அசோக் 30, எம் அப்சர் 27, டியொன் ஸ்டௌடர் 27, சத்துர ஒபேசேகர 4/39, சந்தோஷ் குணதிலக்க 2/26, முஹம்மத் அமீன் 3/38

புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி (இரண்டாம் இன்னிங்ஸ்)f/o: 98/9 (53) – எம் அல்பார் 26, டியொன் ஸ்டௌடர் 21, மொஹமட் அமீன் 5/12, சத்துர ஒபேசேகர 4/49

போட்டி முடிவு: போட்டி சமநிலையில் நிறைவுற்றது. புனித பேதுரு கல்லூரி முதல் இன்னிங்ஸ் புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.


ஜனாதிபதி கல்லூரி, கோட்டே எதிர் புனித செர்வாடியஸ் கல்லூரி, மாத்தறை

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி இரண்டாம் நாளாக நடைபெற்ற நிலையில் வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. எனினும் முதல் இன்னிங்சில் திலன் பிரஷான் மற்றும் சசிக துல்ஷானின் அரை சதங்களுடன் உதவியுடன் புனித செர்வாடியஸ் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியை தானதாக்கிக்கொண்டது.

அதே நேரம் இரண்டாம் இன்னிங்சில் சிறப்பாக துடுப்பாடிய ஜனாதிபதி கல்லூரியின் தில்ஷான் சிகெரா 67 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட எண்ணிகையை உயர்த்தினார். அந்த வகையில் 106 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய மாத்தறை, செர்வாடியஸ் கல்லூரி 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் ஆட்டம் போதிய நேரமின்மை காரணமாக நிறைவு பெற்றது.

போட்டியின் சுருக்கம்:

ஜனாதிபதி கல்லூரி, கோட்டே (முதல் இன்னிங்ஸ்): 112 (39.2) – சசித லியனகே 41, கேசர நுவந்த 5/26, இசுறு உதயங்க 3/13

புனித செர்வாடியஸ் கல்லூரி, மாத்தறை (முதல் இன்னிங்ஸ்): 183 (68.1) திலான் பிரஷான் 57, சசிக துல்ஷான் 51, ருவிந்த ரோஷன 24, சமோத் விக்கிரமசூரிய 4/38, பிரமுக கயஷான் 2/35

ஜனாதிபதி கல்லூரி, கோட்டே (இரண்டாம் இன்னிங்ஸ்): 177/9d (51.5) – தில்ஷான் சிகெரா 67, ஹஷான் பிரியதர்ஷன 42, சரித் ஹர்ஷன 4/17

புனித செர்வாடியஸ் கல்லூரி, மாத்தறை (இரண்டாம் இன்னிங்ஸ்): 54/3 (19) – சரித் ஹர்ஷன 16*, இசுறு உதயங்க 16, ரிபாஸ் மவ்ரூஸ் 2/23

போட்டி முடிவு: போட்டி சமநிலையில் நிறைவுற்றது. புனித செர்வாடியஸ் கல்லூரி முதல் இன்னிங்ஸ் புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.


புனித தோமியர் கல்லூரி, கல்கிசை எதிர் புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி

பாணதுறை பொது கிரிக்கெட் மைதானத்தில் இரண்டாம் நாளாக தொடர்ந்த  இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் புனித தோமியர் கல்லூரி பெற்றுக்கொண்ட 318 ஓட்டங்களுக்கு பதிலாக துடுப்பாடிய புனித சில்வெஸ்டர் கல்லூரி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

மீண்டும் இரண்டாம் இன்னிங்சுக்காக துடுப்பாட பணிக்கப்பட்ட புனித சில்வெஸ்டர் கல்லூரி 135 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

அதேநேரம் வெற்றிக்கு வழிவகுத்த பவித் ரத்நாயக்க முதல் இன்னிங்சில் 38 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்:

புனித தோமியர் கல்லூரி, கல்கிசை (முதல் இன்னிங்ஸ்): 318/7d (59.2) – ரவிந்து கொடிதுவக்கு 119, சிதார அப்புஹின்ன 56, ரொமேஷ் நல்லபெரும 36, மனுஜ பெரேரா 3/51, துசித் சொய்சா 2/60

புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 143 (50) – மனுஜ பெரேரா 26, அவிந்து ஹேரத் 23, டேலோன் பிரீஸ் 3/40, பவித் ரத்நாயக்க 5/38

புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி (இரண்டாம் இன்னிங்ஸ்)f/o: 135 (57.5) – சந்துல ஜயக்கொடி 36, துசித் சொய்சா 23, நிம்சார அதுருகள்ள 20, கழன பெரேரா 5/29, பவித் ரத்நாயக்க 3/42, கெவின் இரியகம 2/07

போட்டி முடிவு: புனித தோமியர் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களால் வெற்றி