19 வயதுக்கு உட்பட்ட சிங்கர் கிண்ண முதல் சுற்றுக்காக C பிரிவில் இரண்டாம் நாளாக நடைபெற்ற ஸாஹிரா கல்லூரி மற்றும் அனுராதபுரம் மத்திய மகாவித்தியாலயம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொழும்பு, ஸாஹிரா கல்லூரி 244 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
கொழும்பு, ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் நாளில் ஸாஹிரா கல்லூரி முதல் இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்ட 218 ஓட்டங்களுக்கு பதிலாக களமிறங்கிய அனுராதபுரம் மத்திய மகாவித்தியாலயம் 58 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து நெருக்கடியான நிலையில் இருந்தது.
அந்த வகையில், 160 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் மீண்டும் இரண்டாம் இன்னிங்சுக்காக துடுப்பாடிய ஸாஹிரா கல்லூரி, முகமது நஜாத் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 100 ஓட்டங்களின் உதவியுடன் 148 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
அதனையடுத்து 308 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை நோக்கி துடுப்பாடிய அனுராதபுரம் மத்திய மகாவித்தியாலயம் 23.3 ஓவர்களில் 64 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்களால் படுதோல்வியுற்றது. அதே நேரம் சிறப்பாக பந்து வீசிய சஜித் சமீர 19 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் ஹஷ்மி ஹுசைன் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
போட்டியின் சுருக்கம்:
ஸாஹிரா கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 218 (57) – முகமத் சமாஷ் 83, முகமது நஜாத் 60, தில்ஷான் லக்ஷித 3/24, சித்தும் நிலுமிந்த 2/20
அனுராதபுரம் மத்திய மகாவித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்): 58 (20) – சிதறக ஹிரந்த 17, சஜித் சமீர 4/15, ஹஷ்மி ஹுசைன் 2/15
சாஹிரா கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்): 148/6d (38.3) – முகம்மது நஜாத் 100*, ரவிந்த பிரபாஷ்வர 2/54, மதுரங்க சந்திரரத்ன 3/39
அனுராதபுரம் மத்திய மகாவித்தியாலயம் (இரண்டாம் இன்னிங்ஸ்): 64 (23.3) – சந்தரு மதுஷான் 17, சஜித் சமீர 5/19 ஹஷ்மி ஹுசைன் 4/17
போட்டி முடிவு – ஸாஹிரா கல்லூரி 244 ஓட்டங்களால் வெற்றி