சிங்கர் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் I முதல் சுற்றுக்காக A குழுவில் கண்டி, தர்மராஜ மற்றும் காலி, மகிந்த கல்லூரிகளுக்கிடையே இரண்டாவது நாளாக நடைபெற்ற இந்த போட்டியில், முதல் இன்னிங்க்சுக்காக மகிந்த கல்லூரி ஒரு ஓட்டம் பெற்ற நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக போட்டி கைவிடப்பட்டது.

தர்மராஜ கல்லூரி, கண்டி எதிர் மஹிந்த கல்லூரி, காலி – இரண்டாம் நாள்

கண்டி, தர்மராஜா கல்லூரியில் நேற்றைய தினம் ஆரம்பித்த இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி மஹிந்த கல்லூரி முதலில் தர்மராஜ கல்லூரியை துடுப்பாடுமாறு பணித்தது.

சொந்த மண்ணில் களமிறங்கிய அவ்வணி நேற்றைய நாள் ஆட்ட நிறைவின் போது 74 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ஓட்டங்களை பெற்றிருந்தது. நிவந்த ஹேரத் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

தொடர்ந்து இரண்டாம் நாளாக துடுப்பாடக் களமிறங்கிய தர்மராஜ கல்லூரி, 109.5 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 247 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. சிறப்பாக துடுப்பாடிய நிவந்த ஹேரத் 65 ஓட்டங்களையும் துவாஜ் பண்டார 46 ஓட்டங்களையும் அணி சார்பில் கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தனர். அதே நேரம் ஓட்டங்களை கட்டுப்படுத்திய அஷேன் கண்தம்பி 36 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன் பின்னர் முதல் இன்னிங்சுக்காக ஆட்டத்தை தொடர்ந்த மஹிந்த கல்லூரி ஒரு ஓவருக்கு ஒரு ஓட்டத்தினை பெற்றிருந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

தர்மராஜ கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 247 (109.5) – நிவந்த ஹேரத் 65, துவாஜ் பண்டார 46, தேஷான் குணசிங்க 28, கிஹான் விதாரண 32*, அஷேன் கண்தம்பி 36/5, கவிந்து எதிரிவீர 2/61

மஹிந்த கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்): 1/0 (1)

முடிவு: போட்டி சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டது.