Trinity Sixes ஹொக்கி போட்டியில் மாத்தளை கல்லூரிகள் ஆதிக்கம்

647
Trinity Sixes

திரித்துவக் கல்லூரியில் ஹொக்கி ஆரம்பித்து 70 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதனை கொண்டாடும் முகமாக அக்கல்லூரியினால் ஒழுங்கு செய்யப்பட்ட அணிக்கு 6 பேர் கொண்ட ஹொக்கி போட்டிகளில் (Trinity Sixes), ஆண்களுக்கான பிரிவில் மாத்தளை புனித தோமியர் கல்லூரியும், பெண்களுக்கான பிரிவில் ஜனாதிபதி மகளிர் கல்லூரியும் வெற்றிபெற்றது.

இம்மாதம் 14ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டிகளில், ஆரம்ப விழாவில் திரித்துவக் கல்லூரியின் பழைய மாணவரான திரு.ரொஷான் ராஜதுரை அவர்கள் கலந்துகொண்டார்கள். நாட்டின் அனைத்து பாகங்களிலும் இருந்து ஆண்கள், பெண்கள் உள்ளடங்களாக 54 அணிகளின் பங்குபற்றுதலுடன் ஆரம்ப விழா நடைபெற்றது.

முதலாவது நாளில் ஆண்கள் பிரிவில் அணிகள் 8 குழுக்களாக வகைப்படுத்தப்பட்டு, முதற் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பெற்றுக்கொள்ளும் அணிகள் காலிறுதி போட்டிகளுக்கு தெரிவாகின. அதேவேளை பெண்கள் பிரிவில் அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

கவிந்து மதரசிங்கவின் சதத்தால் றோயல் கல்லூரி வலுவான நிலையில்

சிங்கர் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் I சுற்று போட்டிகளுக்காக இன்றைய தினம் 5 போட்டிகள் இடம் பெற்றன.

முதல் நாள் முடிவின்பொழுது ஆண்கள் பிரிவில் விஜயா, கிறிஸ்து தேவ, ஸாஹிரா, கல்கிஸ்ஸ தோமியர், இசிபதன, மாத்தளை தோமியர், நாலந்த மற்றும் கிங்ஸ்வூட் கல்லூரிகள் தமது குழுக்களில் முதல் இடத்தை பிடித்ததோடு, திரித்துவக் கல்லூரி, பிரின்ஸ் ஒப் வேல்ஸ், பண்டாரநாயக்க, ஆனந்த, அலோசியஸ், பதுளை மத்திய கல்லூரி, புனித ஜோசப் வாஸ் மற்றும் ரிச்மன்ட் கல்லூரிகள் இரண்டாம் இடத்தை பிடித்துக்கொண்டன.

பெண்களுக்கான பிரிவில் சீதாதேவி, சங்கமித்தா, ஜனாதிபதி மகளிர், கிறிஸ்து தேவ கல்லூரிகள் குழுக்களில் முதல் இடத்தை பிடித்ததோடு, மியூசியஸ், பதுளை விகாரமகாதேவி, விஷாகா மற்றும் புனித அந்தோனியார் மகளிர் கல்லூரிகள் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டன.

அனைத்து குழு மட்ட போட்டிகளும் முதல் நாளில் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் நாளில் நொக் அவுட் சுற்று ஆரம்பமானது. ஆண்களுக்கான காலிறுதிக்கு தகுதி பெறும் போட்டிகள் முதலில் நடைபெற்றதோடு அதில் மாத்தளை விஜயா கல்லூரி தோல்வியுற்று ஏமாற்றம் அளித்தது.

ஆண்களுக்கான காலிறுதி போட்டிகளில் வெற்றிபெற்று கிங்ஸ்வூட், மாத்தளை ஸாஹிரா, மாத்தளை தோமியர் மற்றும் கிறிஸ்து தேவ கல்லூரிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

பெண்களுக்கான காலிறுதி போட்டிகளில் வெற்றிபெற்று மியூசியஸ், சங்கமித்தா, சீதாதேவி மற்றும் ஜனாதிபதி மகளிர் கல்லூரிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கெலிஓய கால்பந்து அணி

இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் பிரிவு 2 அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டித் தொடரின்..

அரையிறுதி சுற்றில் விறுவிறுப்பான போட்டிகளின் பின்னர் பெனால்டி முறையில் மாத்தளை ஸாஹிரா கல்லூரி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மறுமுனையில் மீண்டும் ஒரு முறை மாத்தளை தோமியர் கல்லூரி, கிறிஸ்துதேவ கல்லூரியுடன் பெனால்டி முறையில் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ஜனாதிபதி மகளிர் கல்லூரி மற்றும் சங்கமித்தா கல்லூரிகள் மோதிக்கொண்டதுடன், இப்போட்டியில் 3-1 என்ற  கோல்கள் அடிப்படையில் ஜனாதிபதி கல்லூரி இலகுவாக வெற்றிபெற்று சம்பியனானது.

அரையிறுதியில் தோல்வியுற்ற அணிகளான சீதாதேவி மற்றும் மியூசியஸ் அணிகளுக்கிடையிலான 3ஆம் இடத்திற்கான போட்டியில் சீதாதேவி கல்லூரி அணி இலகுவாக வெற்றிபெற்றது.

ஆண்களுக்கான 3ஆவது இடத்திற்கான போட்டியில் கிறிஸ்து தேவ கல்லூரி மற்றும் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரிகள் மோதிக்கொண்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இறுதி நிமிடத்தில் கோல் அடித்ததன் மூலம் 1-0 என கிறிஸ்து தேவ கல்லூரி வெற்றிபெற்று 3ஆம் இடத்தை பெற்றுக்கொண்டது.

ஆண்களுக்கான இறுதி போட்டியில் மாத்தளை ஸாஹிரா மாற்று மாத்தளை தோமியர் கல்லூரிகள் மோதின. ஒரு பாதி 10 நிமிடங்களாக மொத்தம் 20 நிமிடங்கள் போட்டி நடைபெற்றது. 20 நிமிடங்களின் பின்னர் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமநிலையில் காணப்பட்டமையால் மேலதிகமாக 10 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதிலும் வெற்றியாளரை தீர்மானிக்க முடியாததால் பெனால்டி முறை மூலம் வெற்றியாளரை தீர்மானம் செய்ய நடுவர்கள் தீர்மானித்தனர்.

அதன்போது, தமக்கு கிடைத்த 3 பெனால்டி வாய்ப்புகளில் மாத்தளை தோமியர் கல்லூரி 2 கோல்களை அடித்த பொழுதும் மாத்தளை ஸாஹிரா கல்லூரியினால் எந்த ஒரு கோலையும் அடிக்க முடியவில்லை. எனவே மாத்தளை தோமியர் கல்லூரி 3-1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனானது.

விருது வழங்கும் விழாவிற்கு பிரதம அதிதியாக, திரித்துவக் கல்லூரியின் பழைய மாணவரும், முன்னாள் ஹொக்கி பயிற்றுவிப்பாளருமான திரு.போல் ஜெயராஜ் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் கல்லூரியின் உப அதிபர் உட்பட பல முக்கிய அதிதிகள் அந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தொடரின் சிறந்த வீரர் மாத்தளை ஸாஹிரா கல்லூரியிலிருந்தும், சிறந்த கோல் காப்பாளர் மாத்தளை தோமியர் கல்லூரியிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டனர். சிறந்த வீராங்கனை மற்றும் பெண்கள் பிரிவில் சிறந்த கோல் காப்பாளர் ஆகிய இருவரும் ஜனாதிபதி மகளிர் கல்லூரியிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர்.