ரக்பி நடுவர்கள் விருது 2016

241
Rugby referees honored

வருடார்ந்த டயலொக் ரக்பி நடுவர்களுக்கான விருது வழங்கும் விழா 13ஆம் திகதி கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு, இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சரான தயாசிரி ஜயசேகர மற்றும் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு துறை அமைச்சரான ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கை ரக்பி கழக (SLR) தலைவரான அசங்க செனவிரத்ன, உப தலைவரான லசித் குணரத்ன மற்றும் செயலாளரான நசீம் மொகமட் ஆகியோரிடம் இருந்து தமக்கு சிறந்த வழிகாட்டலும், ஆதரவும் கிடைப்பதாக இலங்கை ரக்பி நடுவர்கள் சங்கத்தின் தலைவர் நிஸாம் ஜமால்தீன் அவர்கள் தெரிவித்தார்கள். பாடசாலை ரக்பி சங்கத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளில் கூட அவர்கள் தமக்கு உதவினார்கள் என நிஸாம் தெரிவித்தார்

திரு. ஜமால்தீன் அவர்கள் மேலும் கருது தெரிவித்த பொழுது “2016ஆம் ஆண்டு 600 போட்டிகளுக்கு மேல் நாம் நடுவர்களை வழங்கினோம்.  வெளிநாட்டில் இருந்து நடுவர்களை கொண்டு வருவதன் மூலம் உள்நாட்டு நடுவர்கள் பாதிக்கப்படுவார்கள்” என தெரிவித்தார். மேலும் ”இலங்கை ரக்பி நடுவர்கள் சங்கமானது (SLSRFR) இங்கிலாந்திலிருந்து ரக்பி நடுவர்கள் சங்கத்தை வரவழைத்து நமக்கு பயிற்சி வழங்கியதோடு அதில் கலந்துகொள்வதற்கு ஊடங்கங்கள் மூலமாக ஊக்குவித்ததாகவும்” அவர் தெரிவித்தார் .

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கருது தெரிவித்த பொழுது “கடந்த வருடம் நான் நியூசிலாந்திற்கு விஜயம் செய்தது பெரும் பாக்கியம். நியூசிலாந்து அமைச்சர் ஒருவர் றக்பி போட்டிகளில் நடுவராக கடமையாற்றுவது ஆச்சரியமானது.  எனது ரக்பி பற்றிய பழைய நினைவுகளை மீட்டிப் பார்க்கும் பொழுது நடுவர்களுடைய தீர்மானம் அவ்வளவு சிறந்தது இல்லை.  தற்போது அதை பற்றி யோசித்து பார்க்கும் பொழுது நடுவர்கள் அவர்களால் முடிந்த சிறந்த திறமைகளையே வெளிக்காட்டுகிறார்கள், வீரர்களும் நடுவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்த பொழுது “வருடத்தில் பாரிய அளவில் எதிர்பார்க்கப்படும் ஒரு விழா இதுவாகும். இவ் விழாவின் மூலம்  கடின உழைப்பு மற்றும் சிறந்த திறமைகளை இனம் கண்டு அதை கௌரவிக்க சிறந்த தருணமாகும்” என தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் “தமது 63ஆவது வருடத்தில் கால் பதித்து இருக்கும் இச்சங்கமானது பெருமைக்குரியது. மேலும் நடுவர்களின் தரத்தை உயர்த்துவதற்கு வழிகளை செய்துகொடுப்பேன்” எனவும் தெரிவித்தார்.

இலங்கை றக்பி நடுவர்கள் சங்கத்தின் பழைய தலைவர்களான சும்மா நவரத்தினம், சிவனேந்த்ரன், மேத அபேகுணவர்தன , Rt. Senior DIG நிமல் லியூகே, பிரிகேடியர் ஜே.பி.எ. ஜயவர்தன, டோனி அமித், டில்றோய் பெர்னாண்டோ, ஓர்வில் பெர்னாண்டோ, மொஹான் பாலசூரிய, அனா சரணபால மற்றும் காமினி பெர்னாண்டோ ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

எச்.பி. வீரங்கவிற்கு வளர்ந்து வரும் நடுவருக்கான விருது வழங்கப்பட்டதுடன், ஜெப்ரி ஷாஹிட் சிறந்த உறுப்பினராக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அதேவேளை இலங்கை றக்பி நடுவர்கள் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நடைபெற்றதுடன், பின்வரும் புதிய உறுப்பினர் குழு தெரிவு செய்யப்பட்டது.

தலைவர் –  நிஸாம் ஜமால்தீன்

உப தலைவர் – S.W. சாங் மற்றும் அனுர ரன்கொத்கே

செயலாளர் – திங்க பீரிஸ்

பொருளாளர் – ஷாம்த் பெர்னாண்டோ

பழைய உறுப்பினர்கள் – ரொஷான் டீன் மற்றும் டோனி அமித்

உறுப்பினர்கள்

  1. ஜெரால்ட் ராசையா
  2. லசந்த ஜயவர்தன
  3. நிமல் சோமரத்ன
  4. A.C தென்னகோன்
  5. மாதவ விஜயசிறி
  6. பிரதீப் பெர்னாண்டோ
  7. காமினி இந்திரசேன