அண்மையில் ஆரம்பமாகி மிகவும் சிறந்த முறையில் இடம்பெற்றுவரும் இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ‘A’ மட்டத்திற்கான போட்டியொன்று இன்று ஆரம்பமானது. தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் மற்றும் பதுரேலிய விளையாட்டுக் கழக அணிகளுக்கிடையிலான இப்போட்டி பி.சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி துடுப்பாட வந்த அவ்வணியின் மேல் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்த போதிலும், கீழ்வரிசை வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை 252 இற்கு இட்டுச் சென்றனர்.
தமிழ் யூனியனின் வெற்றிக்காக 8 விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஜீவன் மெண்டிஸ்
துடுப்பாட்டத்தில் சரித் ஜயம்பதி 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன் இளம் வீரர் சாமிக கருணாரத்ன 48 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் சாலிய சமன் 51 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து களமிறங்கிய பதுரேலிய விளையாட்டுக் கழகம், இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 3 விக்கெட்டுகளை இழந்து 44 ஓட்டங்களை பெற்றிருந்தது.
நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 252 (63.3) – சரித் ஜயம்பதி 50, சாமிக கருணாரத்ன 48, சாலிய சமன் 4/51, அலங்கார அசங்க 3/70
பதுரேலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 44/3 (19)