முன்னைய செய்திகள்: முதல் வெற்றியைப் பெற்றது பொலிஸ் அணி
ஆட்டத்தின் முதல் பாதியில் இராணுவ அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொள்வதில் தடுமாறியது. போட்டியின் ஐந்தாவது நிமிடத்தில் பின்கள தடுப்பாளர் சானக குமாராவின் பெனால்டி மூலம் இராணுவ அணி மூன்று புள்ளிகளை பெற்றுக்கொண்டது. (பொலிஸ் அணி 00 – இராணுவ அணி 03)
பொலிஸ் அணி 13ஆவது நிமிடத்தில் ப்ளை ஹாப் ராஜித சன்சோனியின் மூலம் ஒரு ட்ரை வைத்தது. ராஜித சன்சோனி அவரது ட்ரை மூலம் கிடைத்த கொன்வெர்சனை கம்பங்களுக்கிடையே உதைந்ததன் மூலம் 07 – 03 முன்னிலை அடைந்தது. (பொலிஸ் அணி 07 – இராணுவ அணி 03)
இராணுவ அணி பிரதீப் விக்டர் மூலமாக இரண்டாவது ட்ரை வைத்தது. எனினும் கயான் சாலிந்த உதையைத் தவறியமையால் 5 புள்ளிகள் மட்டுமே கிடைத்தது. (பொலிஸ் அணி 07 – இராணுவ அணி 08)
Photos: Police SC v Army SC – Dialog Rugby League 2016/17 | #Match 27
இராணுவ அணியின் ஸ்கரம் ஹாப் M. ரிஸ்வி களநடுவிலிருந்து விவேகமாக செயற்பட்டு முன்னிலை வீரர்களுக்கு, பொலிஸ் அணியின் பின்கள தடுப்பு வீரர்களை ஊடறுத்து ட்ரைகளை பெற்றுக்கொள்வதற்கு வழிசெய்தார். இதன்படி 37ஆவது நிமிடம் ட்ரை மூலம் கிடைக்கப்பெற்ற கொன்வெர்சனை கயான் சலிந்த மிக எளிதாக கம்பங்களிக்கிடையே உதைந்ததன் மூலம் இராணுவ அணியை 8 புள்ளிகளால் முன்னிலை அடையச்செய்தார். (பொலிஸ் அணி 07 – இராணுவ அணி 15)
இராணுவ அணி முதல் பாதிக்கு சற்று முன்தாக வினோத் குமார் மூலம் இன்னுமொரு ட்ரை வைத்தது.
முதல் பாதி : பொலிஸ் அணி 07 – இராணுவ அணி 20
இரண்டாம் பாதியில் எழுச்சி பெற்ற பொலிஸ் அணி, இராணுவ அணியை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் 47ஆவது நிமிடத்தில் விங்கர் M. அப்சால் மூலம் ட்ரை ஒன்றினை பெற்றுக்கொண்டது. ராஜித சன்சோனி உதையைத் தவறவிடவில்லை. 10 நிமிடங்களின் பின் பொலிஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை ராஜித சன்சோனி சிறப்பாக உதைந்ததன் மூலம் மேலும் 3 புள்ளிகளைப் பொலிஸ் அணி பெற்றுக்கொண்டது. (பொலிஸ் 17 – இராணுவப்படை 20)
இதன் மூலம் சற்று தடுமாறிய இராணுவப்படை ஆட்ட நேரம் முடிவடைய 10 நிமிடங்கள் இருந்த நிலையில் ஒரு ட்ரை வைத்தது. சலிந்த மூலம் கிடைக்கபெற்ற மேலதிக புள்ளிகளால் இராணுவ அணி ஆட்டத்தினை கட்டுபடுத்தும் நிலை ஏற்பட்டது. (பொலிஸ் அணி 17 – இராணுவ அணி 27)
இராணுவ அணி செய்த தவறினால், போட்டி நடுவர் தினுக்க பீரிஸ் பொலிஸ் அணிக்கு பெனால்டி ட்ரை வழங்கினார். ராஜித சன்சோனி உதையை தவறாமல் உதைந்ததன் மூலம் மேலும் 2 புள்ளிகளை பெற்றுக்கொடுக்க பொலிஸ் அணி மீண்டெழுந்தது. எனினும், இறுதி வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இறுதியில் இராணுவ அணி 27-24 என்ற புள்ளிகள் அடிப்டையில் வெற்றியீட்டியது.
முழு நேரம் : பொலிஸ் அணி 24 – இராணுவ அணி 27
போட்டி நடுவர் – தினுக்க பீரீஸ்
ThePapare.com இன் ஆட்டநாயகன் : M ரிஸ்வி (இராணுவ அணி)
புள்ளிகள் பெற்றோர்
பொலிஸ் அணி
ட்ரை : ராஜித சன்சோனி, M. அப்சால், ஒரு பெனால்டி ட்ரை
கொன்வெர்சன் : ராஜித சன்சோனி (2)
பெனால்டிகள் : ராஜித சன்சோனி (1)இராணுவ அணி 27
ட்ரை : விக்டர் பிரதீப், வினோத் குமார், M ரிஸ்வி, நிரோஷன் திலீப்ப
கொன்வெர்சன் : கயான் சலிந்த (2)
பெனால்டிகள் : சானக குமார (1)