அண்மையில், புனித தோமியார் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற 2௦16ஆம் ஆண்டுக்கான வணிக நிருவன அணிகளுக்கு (மேர்கன்டைல்) இடையிலான மேசைப்பந்து லீக் சம்பியன்ஷிப் போட்டிகளில், ஆடவர் A பிரிவிற்கான சம்பியன் கிண்ணத்தினை செலான் வங்கி விளையாட்டு கழகம் சுவீகரித்துக் கொண்டது. அதேநேரம், மகளிர் A பிரிவிற்கான தங்கப் பதக்கத்தினை மாஸ் A மகளிர் குழு வென்றது.
இரண்டாம் நாள் போட்டிகளின் புகைப்படத் தொகுப்பு
இந்த போட்டித் தொடரில் 46 கூட்டுறவு மற்றும் வணிக நிறுவனங்களின் அணிகள் ஐந்து பிரிவுகளின்கீழ் போட்டியிட்டன. குறித்த அணிகள் ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்த தமது திறமைகளின் அடிப்படையில் இவ்வாறு வெவ்வேறு பிரிவுகளுக்கு வகைப்படுத்தப்பட்டிருந்தன.
இந்தப் போட்டிகளின் நிறைவில் A பிரிவிற்கான கிண்ணத்தினை செலான் வங்கி விளையாட்டு கழகம் சுவீகரித்துக்கொண்டது. இரண்டாம் இடத்தினை கொம்மர்ஷல் கிரெடிட் அண்ட் பினான்ஸ் அணி பெற்றுக்கொண்டது. அத்துடன் மகளிர் பிரிவில் மாஸ் A சம்பியன் பட்டதை பெற்றுக்கொண்டதோடு, செலான் வங்கி விளையாட்டு கழக மகளிர் பிரிவு இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது.
முதல் நாள் போட்டிகளின் புகைப்படத் தொகுப்பு
அதே நேரத்தில், ஆடவர் மற்றும் மகளிருக்கான B பிரிவிற்கான போட்டிகளில் முறையே கொம்மர்ஷல் வங்கி A மற்றும் மாஸ் B ஆகிய அணிகள் சம்பியன் பட்டத்தினை சுவீகரித்துக்கொண்டன.
வெற்றி பெற்ற அணிகளின் விபரம்
ஆடவர் (A) பிரிவு
வெற்றியாளர் – செலான் வங்கி விளையாட்டு கழகம்
இரண்டாம் இடம் – கொம்மர்ஷல் கிரெடிட் அண்ட் பினான்ஸ் பி.எல்.சி.
மகளிர் (A) பிரிவு
வெற்றியாளர் – மாஸ் “A” குழு
இரண்டாம் இடம் – செலான் வங்கி விளையாட்டு கழகம்
ஆடவர் (B) பிரிவு
வெற்றியாளர் – கொம்மர்ஷல் வங்கி விளையாட்டு கழகம் “A” குழு
இரண்டாம் இடம் – மில்லேனியம் IT “A” அணி
மகளிர் (B) பிரிவு
வெற்றியாளர் – மாஸ் “B” அணி
இரண்டாம் இடம் – வேர்துசா (தனியார்) நிறுவனம்
ஆண்கள் (C) பிரிவு
வெற்றியாளர் – ஹேலீஸ் விளையாட்டு கழகம்
இரண்டாம் இடம் – மாஸ் “B” அணி
ஆடவர் (D) பிரிவு
வெற்றியாளர் – செலிங்கோ ஜெனரல் காப்புறுதி விளையாட்டு கழகம்
இரண்டாம் இடம் – டயலொக் ஆசியாட்டா பி.எல்.சி. “B” அணி
ஆடவர் (E) பிரிவு
வெற்றியாளர் – கொமர்ஷல் வங்கி விளையாட்டு கழக “C” குழு
இரண்டாம் இடம் – கேக் லெப்ஸ் (Pvt) Ltd: “A” அணி
வெற்றி பெற்ற அணிகள்
ஆடவர் (A) பிரிவு வெற்றியாளர் – செலான் வங்கி விளையாட்டு கழகம்
K.S.T.சலித்த ரன்ஜன, மலித் திலுஷ, சசிக்க விஜசுரிய, சமித் டினோஜ், சமிந்த ரேனுக, உதித்த களுஆரச்சி
ஆண்கள் (A) பிரிவு இரண்டாம் இடம் – கொம்மர்ஷல் கிரெடிட் அண்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி.
சமீரா கினிகே, புபுது ஷானக்க டி சில்வா, ரோஷன் எகோடகே, அஜித் கீர்த்தி
மகளிர் (A) பிரிவு வெற்றியாளர் – மாஸ் “A” குழு
கல்பனி ஹேரத், ஸ்ரீ மலி விமலரத்ன, சுஜானி போகொல்லகம
மகளிர் (A) பிரிவு இரண்டாம் இடம் – செலான் வங்கி விளையாட்டு கழகம்
டுள்மினி விஜேபண்டார, சேதிக்கா ஷஷினி