ரோயல் கல்லுரியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிலம் மஞ்சள் ஹொக்கி செவன்ஸ் போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், ஆண்களுக்கான பிரிவில் மாத்தளை புனித தோமஸ் கல்லூரி அணியும் மகளிருக்கான பிரிவில் சீதாதேவி மகளிர் பாடசாலை அணியும் 2016ஆம் வருடத்துக்கான சம்பியன் வெற்றிக் கிண்ணங்களை சுவிகரித்தன.
14ஆவது முறையாகவும் நடைபெற்ற இப்போட்டிகளுக்கு அகில இலங்கை ரீதியில் இருந்து 40க்கும் மேற்பட்ட பாடசாலை அணிகள் பங்குபற்றியிருந்தன. அனைத்துக் கட்டப் போட்டிகளினதும் நிறைவில் இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றிருந்த மாத்தளை புனித தோமஸ் கல்லூரி அணி, ஜோசப் வாஸ் அணியுடனான தீர்க்கமான இப்போட்டியில் 3-0 என்ற கோல்கள் கணக்கில் பெனால்டி சூட் அவுட் முலம் வென்று சம்பியன் பட்டத்தை தனதாக்கியது.
அதே நேரம், மகளிர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில், பிரபல அணியான சீதாதேவி மகளிர் கல்லூரி அணிக்கும் சங்கமித்த கல்லூரி அணிக்கும் இடையேயான போட்டி இடம்பெற்றது. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் சீதாதேவி மகளிர் கல்லூரி அணி வெற்றி பெற்றது.
முன்றாம் இடத்துக்காக போட்டியிட்ட நாலந்த மற்றும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியில், நலந்த கல்லூரி 3-0 என்ற கோல்கள் கணக்கில் ஆண்கள் பிரிவில் வெற்றிபெற்றது. அதே நேரம், மகளிர் பிரிவுக்காக யசொதரா மகளிர் அணி 3-2 என்ற கோல்கள் கணக்கில் க்ரைஸ்ட் சர்ச் மகளிர் அணியை வெற்றி கொண்டு முன்றாம் இடத்தை பெற்றது.
பிளேட் கிண்ணத்துக்கான போட்டியில் DS சேனநாயக்க கல்லூரி அணி, மாரிஸ் டெல்லா கல்லுரி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அதுபோன்று பெண்களுக்கான போட்டியில் மிவ்சியஸ் அணியும், விசாகா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டு பிளேட் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டது.