LSR கொழும்பு மரதன் போட்டிகள் நாளை ஆரம்பம்

409
LSR Colombo Marathon
Image courtesy www.srilankamarathon.org

LSR கொழும்பு மரதன் போட்டிகள் 16வது தடவையாகவும், நாளை (ஒக்டோபர் 02) காலை 6.00 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள விளையாட்டு அமைச்சகத்திற்கு அருகில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

சர்வதேச அளிவில் வரவேற்பைப் பெற்ற இந்த மரதன் போட்டி லங்கா ஸ்போர்ட்ஸ்ரெயிஸின் எனும் பயண முகவர் நிறுவனத்தால் முதலில், LSR சர்வதேச மரதன் போட்டி எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் போட்டியானது, வரலாற்று புகழ் மிக்க காலி நகரத்தில், 28 வெளிநாட்டவர்கள் மற்றும் 328 உள்ளூர் போட்டியாளர்களின் பங்குபற்றுதலோடு இடம்பெற்றது. சர்வதேச அளவில் பிரபலமடைந்த இந்த மரதன் போட்டி, பிற்காலத்தில் நீர்கொழும்பு, கண்டி மற்றும் தம்புள்ள ஆகிய பிரதேசங்களிலும் நடத்தப்பட்டது.

அதன் பின்னர் 2004ஆம் ஆண்டு, இப்போட்டியை தொடர்ந்து கொழும்பில் நடாத்த முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே லண்டன், நியூயோர்க், ஹவாய் மற்றும் சிங்கப்பூர் நகரங்களின் பெயர்களில் மரதன் ஓட்டப்போட்டி நடைபெறுவது போல், இதன் பெயரும் மாற்றப்பட்டது. அதன்படி, இது LSR கொழும்பு மரதன் போட்டி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அத்துடன், மரதன் மற்றும் நெடுந்தூர ஓட்ட பந்தையங்களுக்கான சங்கம் (AIMS), இந்தப் போட்டிக்கு வாக்களிக்கும் உரிமையையும் வழங்கியுள்ளது. சர்வதேச அளவில் நடைபெறும் 110 போட்டிகளில் 56 போட்டிகளுக்கு மட்டுமே இந்த கெளரவம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கடந்த ஆண்டு 15ஆவது தடவையாக நடைபெற்ற போட்டியில் 6400 ஓட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். அவர்களில், 39 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 200 வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டனர். அதேபோன்று 700 உத்தியோகபூர்வ அதிகாரிகள் இப்போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு ஈடுபடுத்தப்பட்டனர். இம்முறை 7,500க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்குபற்றி புதிய மைல்கல் எட்டப்படும் என போட்டி ஏற்பட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

போட்டி பிரிவுகள்

  • முழு மரதன்– 18 வயது மற்றும் மேல்ஆண்கள் / பெண்கள்
  • முழு மரதன்– 50 வயது மற்றும் மேல்ஆண்கள் / பெண்கள் (முதியோர்)
  • அரை மரதன்– 17 வயது மற்றும் மேல்ஆண்கள் / பெண்கள்
  • அரை மரதன் – 50 வயது மற்றும் மேல்ஆண்கள் / பெண்கள் (முதியோர்)
  • முழு மரதன் – 18 வயது மற்றும் மேல்ஆண்கள் / பெண்கள்
  • குதுகல ஓட்டம் 10KM – 15 வயது மற்றும் மேல்ஆண்கள் / பெண்கள் பாடசாலை/வேறு பிரிவுகள்)
  • குதுகல ஓட்டம் 5KM – 15 வயது மற்றும் மேல்ஆண்கள் / பெண்கள் (பாடசாலை/வேறு பிரிவுகள்)

போட்டிகளின் தூரம்

  • முழு மரதன்   -42.195 km 
  • அரை மரதன்   -21.097 km