கிரிக்கட் வரலாற்றில் இன்று : ஒக்டோபர் மாதம் 01

372

2000ஆம் ஆண்டு – நியூசிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த சிம்பாப்வே

2000ஆம் ஆண்டு நியூசிலாந்து கிரிக்கெட் அணி சிம்பாப்வே மண்ணில் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த ஒருநாள் தொடரின் 1ஆவது போட்டியில் நியூசிலாந்து அணியும் 2ஆவது போட்டியில் சிம்பாப்வே அணியும் வெற்றி பெற்று இருந்த நிலையில் 3ஆவதும் இறுதியுமான  ஒருநாள் போட்டி புலவாயோ குயின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. அதன் படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ஓட்டங்களை பெற்றது. நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் கிரேக் மெக்மிலன் 78 ஓட்டங்களையும், ரொக்கர் டுவோஸ் 63 ஓட்டங்களையும், நேதன் எஸ்டல் 35 ஓட்டங்களையும், எடம் பெரோரி 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். சிம்பாப்வே அணி தரப்பில் பந்து வீச்சில் ஹீத் ஸ்ட்ரிக், பிரையன் ஸ்ட்ரென் மற்றும் நெகலா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றினர்.

பின்னர் 265 ஓட்டங்களை பெற்றால் ஒருநாள் தொடர் வெற்றி என்ற இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 47.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 268 ஓட்டங்களை பெற்று 13 பந்துகளை மீதம் வைத்து 6 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது. சிம்பாப்வே அணி சார்பாக எலாஸ்டயர் கெம்பல் மிகவும் சிறப்பாக ஆடி 124 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 99 ஓட்டங்களையும், டொக் மறிலியர் 46 ஓட்டங்களையும், எண்டி பிளவர் 46 ஓட்டங்களையும், ஸ்டூவர்ட் கார்லிஸ்ல் 30 ஓட்டங்களையும், கேய் வைட்டல் ஆட்டம் இழக்காமல் 28 ஓட்டங்களையும் பெற்று சிம்பாப்வே அணியை வெற்றியின் பக்கம் எடுத்து சென்றனர். எலாஸ்டயர் கெம்பல் மற்றும் கேய் வைட்டல் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டுக்காக 4 ஓவர்களில் 42 ஓட்டங்களை விளாசி தமது அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதில் வைட்டல் 14 பந்துகளில் தான் 28 ஓட்டங்களை வேகமாக பெற்று இருந்தார்.

நியூசிலாந்து அணியின் பந்து வீச்சில் ஷென் ஓ கோர்னர் 2 விக்கெட்டுகளை வீழ்த்த கிரேக் மெக்மிலன் 1 விக்கெட்டை கைப்பற்றினார். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக எலாஸ்டயர் கெம்பல் தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் சிம்பாப்வே அணி ஒருநாள் தொடரை 2 – 1 என்ற ரீதியில் வெற்றி கொண்டது.

கிரிக்கெட் வரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் 30

ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1910ஆம் ஆண்டு –  அல்மா ஹன்ட் (மேற்கிந்திய தீவுகள்)
  • 1943ஆம் ஆண்டுநவ்ஷாத்  அலி (பாகிஸ்தான்)
  • 1953ஆம் ஆண்டுஅர்ஷத் பர்வேஸ்  (பாகிஸ்தான்)
  • 1956ஆம் ஆண்டுமேரி கார்னிஷ் (அவுஸ்ரேலியா)
  • 1961ஆம் ஆண்டுகார்ரி வான் சயில் (தென் ஆபிரிக்கா)
  • 1967ஆம் ஆண்டுமைக் ஸ்மித் (இங்கிலாந்து)
  • 1970ஆம் ஆண்டுஅஜித் வீரக்கொடி (இலங்கை)
  • 1978ஆம் ஆண்டுடோமினிக் த்ரோன்லி (அவுஸ்ரேலியா)
  • 1978ஆம் ஆண்டுஅமித் பண்டாரி (இந்தியா)
  • 1978ஆம் ஆண்டுரிஸ்வான் அஹமத்   (பாகிஸ்தான்)
  • 1985ஆம் ஆண்டுநசிமுடீன்  (பங்களாதேஷ்)
  • 1987ஆம் ஆண்டுஜீஷான் ஷா (டென்மார்க்)
  • 1991ஆம் ஆண்டுஆசிப் அலி  (பாகிஸ்தான்)
  • 1992ஆம் ஆண்டுயசோத லங்கா (இலங்கை)
  • 1993ஆம் ஆண்டுரிசார்ட் வில்லியம்ஸ் (தென் ஆபிரிக்கா)
  • 1994ஆம் ஆண்டுசயீத் ஷிர்சாத் (ஆப்கானிஸ்தான்)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்