பிரபல ”கிரிக்கெட் வினா விடை போட்டி” இன்னும் இரு வாரங்களில்!

366
Sri Lanka’s most popular Cricket Quiz happen

இலங்கையில் இடம்பெறும் பிரமாண்டமான மற்றும் பலரது எதிர்பார்ப்பையும் கொண்ட க்ளிட்ஸ் கிரிக் வினா விடை போட்டி, தொடர்ச்சியாக  நான்காவது முறையாக இவ்வருடமும் இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி கொழும்பு DHPL உள்ளரக அங்கில் ஆரம்பமாகவுள்ளது. இந்த வினா விடை போட்டி, இலங்கையில் அதிகமானவர்களால் நேசிக்கப்படுகின்ற கிரிக்கெட் போட்டிகளை மையமாகக் கொண்டு, டெஷிங் இவென்ட்ஸ் நிறுவனத்தின் வழிகாட்டலின் கீழ் அனைவரையும் கவரும் வகையில் க்ளிட்ஸ் ஒழுங்கு செய்கின்றது. இதற்கான ஊடக அனுசரணையை thepapare.com வழங்குகின்றது.


இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும் 5 அங்கத்தவர்களை கொண்டிக்கும் அதே வேளை, 5 சுற்றுக்களில் சுமார் 50 கேள்விகளுக்கு ஒரு குழு பதிலளிக்க வேண்டும். இதில் டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட், டி-20 கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வரலாறு, வீரர்கள், போட்டி நடுவர்கள், நிகழ்விடம் உட்பட கிரிக்கெட் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான கேள்விகளும் கேட்கப்படும்.

இந்த போட்டிகளில் வர்த்தக நிறுவங்கள், பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட குழுக்கள் என அனைத்து தரப்பினருக்கும் கலந்து கொள்ள முடியும். போட்டியின் நிறைவில், வெற்றியாளர்களுக்கு பணப்பரிசில்கள், கிண்ணங்கள் உட்பட பல பரிசுகள் வழங்கப்படும்.

இலங்கையில் நடைபெறக்கூடிய மிகவும் பிரபலமான வர்த்தகக் கண்காட்சிகள், சர்வதேச மாநாடுகள், திருமண வைபவங்கள் உட்பட பல்வேறு பெரிய அளவிலான நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யும் முன்னணி நிறுவனமான டெஷிங் இவென்ட்ஸின் வழிகாட்டலில் இந்த போட்டி ஏற்பாடு செய்யப்படுகின்றமை மக்கள் மத்தியிலான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தொடர்ந்து நான்காவது முறையாக இடம்பெறும் இவ்வருடப் போட்டிகளுக்கு, முதலில் பதிவு செய்யும் 30 அணிகளுக்கு மாத்திரமே போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

அணிகளைப் பதிவு செய்வதற்கு

மின்னஞ்சல் முகவரி – [email protected]

தொலைபேசி இல – 0727-249324 (ஷெஹான்)