மற்றொரு சர்வதேச பட்மின்டன் தொடரில் பங்குகொள்ளும் கருணாரத்ன சகோதரர்கள்

299
Niluka & Dinuka

இலங்கையின் பட்மின்டன் சம்பியனாகவும் ஒலிம்பிக்கில் பங்குபற்றிய வீரருமான நிலுக கருணாரத்ன மற்றும் அவருடைய இளைய சகோதரர் தினுக கருணாரத்ன ஆகியோர், பிறேக் திறந்த பட்மின்டன் சம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக செக் ககுடியரசிற்கு செல்ல உள்ளனர். இப்போட்டிகள் செப்டெம்பர் 29ஆம் திகதி முதல் ஒக்டோபர் 1ஆம் திகதி வரை நடைபெற உள்ளன.

கருணாரத்ன சகோதரர்கள் தற்போது ஐரோப்பாவில் இடம்பெறும் பெல்ஜியன் திறந்த போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர். இருவரும் அங்கிருந்தே சர்வதேச பட்மின்டன் சம்மேளனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிறேக் சம்பியன்ஷிப்பில் பங்குகொள்ள செக் குடியரசிற்கு பயணமாகவுள்ளனர். நிலுக்க கருணாரத்ன இப்போட்டிகளில் 8ஆம் தர வகை வீரராக பங்குபற்றுவதோடு, தனியாகவும் தனது சகோதரருடன் இணைந்து கூட்டு போட்டியிலும் விளையாடவுள்ளார்.

நிலுக்க கருணாரத்ன தனது முதல் போட்டியில் ஸ்லோவாக்கிய நாட்டு வீரர் மிலான் லுடிக்கை சந்திக்கவுள்ளதோடு, ஆண்களுக்கான கூட்டு போட்டியில் விளையாடுவதற்காக தெரிவுப் போட்டி ஒன்றிலும் விளையாட உள்ளார். கருணாரத்ன சகோதரர்கள் கூட்டு தெரிவுப் போட்டியில் ஹங்கேரி நாட்டை சேர்ந்த மார்டினென்கோ மைகோலா மற்றும் டொன் சர்ஜெய் ஆகியோருடன் மோதவுள்ளனர். மார்டினென்கோ மைகோலா முன்னிலை தர வீரர் என்பதால் இப்போட்டி கருணாரத்ன  சகோதரர்களுக்கு சவாலாக அமையும்.

திணுக கருணாரத்னவும் ஆண்களுக்கான தனி போட்டியில் பங்குகொள்ளவுள்ளதோடு, தனது முதல் போட்டியில் பின்லாந்து நாட்டை சேர்ந்த ஈட்டு ஹெயினோ உடன் மோத உள்ளார்.

இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் நிலுக கருணாரத்னவிற்கு உலக பட்மின்டன் தர வரிசையில் முன்னிலை அடையலாம் என்பது உறுதியாகியுள்ளது. ஒலிம்பிக் செல்ல முன் 93ஆவது இடத்தில் காணப்பட்ட நிலுக கருணாரத்ன, ஒலிம்பிக் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக 18 இடங்கள் முன்னேறி தற்போது 75ஆவது இடத்தில் உள்ளார்.

போட்டி நடைபெறும் தினங்கள்

ஆண்களுக்கான தனி போட்டி: நிலுக கருணாரத்ன மற்றும் மிலான் லுடிக்செப்டெம்பர் 29ஆம் திகதி

ஆண்களுக்கான தனி போட்டி: தினுக கருணாரத்ன மற்றும் மிலான் லுடிக்செப்டெம்பர் 29ஆம் திகதி

ஆண்களுக்கான கூட்டு போட்டிகள்: கருணாரத்ன சகோதரர்கள் ஜோடி மற்றும் மார்டினென்கோ மைகோலா, டொன் சர்ஜெய் ஜோடிசெப்டெம்பர் 28ஆம் திகதி