2016ஆம் ஆண்டுக்கான முரளி கிண்ண போட்டிகளின் இறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில் ஆண்கள் பிரிவில் காலி மஹிந்த கல்லூரி அணியும் பெண்கள் பிரிவில் நிட்டம்புவ பெண்கள் அணியும் வெற்றி கொண்டன.
இன்று நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள்
ஆண்களுக்கான இறுதிப் போட்டி
கொழும்பு நாலந்த கல்லூரி எதிர் காலி மஹிந்த கல்லூரி
நாலந்த கல்லூரி மற்றும் மஹிந்த கல்லூரி அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு நாலந்த கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
போட்டியின் சுருக்கம்
கொழும்பு நாலந்த கல்லூரி – 117/9 (20)
கசுன் சந்தருவான் 33, தசுன் செனவிரத்ன 28, சச்சின்த மதுமல் 22
ரேஷன் கவிந்த 17/3, கே. கவின் 27/2
காலி மஹிந்த கல்லூரி – 120/2 (16.4)
ரவிந்து வெலிஹிந்த 49*, நிபுன் மலிங்க 30*, ரேஷன் கவிந்த 28
லக்சித மனசிங்க 19/2
காலி மஹிந்த கல்லூரி 8 விக்கெட்டுகளால் வெற்றி
பெண்களுக்கான இறுதிப் போட்டி
நிட்டம்புவ பெண்கள் அணி எதிர் மாத்தளை பெண்கள் அணி
நிட்டம்புவ பெண்கள் அணி மற்றும் மாத்தளை பெண்கள் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மாத்தளை பெண்கள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
போட்டியின் சுருக்கம்
மாத்தளை பெண்கள் அணி – 84/10 (17.1)
நிலுகா அமரசேன 20, டில்ருக்ஷி அரம்பேகொட 14*, சந்தமினி லங்கா 14
ஷானிகா தரூஷி 13/2, கயனி காஞ்சனா 29/2
நிட்டம்புவ பெண்கள் அணி – 85/4 (15.3)
பபசரா ரணபாஹு 26, மலீஷா சஷினி 17*, றுவணி மதுசிகா 15*
ரபி ரஜிந்த 17/2
நிட்டம்புவ பெண்கள் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி