கிரிக்கட் வரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் 25

11927
OTD-Sep-25

1969ஆம் ஆண்டுஹன்ஸி கொன்ஜே பிறப்பு

தென் ஆபிரிக்க  கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மற்றும் துடுப்பாட்ட வீரரான ஹென்ஸி கொன்ஜேவின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் – வெஸ்ல்  ஜொஹன்னஸ் கொன்ஜே

பிறப்பு – 1969ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி

பிறந்த இடம்ப்லோம்ஃபாந், ஆரஞ்சு மாநிலம்

இறப்பு – 2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் 01ஆம் திகதி

இறக்கும் போது வயது – 32 வயது 249 நாட்கள்

விளையாடிய காலப்பகுதி – 1992ஆம் ஆண்டு தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி

விளையாடிய அணிகள்அயர்லாந்து, தென் ஆபிரிக்கா, லேசெஸ்டெர்ஷைர்

துடுப்பாட்ட பாணிவலதுகை துடுப்பாட்டம்

உறவுகள்ஏவி கொன்ஜே (தந்தை), பிரன்ஸ் கொன்ஜே (மூத்த சகோதரர்)

விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் – 188

மொத்த ஒருநாள் ஓட்டங்கள் – 5565

அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் – 112

ஒருநாள் துடுப்பாட்ட சராசரி – 38.64

விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் – 68

மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் – 3714

அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் – 135

டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி – 36.41

ஹன்ஸி கொன்ஜே 2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமானப் பயணமொன்றில் இருந்த போது அவர் பயணித்த விமானம் தென் ஆபிரிக்க நாட்டின் மேற்கு கேப் டவுன் நகரில் அமைந்துள்ள கிரேட்கொக் சிகரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதன் விளைவாக அவர் தனது 33 வயதை எட்ட 116 நாட்கள் மீதம் இருந்த நிலையில் உயிரிழந்தார்.


2004ஆம் ஆண்டுசம்பியனானது மேற்கிந்திய தீவுகள் அணி

2004ஆம் ஆண்டு . சி. சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை, தொடரை நடாத்திய இங்கிலாந்து அணி எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் இங்கிலாந்து அணியை துடுப்பாட அழைப்பு விடுத்தது. இதன் படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் மார்கஸ் ட்ரிஸ்கொர்திக் 104 ஓட்டங்களைப் பெற ஏஷ்லி கைள்ஸ் 31 ஓட்டங்களைப் பெற்றார்.

இவர்களைத் தவிர மற்ற வீரரக்ள் 20 ஓட்டங்களுக்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சில் வேவல் ஹிண்ட்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்த இயன் பிரெட்ஷோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 218 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் ஆரம்பம் முதல் விக்கெட்டுகளை பறிகொடுத்து ஒரு நிலையில் 147 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி சென்று  கொண்டிருந்தனர்.

ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த விக்கெட் காப்பாளர் கோர்ட்னனி பிரவுன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் இயன் பிரட்ஷோ ஆகியோர் மிகவும் நிதானமாக ஆடி 71 ஓட்டங்களை 9ஆவது விக்கெடுக்காக பகிர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி சம்பியன்ஸ் கிண்ணத்தை சுவீகரிக்க உதவினார்கள்.

இதன்படி இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 48.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்று 7 பந்துகள் மீதம் இருக்க 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில் கோர்ட்னி பிரவுன் ஆட்டம் இழக்காமல் 35 ஓட்டங்களையும், இயன் பிரட்ஷோ ஆட்டம் இழக்காமல் 34 ஓட்டங்களையும்,  சிவநரேன் சந்தரபோல் 47 ஓட்டங்களையும்  பெற்றனர்.

கிரிக்கட் வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 24

இங்கிலாந்து அணியின் பிளின்டாப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். போட்டியின் நாயகனாக பந்து வீச்சு துடுப்பாட்டம் இரண்டிலும் பிரகாசித்த இயன் பிரட்ஷோ தெரிவு செய்யப்பட்டதோடு தொடரின் நாயகனாக ராம்நரேஷ் ஸர்வான் தெரிவு செய்யப்பட்டார்.


செப்டம்பர் மாதம் 25ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1929ஆம் ஆண்டுஜோன் ரதெர்பொர்ட் (அவுஸ்திரேலியா)
  • 1944ஆம் ஆண்டுகிரேசன் ஸ்லிங்போர்ட் (மேற்கிந்திய தீவுகள்)
  • 1962ஆம் ஆண்டுராஜு குல்கர்னி (இந்தியா)
  • 1965ஆம் ஆண்டுடேவ் ரண்டல் (தென் ஆபிரிக்கா)
  • 1977ஆம் ஆண்டுஃபர்ஹான் ஆதில் (பாகி ஸ்தான்)
  • 1987ஆம் ஆண்டுஆடம் லைத் (இங்கிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்