சிட்னி சர்வதேச பேட்மின்டன் போட்டிகளில் இலங்கை போராடித் தோல்வியுற்றது

314
Sydney International Badminton: Sri Lankans restricted

சர்வதேச லி நிங் பேட்மின்டன் தொடர் அவுஸ்திரேலியாவில், கடந்த 2016 செப். 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை, நியூ சௌத் வேல்ஸ்சிலுள்ள சிட்னி ஒலிம்பிக் விளையாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நன்கு போட்டியாளர்களான இஷாடிகா கவிந்தி, புவனேக்க குணதிலக்க, சச்சின் டயஸ் ஆகியோருடன் திலினி ப்ரமோதிக்கா ஹென்தஹேவா கலந்துகொண்டனர்.

இந்தப் போட்டித் தொடரானது சர்வதேச பேட்மின்டன் சம்மேளனதின் வீரர்களை தரப்படுத்தும் செயல்முறையில் தகுதிகாண் வடிவமாகும். அந்த வகையில் போட்டித்தொடரின் முதல் நாளில் உலக தர வரிசையில் 560வது இடத்தில் இருக்கின்ற இஷாடிகா கவிந்தி அவுஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்திய விக்டோரியாவுக்கு எதிராக 21-12 மற்றும் 21-15 செட் கணக்கில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக்கொண்டார்.

அடுத்ததாக, கலப்பு இரட்டையர் பிரிவில் தகுதிகாண் போட்டியில், சச்சின் டயஸ் மற்றும் திலினி ப்ரமோதிக்கா, இந்தோனேசியாவைச் சேர்ந்த வில்லியம் ஹாட்ஜோனோ மற்றும் ஸிஸிலி பிங் (அவுஸ்திரேலியா) ஜோடிக்கு எதிராக 21-6, 21-10 செட் கணக்கில் வெற்றி பெற்று கொண்டாலும், இரண்டாம் சுற்றில் கொரியா நாட்டைச் சேர்ந்த ஜுங் யங் கியோன் மற்றும் கிம் நா யங் இரட்டையரிடம் தோல்வியுற்றனர். முதலாம் சுற்று 17-21 செட் கணக்கில் இலங்கை இரட்டையருக்கு சாதகமாக இருந்த போதிலும், இரண்டாம் சுற்று 21-12 மற்றும் 21-17 செட் கணக்கில் பின்னிலைப்படுத்தியது.

அடுத்த இரட்டையர் போட்டிக்காக இணைந்த இஷாடிகா கவிந்தி மற்றும் புவனேக்க குணதிலக்க ஜோடி, கொரியன் பார்க் கியோன் நாம் மற்றும் பார்க் சூ ஹியுன் ஜோடிக்கு எதிரான போட்டியில் 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தது.

தொடர்ந்து, திலினி ப்ரமோதிக்காவுடனான ஒற்றையர் தகுதிகாண் போட்டியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஷிரோரி சைட்டோவால் 21-14, 21-10 செட் கணக்கில் தோல்வியுற்றார். அதன் பின் கலந்து கொண்ட இஷாடிகா கவிந்தி, ஒற்றையர் பிரிவில் மன்லின் யாங் உடனான 21-13, 15-21, 21-13 கணக்கில் தோல்வியுற்று போட்டித் தொடரிலிருந்து வெளியேறினார்.

சச்சின், மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அந்தோனி ஜோ போட்டியில் பெறுபேறுகள் அவுஸ்திரேலியாவுக்கு சாதகமாகவே இருந்தது, தொடர்ந்து 10 நிமிடத்தில் புவனேக்க குணதிலக்க, சைனீஸ் தாய்பே பேட்மின்டன் வீரரான, சன் வெய் செனல்சோ உடனான போட்டியில் 21-17, 21-17 என்ற செட் கணக்கில் பெற்ற வெற்றி ஆறுதலளித்தது.

இஷாடிகா கவிந்தி மற்றும் திலினியிடனான பெண்கள் இரட்டையர் போட்டியில் சீன நாட்டு க்சியா சன்னியு மற்றும் வூ கியான் ஜோடிகளால் 21-19, 21-18 ரீதியில் தோல்வியுற்றனர். முதல் நாளுக்குரிய இறுதிப்போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சச்சின் மற்றும் புவனேக அவுஸ்திரேலிய ஹொவ் கீத் ஓன் மற்றும் ஜேக்கப் வீரர்களை தோல்வியுறச் செய்து போட்டித்தொடரில் தொடர்ந்திருந்தனர்.

இப்போட்டித்தொடரில், இறுதி நாள் வரை சச்சினும், புவனேகவும் மாத்திரமே 42 புள்ளிகளைப் பெற்று போட்டிகளில் தொடர்ந்திருந்தனர். ஏனையோர் தொடர் தோல்விகளால் போட்டித்தொடரில் இருந்து விலக நேரிட்டது. எனினும், சச்சின் மற்றும் புவனேகா பங்குகொண்ட ஆண்கள் இரட்டையர் பிரிவு கொரியாவுக்கு எதிரான போட்டியில் கிம் டோங் ஹன் மற்றும் லீ சூனிடம் 14-21, 21-17 மற்றும் 21-10 செட் கணக்கில் போராடித் தோல்வியுற, இலங்கை வீரர்களின் இறுதி எதிர்பார்ப்பும் முடிவுற்றது.