முரளி கிண்ணம் 2016 – செப் 21: போட்டி முடிவுகள்

3900
Murali Cup - Sep 21

இலங்கை முழுவதிலும் கிரிக்கட்டை மேம்படுத்தி இலங்கையின் கிராமப் புறங்களில் உள்ள பாடசாலை கிரிக்கட் வீரர்களை ஊக்குவிக்க மற்றும் வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களிடையே கிரிக்கட் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் முரளி கிண்ண கிரிக்கட் போட்டிகள் இன்று முதல் 25ஆம் திகதிவரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், மாங்குளம்,போன்ற பகுதிகளில் இருபதுக்கு இருபது போட்டிகளாக நடத்தப்படவுள்ளன. இப்போட்டியில் 16 ஆண்கள் அணிகள் மற்றும் 8 பெண்கள் அணிகள் பங்கேற்க உள்ளதோடு இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு நிலும்பியசவில் நேற்று மாலை மூன்று மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை கிரிகெட் அணியின் முன்னால் தலைவரும், விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார விசேட அதிதியாக கலந்துகொண்டு ஆரம்ப நிகழ்வை சிறப்பித்து வைத்தார்.

இன்று நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள்


புனித ஜோசப் கல்லூரி எதிர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி

புனித ஜோசப் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.  போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி முதலில் புனித ஜோசப் கல்லூரி அணியை துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தது.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி – 187/2 (20)

ரெவின் கெலே 101*, ஜெஹான் டேனியல் 67*, டரியோ தசநாயக்க 14

சிவபதசுந்தரம் அலன்ராஜ் 41/1, பாலரூபன் குகசதுஸ் 32/1

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி – 155/7 (20)

ஸ்ரீகாந்த்ராஜா கௌதமன் 38, விஜிலியஸ் டினோஜன் 34, மதுஷன் 27*, அலன்ராஜ் 19

ஜெஹான் டேனியல் 31/2, சச்சித டி சில்வா 27/2

புனித ஜோசப் கல்லூரி அணி 32 ஓட்டங்களால் வெற்றி


கிளிநொச்சிமுல்லைத்தீவு இணைந்த கல்லூரிகள் எதிர் நாலந்த கல்லூரி

கிளிநொச்சிமுல்லைத்தீவு இணைந்த கல்லூரிகள் மற்றும் நாலந்த கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டி கிளிநொச்சியில் நடைபெற்றது.  போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நாலந்த கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

நாலந்த கல்லூரி – 134/10 (19.1)

தினிது விஜேவர்தன 59, தில்ஹார பொல்கம்பல 14, தசுன் செனவிரத்ன 13

அருணாச்சல அகிலன் 19/3, விக்னேஸ்வரன் பிரணவன் 40/3, சிவகுமார் பிரதீபன் 19/2

கிளிநொச்சிமுல்லைத்தீவு இணைந்த கல்லூரிகள் 78/10 (18.1)

அனுக்ஷன் 12, முகுந்தன் நிதுஷன் 10, யோகேஸ்வரன் சஜீவன் 11

தசுன் செனவிரத்ன 6/3, கசுன் சந்தருவன் 0/2, உமேக்ஷ டில்ஷான் 19/2

நாலந்த கல்லூரி அணி 56 ஓட்டங்களால் வெற்றி


மன்னார்வவுனியா இணைந்த கல்லூரிகள் எதிர் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி

மன்னார்வவுனியா இணைந்த கல்லூரிகள் மற்றும் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டி முல்லைத்தீவில் நடைபெற்றது.  போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி – 114/10 (16.1)

தரிந்து லியனகே 24, அவிஷ்க சந்திரசிறி 16, யசோத் கவிந்த 15

பரமேஸ்வரன் அபீஷன் 28/2, சுஜன் மியஸ் 18/2, திருப்பதிப் பிள்ளை சூரியகாந்தன் 13/1

மன்னார்வவுனியா இணைந்த கல்லூரிகள் – 49/10 (14.1)

சிதம்பரநாதன் ருக்ஷன் 13, விக்னேஸ்வரன் பிரவீன் 08, செல்வராஜ் ருஷாந்தன் 08

யசோத் கவிந்த 10/3, டில்ஷான் வலிசுந்தர 14/3, தரிந்து லியனகே 4/2

கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி 65 ஓட்டங்களால் வெற்றி


சீனிகம இணைந்த கல்லூரிகள் எதிர் மலையக இணைந்த கல்லூரிகள்

சீனிகம இணைந்த கல்லூரிகள் மற்றும் மலையக இணைந்த கல்லூரிகள் அணிகளுக்கு இடையிலான போட்டி யாழ்ப்பாணம் புனித பேட்ரிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.  போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சீனிகம இணைந்த கல்லூரிகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

சீனிகம இணைந்த கல்லூரிகள் – 231/2 (20)

சதுர மிலான் 104*, கவீஷ் தில்ரங்க 53, அமிந்து உதார 28

நுவான் ஜயசுந்தர 27/1, தினுக டி சில்வா 38/1

மலையக இணைந்த கல்லூரிகள் – 111/5 (20)

பி.வி.ஜி சனுக 38*, சமோத் பண்டார 24, நுவான் ஜயசுந்தர 16

நிஷான் ப்ரியங்கர 15/1, நிமேஷ் மெண்டிஸ் 18/1, ஹர்ஷஜித் ருஷான் 18/1

சீனிகம இணைந்த கல்லூரிகள் அணி 120 ஓட்டங்களால் வெற்றி


இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரி எதிர் களுத்துறை மகா வித்தியாலயம்

இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரி மற்றும் களுத்துறை மகா வித்தியாலய அணிகளுக்கு இடையிலான போட்டி கிளிநொச்சியில் நடைபெற்றது.  போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரி – 77/10 (18.3)

ரஜித நிர்மால் 32, கோகன சலோன்கன 08,

டிஷான் லக்ஷித 7/3, ஷகில அலங்க 23/3, சனுக லக்ஷன் 18/2

களுத்துறை மகா வித்தியாலயம் – 79/1 (12)

சத்துமின சில்வா 11, நதீர டில்ஷான் 29*

மேனக ஜனித் டில்ஹார 24/1

களுத்துறை மகா வித்தியாலய அணி 9 விக்கட்டுகளால் வெற்றி


மொனராகல இணைந்த கல்லூரிகள் எதிர் மருதானை சாஹிரா கல்லூரி

மொனராகல இணைந்த கல்லூரிகள் மற்றும் மருதானை சாஹிரா கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மருதானை சாஹிரா கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

மருதானை சாஹிரா கல்லூரி – 61/10 (16.4)

இஷான் சம்சுதீன் 13*, ஹுசைன் சப்ரி ஹுசைன் அன்பாஸ் 10*

கவிஷ்க தினேஷ் 12/3, சேதக தேனுவான் 0/1, அஞ்சுல பிரசஞ்சித் 9/1

மொனராகல இணைந்த கல்லூரிகள்– 65/5 (14.2)

இந்திக நுவான் 26, பசிந்து நிரஞ்சன 13, நிரந்த ஷெஹான் டி சில்வா 11*

சஜித் சமீர 18/1, இஷான் சம்சுதீன் 16/1, முஹமத் ஆதில் 11/1

மொனராகல இணைந்த கல்லூரிகள் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி


யாழ்ப்பாணம் இணைந்த கல்லூரிகள் எதிர் கொழும்பு றோயல் கல்லூரி

யாழ்ப்பாணம் இணைந்த கல்லூரிகள் மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டி யாழ்ப்பாணம் புனித பேட்ரிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் இணைந்த கல்லூரிகள் அணி முதலில்  துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

யாழ்ப்பாணம் இணைந்த கல்லூரிகள் – 81/10 (16.1)

ஜென்னி பிளெமிங் 28, கேசவன் சஜந்தன் 11, சதீஷ் சஜித் 09

அபிஷேக் பெரேரா 8/2, சருக்க ஹதரசிங்ஹ 11/2, கனித் சந்தீப 18/2

கொழும்பு றோயல் கல்லூரி – 85/2 (12.5)

ரொனுக ஜயவர்தன 25, ஹிமேஷ் ராமநாயக்க 35*, கவிந்து மதரசிங்ஹ 12*

வசந்தன் ஜதுஷன் 5/1, ஞாணேஸ்வரம் ரதீஷன் 10/1

கொழும்பு றோயல் கல்லூரி அணி 8 விக்கட்டுகளால் வெற்றி


காலி மஹிந்த கல்லூரி எதிர் திருகோணமலை / பட்டி இணைந்த கல்லூரிகள்

காலி மஹிந்த கல்லூரி மற்றும் திருகோணமலை / பட்டி இணைந்த கல்லூரிகள் அணிகளுக்கு இடையிலான போட்டி முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி மஹிந்த கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

காலி மஹிந்த கல்லூரி – 153/9 (20)

ரவிந்து வெலிஹிந்த 59, ரெஸான் கவிந்த 20, அஷான் கந்தம்பி 19

தெனுரதன் 24/4, சுஜாத் முஹம்மத் 30/3

திருகோணமலை / பட்டி இணைந்த கல்லூரிகள் – 126/10 (19)

முஹமத் பாஹிம் 37, விதுஷன் 20, தெனுரதன் 17

காலி மஹிந்த கல்லூரி அணி 27 ஓட்டங்களால் வெற்றி


சீனிகம பெண்கள் அணி எதிர் மாத்தளை பெண்கள் அணி

சீனிகம பெண்கள் அணி மற்றும் மாத்தளை பெண்கள் அணிகளுக்கு இடையிலான போட்டி மாங்குளத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சீனிகம பெண்கள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

சீனிகம பெண்கள் – 133/4 (15)

இரேஷா சதுரானி 32, கவிஷா தில்ஹாரி 51*, பரமி மஹின்சல 24

சந்தமினி லங்கா 17/1, தீபிகா ரத்நாயக்க 24/1

மாத்தளை பெண்கள் அணி – 134/8 (15)

தீபிகா ரத்நாயக்க 27, ரபி ரஜிந்த 22, சச்சினி தயாரத்ன 13

சத்யா சந்தீபனி 23/

மாத்தளை பெண்கள் அணி 2 விக்கட்டுகளால் வெற்றி


நிட்டம்புவ பெண்கள் அணி எதிர் சக்தி பெண்கள் அணி

நிட்டம்புவ பெண்கள் அணி மற்றும் சக்தி பெண்கள் அணிகளுக்கு இடையிலான போட்டி மாங்குளம் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சக்தி பெண்கள் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

நிட்டம்புவ பெண்கள் அணி – 120/10 (14.3)

சதனி டில்ஷானி 23, என் மலீஷா 24, பபசரா ரணபாஹு 18

சச்சினி செவ்வந்தி 23/3, உதார பண்டார 19/2, திலினி லக்ஷிகா 22/2

சக்தி பெண்கள் அணி – 75/6 (15)

திலினி யசாரா 18, சச்சினி செவ்வந்தி 15*

ஷனிக்கா தருஷி 11/2, ருவனி மதுஷிகா 14/2

நிட்டம்புவ பெண்கள் அணி 45 ஓட்டங்களால் வெற்றி