1991ஆம் ஆண்டு – விஷ்வ பெர்னாண்டோ பிறப்பு
தான் விளையாடிய முதலாவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது பந்து வீச்சில் விக்கட் ஒன்றை கைப்பற்றிய பெருமைக்குரிய இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோவின் பிறந்த தினமாகும்.
- முழுப் பெயர் – முதுதந்திரகே விஷ்வ திலின பெர்னாண்டோ
- பிறப்பு – 1991ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி
- பிறந்த இடம் – கொழும்பு
- வயது – 25
- விளையாடும் காலப்பகுதி – 2016ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையான காலப்பகுதி
- பந்துவீச்சு பாணி – இடதுகை மித வேகப்பந்து வீச்சு
- கல்வி – புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவ
- உயரம் – 5 அடி 10 அங்குலம்
- விளையாடிய டெஸ்ட் போட்டிகள் – 01
- கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் – 01
- சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு – 16/1
- டெஸ்ட் பந்துவீச்சு சராசரி – 16.00
கடந்த ஜூலை மாதம் நடைபெற்று முடிவடைந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விஷ்வ பெர்னாண்டோ இலங்கை டெஸ்ட் குழாமில் இடம்பெற்று காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க வேண்டிய விடயமாகும். 45 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள விஷ்வ பெர்னாண்டோ 30.59 என்ற பந்து வீச்சு சராசரியில் 128 விக்கட்டுகளை வீழ்த்தி உள்ளார். அதில் சிறந்த பந்து வீச்சு 35 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளைக் கைப்பற்றி இருந்தமை ஆகும்.
1970ஆம் ஆண்டு – டெரன் கொப் பிறப்பு
இங்கிலாந்து கிரிக்கட் அணியின் முன்னாள் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டெரன் கொப்பின் பிறந்த தினமாகும்.
- முழுப் பெயர் – டெரன் கொப்
- பிறப்பு – 1970ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி
- பிறந்த இடம் – மொன்க் பிரெட்டன், பான்ஸ்லே, யார்க்ஷயர்
- வயது – 46
- விளையாடிய காலப்பகுதி – 1994ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதி
- பந்துவீச்சு பாணி – வலதுகை மித வேகப்பந்து வீச்சு
- புனைப் பெயர் – ரைனோ, டெஸ்லர்
- உயரம் – 5 அடி 11 அங்குலம்
- மகன் – லியம் கொப்
- விளையாடிய ஒருநாள் போட்டிகள் – 159
- கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் – 235
- சிறந்த ஒருநாள் பந்துவீச்சு – 44/5
- ஒருநாள் பந்துவீச்சு சராசரி – 26.42
- விளையாடிய டெஸ்ட் போட்டிகள் – 58
- கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் – 229
- சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு – 42/6
- டெஸ்ட் பந்துவீச்சு சராசரி – 28.39
- விளையாடிய டி20 போட்டிகள் – 02
- கைப்பற்றிய டி20 விக்கட்டுகள் – 3
- சிறந்த டி20 பந்துவீச்சு – 16/3
- டி20 பந்துவீச்சு சராசரி – 16.33
துடுப்பாட்டத்தில் ஓரளவு துடுப்பாடும் திறன் கொண்ட டெரன் கொப் ஒருநாள் போட்டிகளில் 87 இனிங்ஸ்களில் 12.42 என்ற துடுப்பாட்ட சராசரியில் 609 ஓட்டங்களையும், டெஸ்ட் போட்டிகளில் 86 இனிங்ஸ்களில் 12.57 என்ற துடுப்பாட்ட சராசரியில் 855 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
கிரிக்கட் வரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் 17
செப்டம்பர் மாதம் 18ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1892ஆம் ஆண்டு – சாம் ஸ்டேபிள்ஸ் (இங்கிலாந்து)
- 1940ஆம் ஆண்டு – ப்ரூஸ் முரே (நியூசிலாந்து)
- 1982ஆம் ஆண்டு – நிக்கி பெங் (இங்கிலாந்து)
- 1987ஆம் ஆண்டு – எண்டி சொலமன் (இலங்கை)
- 1988ஆம் ஆண்டு – மொஹித் ஷர்மா (இந்தியா)
- 1988ஆம் ஆண்டு – லுக் பிளேச்சர் (இங்கிலாந்து)
- 1997ஆம் ஆண்டு – தன்வீர் அஹமத் (ஹொங் கொங்)
- 1984ஆம் ஆண்டு – சச்சின் ரணா (இந்தியா)
- 1985ஆம் ஆண்டு – கெரி கிட் (அயர்லாந்து)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்