மாஸ் எக்ட்டிவ் அணிக்கு அதிர்ச்சியைக் கொடுத்த டிமோ அணி

464
Mercantile Cricket

24ஆவது சிங்கர் மேர்க்கன்டைல் 50 ஒவர்கள் கொண்ட சுற்றுப்போட்டி தொடர் 10ஆம் திகதி ஆரம்பமாகியது. ஆரம்பப் போட்டியாக மாஸ் எக்ட்டிவ் அணிக்கும் டிமோ அணிக்குமிடையிலும், 2ஆவது போட்டி சம்பத் வங்கி மற்றும் டெக்செட் ஜேர்ஸி அணிக்குமிடையில் இடம்பெற்றது.

மாஸ் எக்ட்டிவ் vs டிமோ அணி

கடந்த வருடம் பிரிவு B இலிருந்து பிரிவு Aக்கு முன்னேறிய டிமோ அணியினர் நடப்பு சாம்பியனாக உள்ள மாஸ் எக்ட்டிவ் அணியினரை 6 விக்கட்டுகளால் வெற்றி கொண்டனர்.

50 ஓவர்களை எதிர் கொண்டு முதலில் துடுப்பெடுத்தாடிய மாஸ் எக்ட்டிவ் அணியினர் சகல விக்கட்டுகளயும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். இதில் அண்டி சொலமன் 29 ஓட்டங்களையும் மற்றும் அணித்தலைவர் ஜஹான் முபாரக் 21 ஓட்டங்களையும் அதிக பட்சமாகக் குவித்தனர். டிமோ அணி சார்பாகப் பந்துவீச்சில் திக்சில டி சில்வா மற்றும் புளின தரங்க ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினர்.
118 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடிய டிமோ அணியினர் 34 ஓவ்ர்களுக்குள் வெற்றி பெற்றனர்.

ஹசான் துமிந்து 72 பந்துகளில் 52 ஓட்டங்களையும் ரமேஷ் மெண்டிஸ் 26 ஓட்டங்களையும்ம் குவித்தனர். மாஸ் எக்ட்டிவ் அணி சார்பில் பந்துவீச்சில் சச்சித்ர சேனநாயக்க 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

மாஸ் எக்ட்டிவ் – 116 (27.1)
அண்டி சொலமன் 29, ஜஹான் முபாரக் 21, சமீரா சொய்சா 19
பூலினை தரங்க 5/3, திக்சிலே டி சில்வா 23/3, ஜேசன் பெரேரா 2/20

டிமோ அணி – 118/4 (33.3)
ஹசான் துமிந்து 52*, ரமேஷ் மெண்டிஸ் 26*, லக்கண ஜயசேகர 22
சச்சித்ர சேனநாயக்க 2/29


டெக்செட் ஜேர்ஸி vs சம்பத் வங்கி

டெக்செட் ஜேர்ஸி அணியின் தலைவர் மிலிந்த சிறிவர்தன பெற்ற சதம் வீணாகி சம்பத் வங்கி அணியினர் 5 விக்கட்டுகளால் வெற்றி பெற்றனர். இப்போட்டி சர்ரே மைதானத்தில் இடம்பெற்றது.

டெக்செட் ஜேர்ஸி அணியினர் கடந்த வருடம் பிரிவு B இல் விளையாடி பிரிவு A இல் இடம்பிடித்துள்ளனர். ஆரம்பமாகத் துடுப்பெடுத்தாடிய டெக்செட் ஜேர்ஸி அணியினர் 262 ஓட்டங்களைக் குவித்தனர். இதில் சிறிவர்தன 109 பந்துகளை எதிர் கொண்டு 9 பவுண்டரிகள் மர்றும் 6 சிக்ஸர்கள் அடங்கலாக 130 ஓட்டங்களைக் குவித்தார். சரித் அசலங்க 40 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் சம்பத் வங்கி அணியின் தலைவர் ஜீவன் மெண்டிஸ் 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

263 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடிய சம்பத் வங்கி அணியினர் 46.4 ஓவர்களில் 263 ஓட்டங்களைப் பெற்று வெற்றி அடைந்தனர். இதில் ரமேஷ் புத்திக்க 71 பந்துகளில் 90 ஓட்டங்களயும், சமீன் 48, தசுன் சாணக 33 ஓட்டங்களையும் குவித்தனர்.

போட்டியின் சுருக்கம்

டெக்செட் ஜேர்ஸி அணி – 262 (49.1)
மிலிந்த சிறிவர்தன 130, சரித் அசலங்க 40, மினோத் பானுக 27
ஜீவன் மெண்டிஸ் 4/24, நுவான் பெரேரா 2/52 , கசுன் ராஜித 2/71

சம்பத் வாங்கி அணி – 263/5 (46.4)
ரமேஷ் புத்திக்க 90*, சமீன் கந்தணர்ச்சி 48, தாசன் சாணக 33, ஜீவன மெண்டிஸ் 26
சாலன டி சில்வா 2/52