த பப்பரே கூடைபந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் புனித ஜோசப் மகளிர் பாடசாலை அணியை வென்றதன் மூலம்,
தொடர்ந்து மூன்றாவது தடவையாகவும் தனது சாம்பியன் பட்டத்தினை குட் ஷெப்பர்ட் கான்வென்ட் – கொட்டஹேன மகளிர் அணி மீண்டும் சுவீகரித்துக் கொண்டது. இதோ, இப்படித்தான் அவர்கள் கடந்த ஆண்டும், இம்முறையும் வெற்றி மகுடத்தை சூட்டிக்கொண்டார்கள்.
கூடைப்பந்து முதன் முதலாக குட் ஷெப்பர்ட் மாணவிகளுக்கு 1970களின் பிற்பகுதியில், அப்போதிருந்த பாடசாலை அதிபர், புனித செபின் க்ரூஸ் சபையைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய சகோதரி மேரி அவர்களின் தலைமையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இக்கூடைபந்து விளையாட்டுக்கு காலம் சென்ற திரு. சுந்தரலிங்கம் ஆலோசகராக இருந்தார்.
கடந்த 46 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் மிகச்சிறந்த முன்னணி கூடைப்பந்து மகளிர் அணியாக விளங்கியது. 1990இல் எந்த அணியாலும் தோற்கடிக்க முடியாத அணி என பெயர் பெற்றது. 1993இல் இந்துனேஷிய தேசிய கூடைப்பந்து அணியை வெற்றி கொண்ட, இலங்கை தேசிய கூடைப்பந்து அணிக்காக குட் ஷெப்பர்ட் கான்வென்ட்டில் இருந்து பலர் பிரதிநிதித்துவம் செய்திருந்தனர். அதிலிருந்து தேசிய அணிக்கு அதிகளவான சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் விஞ்சியவர்கள் என்ற நாமத்தைப் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து, தமது ஆதிக்கத்தை இலங்கை கூடைப்பந்து ஒன்றியத்தினால் 2014இல் ஒழுங்கு செய்யப்பட்ட அகில இலங்கை மட்டத்திலான சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றும், 2015இல் அகில இலங்கை “ஏ” பிரிவுக்கான சாம்பியன்ஷிப் மற்றும், அகில இலங்கை பாடசாலை சாம்பியன்ஷிப் போட்டிகளில் வென்று இரட்டை மகுடம் சூடிக்கொண்டனர்.
பாடசாலை மட்டத்திலான போட்டிகளில், தற்போதைய பயிற்சியாளர் சுசில் உடுக்கும்புறவின் வழிகாட்டலின் கீழ் த பப்பரே சாம்பியன்ஷிப் 2016 என மறு பெயரிடப்பட்ட பட்டத்தினை வென்று தமது கோட்டையை வலுப்படுத்தினர்.
ஷெரீன் ப்ரீனா முன்னின்று வழிநடத்த, ஷெபர்ட்டியன், அவர்களுடைய குழு மட்டத்திலான போட்டியை லைஸியம் சர்வதேச பாடசாலை–வத்தளைக்கு எதிராக ஆரம்பித்து இரண்டு புள்ளிகளால் வெற்றி பெற்றனர்(40-42). அதிலிருந்து, போட்டிகளின் இறுதி நாள் வரை, இறுதி விசில் ஊதும் வரை வெற்றிகளைக் குவித்துக்கொண்டே இருந்தனர்.
ஜடோ டீ மெல்லோ, தன்னுடைய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, ThePapare.comக்கு தங்களுடைய ஹாட்ரிக் வெற்றியின் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.
”வெற்றி பெற்றது அருமையாய் இருக்கிறது. வெற்றி பெறுவதற்காக மிகவும் கடினமாய் பயிற்சி செய்தோம், மேலும், நாங்கள் விளையாடும் சாம்பியன்ஷிப் அனைத்து போட்டிகளையும் வெல்ல எதிர்பார்க்கிறோம்.”
நான்கு சாம்பியன்ஷிப் போட்டிகள், இதனால்தான் பயிற்சியாளர் சுசில் உடுக்கும்புற தெரிவு செய்யப்பட்டார்.
நீங்கள் நடப்பு சாம்பியனாக இருக்கும் போது, பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய விளையாடுவது மிகவும் கடினம். நாம் அவரிடம் கேட்டோம்,போட்டிக்கு முன்னதாக உங்களுடைய மனவுணர்வுகள் எவ்வாறானதாக இருந்தது. எதிர்பார்ப்புக்கள் தன்னம்பிக்கைக்கு எதாவது ஊக்கத்தை கொடுத்ததா? இல்லையா?
எங்களுக்கு கிடைத்த பதிலானது, அணி, தங்கள் சாம்பியன் பட்டதை மறுபடியும் வெற்றி பெற்று வீட்டுக்கு கொண்டு செல்வதே!
நாங்கள், அவருடன் இச்சாதனை பற்றி ஒரு சுருக்கமான கேள்வி பதில் அமர்வு ஒன்றை நடத்தினோம்.
போட்டிகளுக்கு முன்பே வெற்றி பெறும் அணி என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், 2016 சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு எவ்வாறான பயிற்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன?
“கடந்த வருடம் முதல் இந்த வருடம் வரை பயிற்சி திட்டங்களில் எவ்வித மாற்றங்களும் செய்யவில்லை. ஆனால், போட்டியின் தன்மைக்கேற்ப மற்றும் எதிரணியின் பலம், பலவீனத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை செய்வேன். திட்டமிட்ட படியே எல்லாம் நடந்தது, அத்துடன் பாடசாலையால் முழு ஆதரவு எனக்கு இருந்தது.”
குட் ஷெப்பர்ட் கான்வென்ட் அரையிறுதி போட்டியில் புனித திருக்கன்னியார் மடத்தை 8 புள்ளிகளால் தோல்வியுறச் செய்தது.(28-37) தொடர்ந்து மூன்றாவது தடவையாகவும் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவானதோடு உங்கள்அணிக்கு உணர்ச்சி, அழுத்தம், பதட்டம் எப்படி இருந்தது?
“எங்களுக்கு மிகவும் பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. நான் நினைத்தேன், நானும் என்னுடைய அணியும் நோக்கத்தை அடைய இன்னும்மொரு அடி மாத்திரமே உள்ளது.”
நீங்கள் இறுதிப்போட்டியில் புனித ஜோசப் மகளிர் அணியை மிக நம்பிக்கையோடு எதிர் கொண்டீர்கள். எனினும், போட்டிக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த 160 வினாடிகள் அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். எவ்வாறான வியூகம் அந்த மேலதிக நேரத்தில் எடுக்கப்பட்டது?
“என்னுடைய கவனம் எல்லாம் எதிரணி கோல் போடுவதை தடுத்து ஆடுவதாகவே இருந்தது. அத்துடன், முன் வரிசை வீரர்களை முன்னேறாமல் தடுப்பது. அம்முயற்சி எதிர்பாராத திருப்புமுனைகளைத் தந்தது. இறுதியாக எதிரணியை விட முன்னோக்கி செல்ல வழி வகுத்தது.”
தன்னுடைய கடின உழைப்பை அணிக்கு கொடுத்ததன் மூலம் இறுதியாக
உற்ற பலனை பெற்று கொடுத்தது. அவருடைய திட்டங்களை துல்லியமாக பின் தொடர்ந்து கூடுதல் நேரத்தில், இறுதி வினாடியில் ஹன்சினி மலீஷா மூன்று புள்ளிகளைப் பெற்றுக்கொடுக்க, தீர்க்கமான தருணத்தில் திருப்பு முனையாக போட்டியை வென்று கொடுத்தது.
குட் ஷெப்பர்ட் கான்வென்ட் தனது கைகளுக்குள் வெற்றிக் கிண்ணத்தை பெருமையோடு சுவீகரித்து கொண்டது. இன்று தொடர்ச்சியான வெற்றிகள், நினைவு கேடயங்கள். 5 சாம்பியன் பட்டங்கள் குட் ஷெப்பர்ட் கான்வென்ட்டை அலங்கரித்துக்கொண்டிருக்கிறன.