2001ஆம் ஆண்டு – முரளி அசத்தல், முஹமத் அஷ்ரபுல் சாதனை
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 1ஆவது டெஸ்ட் போட்டி 2001ஆம் ஆண்டு கொழும்பு எஸ். எஸ். சி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீசத் தீர்மானம் செய்தது.
போட்டியின் சுருக்கம்
பங்களாதேஷ் – 90/10
முஹமத் அஷ்ரபுல் 26, மிஹ்ராப் ஹொசைன் 23, அல் ஷாரியார் 16
முத்தையா முரளிதரன் 13/5, சமிந்த வாஸ் 47/3
இலங்கை – 555/5d
மார்வன் அதப்பத்து 201, மஹேல ஜயவர்தன 150, சனத் ஜயசூரிய 89
நைமுர் ரஹ்மான் 117/2, ஹசிபுல் ஹொசைன் 122/1
பங்களாதேஷ் – 328/10
முஹமத் அஷ்ரபுல் 114, அமினுல் இஸ்லாம் 56, நைமுர் ரஹ்மான் 48
முத்தையா முரளிதரன் 98/5, ருச்சிரா பெரேரா 40/3
இலங்கை அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 137 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சுழற்பந்து நட்சத்திரம் முத்தையா முரளிதரன் 10 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார் அத்தோடு முஹமத் அஷ்ரபுல் பங்களாதேஷ் அணியின் 2ஆவது இனிங்ஸின் போது 114 ஓட்டங்களைப் பெற்றார். இது டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் இளம் வயது வீரர் ஒருவரால் பெறப்பட்ட சதமாக கணிக்கப்பட்டது. இந்த சாதனையை அடையும் போது முஹமத் அஷ்ரபுல் வெறுமனே 17 வயது நிரம்பிய வாலிபானாக இருந்தார்.
1952ஆம் ஆண்டு – ஜெஃப் மில்லர் பிறப்பு
இங்கிலாந்து கிரிக்கட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் ஜெஃப் மில்லரின் பிறந்த தினமாகும்.
முழுப் பெயர் : ஜெப்ரி மில்லர்
பிறப்பு : 1952ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 08ஆம் திகதி
பிறந்த இடம் : செஸ்டர்பீல்ட், டெர்பிஷயர்
வயது : 64
விளையாடிய காலப்பகுதி : 1976ஆம் ஆண்டு தொடக்கம் 1984ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி
துடுப்பாட்ட பாணி : வலதுகை துடுப்பாட்டம்
விளையாடும் பாணி : சகலதுறை வீரர்
உயரம் – 6 அடி 2 அங்குலம்
புனைப் பெயர் – டஸ்டி
கல்வி – செஸ்டர்பீல்ட் கிராமர் கல்லூரி
துடுப்பாட்டத்தில்
விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் : 25
மொத்த ஒருநாள் ஓட்டங்கள் : 136
அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் : 46
ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 8.50
விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் : 34
மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 1213
அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் : 98*
டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி : 25.80
பந்து வீச்சில்
பந்து வீசியுள்ள ஒருநாள் போட்டிகள் – 24
கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் – 25
சிறந்த ஒருநாள் பந்துவீச்சு – 27/3
ஒருநாள் பந்துவீச்சு சராசரி – 32.52
பந்து வீசியுள்ள டெஸ்ட் போட்டிகள் – 50
கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் – 60
சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு – 44/5
டெஸ்ட் பந்துவீச்சு சராசரி – 30.98
1991ஆம் ஆண்டு – ரமித் ரம்புகவெல்ல
இலங்கை கிரிக்கட் அணியின் வளர்ந்து வரும் சகலதுறை வீரர் ரமித் ரம்புக்வெல்லவின் பிறந்த தினமாகும்.
முழுப் பெயர் : ரமித் லக்சன் பண்டார ரம்புகவெல்ல
பிறப்பு : 1991ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 08ஆம் திகதி
பிறந்த இடம் : கண்டி
வயது : 25
விளையாடிய காலப்பகுதி : 2013ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையான காலப்பகுதி
துடுப்பாட்ட பாணி : இடதுகை துடுப்பாட்டம்
விளையாடும் பாணி : ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் / சகலதுறை வீரர்
கல்வி – கொழும்பு ரோயல் கல்லூரி
உயரம் – 6 அடி 3 அங்குலம்
விளையாடியுள்ள டி20 போட்டிகள் : 02
மொத்த டி20 ஓட்டங்கள் : 19
அதிகபட்ச டி20 ஓட்டம் : 19
டி20 துடுப்பாட்ட சராசரி : 19.00
இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள ரமித் ரம்புகவெல்ல 1 விக்கட்டை வீழ்த்தி உள்ளார்.
வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 07
செப்டம்பர் மாதம் 08ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1908 ஜானி லிண்ட்சே (தென் ஆபிரிக்கா)
- 1966 குலாம் அலி (பாக்கிஸ்தான்)
- 1969 கே.என் ஆனந்தபத்மநாபன் (இந்தியா)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்