யாழ், பொலன்னறுவை மாவட்டங்களில் மைதானம் அமைக்கத் திட்டம்

4208
SLC to construct stadiums in Polonnaruwa and Jaffna

இலங்கையில் கிரிக்கட்டை முழுமையாகப் பரப்ப மற்றும் விருத்தி செய்யும் வகையில் இலங்கை கிரிக்கட் சபை வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் கிரிக்கட் மைதானங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

இலங்கை கிரிக்கட் சபையின் நிர்வாகக் குழு இலங்கையில் மேலும் 2 மைதானங்களை அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.  வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த திட்டத்திற்கு ரூ 200 மில்லியன் (சுமார் 1.38 மில்லியன் அமெரிக்க டாலர்) ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை கிரிக்கட் சபையின் செயலாளர் மோஹன் டி சில்வா கூறுகையில்நாம் யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை பகுதிகளில் கிரிக்கட் மைதானங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். அதன் படி ஒரு மைதானத்திற்கு 100 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கியுள்ளோம். இந்த மைதானங்களை அமைக்கும் பணி வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும்என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்பொலன்னறுவையில் அமைக்கப்படுவுள்ள மைதானங்களுக்கான இறுதித் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளோம். மைதானத்தோடு பெரிய விளையாட்டு வளாகம் ஒன்றையும் சேர்த்து அமைக்க திட்டம் தீட்டி உள்ளோம். அத்தோடு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள மைதானத்தைப் பொறுத்த வரையில் நாம் அங்கு மைதானம் அமைக்க உகந்த மக்களுக்கு இலகுவில் மைதானத்திற்கு வந்து போக வசதியான இடமொன்றை தேடிக்கொண்டு இருக்கிறோம், வடக்கு பகுதிகளில் புலம் பெயர்ந்தவர்களிற்கிடையே கிரிக்கட்டை விருத்தி செய்யும் நோக்கில் அமைக்கப்பட உள்ள இந்த மைதானங்கள் குறித்து மக்களிடையே மிகப் பெரிய உற்சாகம் காணப்படுகிறது.என்று கூறியுள்ளார்.

ஆரம்பநிலையில் அங்கு அமைக்கப்படும் மைதானங்கள் முதல்தர கிரிக்கட் போட்டிகளுக்கு உகந்த மைதானமாக உருவாக்கப்படும் எனவும் அதன் பின் அந்த மைதானங்களை சர்வதேச போட்டிகளை நடாத்தும் அளவிற்கு மேம்படுத்த உள்ளதாக மோஹன் டி சில்வா கூறியுள்ளார்.

யாழ், மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் மைதானம் அமைப்பது தொடர்பில் உங்களது கருத்துகளை கீழே கொமெண்ட் செய்யவும்.

ஆதாரம்க்ரிக்கின்போ / Cricinfo

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்