வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் மாதம் 31

3404

1998ஆம் ஆண்டுமுரளியின் மந்திரம்

இலங்கை கிரிக்கட் அணி 1998ஆம் இங்கிலாந்து மண்ணிற்கு விஜயம் செய்து ஒரு டெஸ்ட் போட்டியைக் கொண்ட தொடரில் விளையாடியது. இந்தப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீசத் தீர்மானம் செய்தது.

இதன் படி தமது முதல் இனிங்ஸிற்காக ஆடிய இங்கிலாந்து வீரர்கள் சகல விக்கட்டுகளையும் இழந்து 445 ஓட்டங்களைப் பெற்றனர். இதில் அதிக பட்சமாக ஜோன் க்ரவ்லி ஆட்டம் இழக்காமல் 156 ஓட்டங்களையும் க்ரெஹம் ஹிக் 107 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் முத்தையா முரளிதரன் 7 விக்கட்டுகளைத் தகர்த்தார். பின் இலங்கை அணி தமது முதல் இனிங்ஸிற்காக ஆடி சகல விக்கட்டுகளையும் இழந்து 591 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக சனத் ஜயசூரிய அபாரமாக ஆடி 213 ஓட்டங்களையும் அரவிந்த டி சில்வா 152 ஓட்டங்களையும் விளாசினார்கள். இங்கிலாந்து அணியின் அங்குஸ் பிரஷர் 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 30

பின்பு 146 ஓட்டங்கள் பின்னிலையில்  தமது 2ஆவது இன்ங்ஸிற்காக ஆடிய இங்கிலாந்து அணி 181 ஓட்டங்களுக்கு சுருண்டது. இலங்கை அணியின் பந்துவீச்சில் முதல் இனிங்ஸில் 7 விக்கட்டுகளைத் தகர்த்த 26 வயது வாலிபன் முத்தையா முரளிதரன் 2ஆவது இனிங்ஸிலும் அற்புதமாக பந்து வீசி 9 விக்கட்டுகளை சாய்த்து தங்களது சொந்த மண்ணிலே இங்கிலாந்து வீரர்களை நிலை குலைய வைத்தார்.

இறுதியாக இலங்கை அணிக்கு 36 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட இலங்கை அணி அந்த இலக்கை விக்கட் இழப்பின்றி 5 ஓவர்களில் அடைந்து 10 விக்கட்டுகளால் வெற்றியைப் பதித்தது. போட்டியின் ஆட்ட நாயகனாக 16 விக்கட்டுகளை வீழ்த்திய செங்கடகல நாயகன்  முத்தையா முரளிதரன் தெரிவு செய்யப்பட்டார்.

1969ஆம் ஆண்டு ஜவகள் ஸ்ரீநாத் பிறப்பு

இந்திய  கிரிக்கட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் மற்றும் கிரிக்கட் போட்டி மதியஸ்தரான ஜவகள் ஸ்ரீநாத்தின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் : ஜவகள் ஸ்ரீநாத்
பிறப்பு : 1969ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி
பிறந்த இடம் : மைசூர், கர்நாடகம்
வயது : 47
விளையாடிய காலப்பகுதி : 1991ஆம் ஆண்டு தொடக்கம் 2003ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதி
பந்துவீச்சு பாணி : வலதுகை மித வேகப் பந்து வீச்சு

விளையாடிய டெஸ்ட் போட்டிகள் – 67
கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் – 236
சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு – 86/8
டெஸ்ட் பந்துவீச்சு சராசரி – 30.49

விளையாடிய ஒருநாள் போட்டிகள் – 229
கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் – 315
சிறந்த ஒருநாள் பந்துவீச்சு – 23/5
ஒருநாள் பந்துவீச்சு சராசரி – 28.08


1977ஆம் ஆண்டு – க்றிஸ் ரோஜர்ஸ் பிறப்பு

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான க்றிஸ் ரொஜர்ஸின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் : கிறிஸ்டோபர் ஜான் லெவ்லின் ரோஜர்ஸ்
பிறப்பு : 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி
பிறந்த இடம் : செயின்ட் ஜார்ஜ், சிட்னி, நியூ சவுத் வேல்ஸ்
வயது : 39
விளையாடும் காலப்பகுதி : 2008ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையான காலப்பகுதி
துடுப்பாட்ட பாணி : இடதுகை ஆரம்ப துடுப்பாட்டம்
உயரம் : 1.77 மீற்றர்
புனைப் பெயர் : பகி

விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் : 25
மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 2015
அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் : 173
டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி : 42.87

ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1869 கிரிகோர் மெக்கிராகோர் (இங்கிலாந்து)
  • 1944 கிளைவ் லொயிட் (மேற்கிந்திய தீவுகள்)
  • 1975 கிரேக் கம்மிங் (நியூசிலாந்து)
  • 1987 சட் சேயர்ஸ் (அவுஸ்திரேலியா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்