வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் மாதம் 30

1811
OTD-Aug-30

1980ஆம் ஆண்டுசுப்ரமணியம் பத்ரிநாத் பிறப்பு

இந்திய கிரிக்கட் அணியின் மத்தியதர வரிசை துடுப்பாட்ட வீரரான  சுப்ரமணியம் பத்ரிநாத்தின் பிறந்த தினமாகும். டி20 போட்டிகளில் குறிப்பாக இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் அதிக தடவை சம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்கிசின் முக்கிய வீரராக சுப்ரமணியம் பத்ரிநாத் கருதப்படுகிறார்.

முழுப் பெயர் : சுப்ரமணியம் பத்ரிநாத்

பிறப்பு : 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி

பிறந்த இடம் : மெட்றாஸ் (தற்போது சென்னை), தமிழ் நாடு

வயது : 36

விளையாடும்  காலப்பகுதி : 2008ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது  வரையான காலப்பகுதி

துடுப்பாட்ட பாணி : இடதுகை மத்தியதர வரிசை துடுப்பாட்டம்

விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் : 07

மொத்த ஒருநாள் ஓட்டங்கள் : 79

அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் : 27*

ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 15.80

விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் : 02

மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 63

அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் : 56

டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி : 21.00

விளையாடியுள்ள டி20 போட்டிகள் : 01

மொத்த டி20 ஓட்டங்கள் : 43

அதிகபட்ச டி20 ஓட்டம் : 43

டி20 துடுப்பாட்ட சராசரி : 43.00


1993ஆம் ஆண்டுஜொண்டி ரூட்சின் 1ஆவது டெஸ்ட் சதம்

1993ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இத்தொடரின் 1ஆவது டெஸ்ட் போட்டி மொரட்டுவ டிரோன் பெர்னாண்டோ மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 331/10

ஹசான் திலகரத்ன 92, ரொஷான் மஹாநாம 53, அர்ஜுன ரணதுங்க 44, ருவன் கல்பகே 42

எலன் டொனால்ட் 69/5, பிரெட் ஷூல்ட்ஸ் 75/4

தென் ஆபிரிக்கா – 267/10

எண்டுரூ ஹட்ஸன் 90, கெப்ளர் வெசல்ஸ் 47, பெட் சிமோக்ஸ் 48

முத்தையா முரளிதரன் 104/5, ப்ரமோதய விக்கிரமசிங்க 58/2

இலங்கை – 300/d

அர்ஜுன ரணதுங்க 131, அரவிந்த டி சில்வா 68, ஹசான் திலகரத்ன 33*

பெட் சிமோக்ஸ் 75/3, பிரெட் ஷூல்ட்ஸ் 82/2

தென் ஆபிரிக்கா – 251/7

ஜொண்டி ரூட்ஸ் 101*, டெரியில் களினன் 46, ஜிம்மி குக் 24

அரவிந்த டி சில்வா 35/2, ப்ரமோதய விக்கிரமசிங்க 59/2

போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவு. இந்த போட்டியில் தென் ஆபிரிக்க அணிக்கு 365 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஜொண்டி ரூட்ஸ் நிதானமாக ஆடி தென் ஆபிரிக்க அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.

1979ஆம் ஆண்டுஇயன் பொத்தம் 1000 ஓட்டங்கள்

இந்திய  கிரிக்கட் அணி இங்கிலாந்து மண்ணில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இத்தொடரின் 4ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இடம் பெற்றது.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி தமது முதல் இனிங்ஸில் 305 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கூச் 79 ஓட்டங்களை அதிக பட்சமாகப் பெற்றார்.பின்னர் இந்திய அணி தமது முதல் இனிங்ஸில் 202 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன் மூலம் 103 ஓட்டங்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தமது 2ஆவது இனிங்ஸை ஆடியது. இதில் இங்கிலாந்து அணி 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 334 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடை நிறுத்தியது.

இதன்படி இந்திய அணிக்கு 438 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. அதை நோக்கி ஆடிய இந்திய அணி 5ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 438 ஓட்டங்களைப் பெற்று இருந்தது. இதில் சுனில் கவாஸ்கர் 221 ஓட்டங்களைப் பெற்றார்.

இறுதியில் போட்டி சமநிலையில் முடிந்தது. அத்தோடு இந்தப் போட்டியின் போது இங்கிலாந்து வீரர் இயன் பொத்தம் தனது டெஸ்ட் வாழ்வில் 1000 ஓட்டங்களைக் கடந்தார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 29

ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1930 நோயல் ஹார்போடு (நியூசிலாந்து)
  • 1934 பாலகிருஷ்ணா பாலோ குப்தே (இந்தியா)
  • 1942 பிரவீஸ் சஜ்ஜாத் (பாகிஸ்தான்)
  • 1967 டஸ்டின் வாகன் (நியூசிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்