வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் மாதம் 29

735
OTD-Aug-29

2013ஆம் ஆண்டுபின்ச் சாதனை

2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இந்தப் போட்டி ரோஸ் பௌல் மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானம் செய்தது.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலிய – 248/6 (20)

ஆரோன் பின்ச் 156, ஷென் வொட்சன் 37, ஷோன் மார்ஷ் 28

டேன்பெர்ச் 34/3, ஸ்டிபன் பின் 45/1

இங்கிலாந்து – 209/6 (20)

ஜோ ரூட் 90*, ரவி போபாரா 45, ஜோஸ் பட்லர் 27

மிச்சல் ஜோன்சன் 41/2, ஜோஸ் ஹெசல்வூட் 43/2

அவுஸ்திரேலிய அணி 39 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. அவுஸ்திரேலிய அணி சார்பாக அபாரமாக ஆடிய  ஆரோன் பின்ச் 70 நிமிடங்கள் மைதானத்தில் நின்றாடி 63 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரிகள் மற்றும் 14 சிக்ஸர்கள் அடங்கலாக 156 ஓட்டங்களைப் பெற்றார். இது தான் சர்வதேச டி20 கிரிக்கட் வரலாற்றில் தனி வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதிக பட்ச ஓட்டமாக காணப்பட்டது. ஆயினும் பிந்திய காலப்பகுதியில் க்றிஸ் கெயில் 175 ஓட்டங்களை பெற்றுள்ளது தான் அதிக பட்ச ஓட்டங்களாகும்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 28

ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1857 சான்போர்ட்  ஷூல்ட்ஸ் (இங்கிலாந்து)
  • 1913 லியோனார்டு பட்டர்பீல்டு (நியூசிலாந்து)
  • 1923 ஹிராலால் கெய்க்வாட் (இந்தியா)
  • 1980 முகமது ஷேக் (கென்யா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்