கொழும்பிலுள்ள வசதிகளற்ற இளைஞர்களுக்கு கால்பந்து பயிற்சி முகாம்களை மீளவும் நடாத்துவதற்கு YKK மற்றும் REAL MADRID FOUNDATION ஆகியவை ஒன்றிணைந்துள்ளன . விளையாட்டு மூலமாக சிறுவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
ஆகஸ்ட் 26ஆம் திகதி மீண்டும் ஒரு பயிற்சி முகாமை YKK நிறுவனம் சிறுவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ளது. இவ் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் இம்முறை கொழும்பை சார்ந்த சிறுவர்கள் பயனடையவுள்ளனர். ஆகஸ்ட் 26 முதல் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள YKK ASIA GROUP kids football clinic என்கின்ற பயிற்சி முகாமை YKK HOLDING ASIA தனியார் நிறுவனமும், YKK LANKA தனியார் நிறுவனமும், REAL MADRID FOUNDATION என்கின்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்தவுள்ளது.
மூன்று நாட்கள் இடம்பெற உள்ள இவ் முகாமில் முதலாம் நாள் ஆகஸ்ட் 26 ஆம் திகதி பி.ப 3 மணிக்கு பயிற்சியாளர்களுக்கான முகாமுடன் ஆரம்பிக்க உள்ளது. இவ் முகாமிற்கான உள்நாட்டு பயிற்சியாளர்கள் இலங்கை கால்பந்து சம்மேளனத்தினாலும், பாடசாலைகள் மூலமாகவும் தெரிவுசெய்யப்படுவர். தெரிவு செய்யப்பட்ட இப் பயிற்சியாளர்களுடன் நுட்பங்களை பகிர்ந்துகொள்வதற்காக பப்லோ கோமேஸ் ரெவெங்கா, கார்சியா டோரஸ் மற்றும் டோர்கல் கானோ ஆகியோர் REAL MADRID FOUNDATION மூலம் வரவழைக்கப்படவுள்ளனர்
இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில் உள்நாட்டு பயிற்சியாளர்களுக்கு நேரடி அனுபவம் வழங்கப்படவுள்ளதோடு அவர்கள் REAL MADRID FOUNDATION இனால் வரவழைக்கப்படவுள்ள பயிற்சியாளர்களுக்கு சிறுவர்களை பயில்விப்பதற்கு உதவுவர். SOS Villages மற்றும் பதுளை பாடசாலை சிறுவர்களுக்கு இவர்கள் நேரடிப் பயிற்சி வழங்குவர்.
YHA முன்னெடுத்து வருகின்ற முயற்சிகளின் ஒரு பகுதியாக சிறுவர்களின் ஆரோக்கியத்தை வளர்க்கும் இவ் முகாம் 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்று தொட்டு இவ் முகமானது YKK ASIA GROUP இந்த பிராந்திய சமூக பொறுப்புணர்வு தொடர்பான பிரதான நிகழ்வாக மாறியுள்ளதோடு மற்றும் பல ஆசிய நாடுகளிலும் நடைபெற்று வருகிறது.
YHA வின் தலைமை அதிகாரியான திரு.கொசுக்கே மீமி அவர்கள் கூறுகையில் “இவ் முகமானது சிறுவர்களுக்கு மட்டுமின்றி சமூகத்திற்கும் நலன் அளிக்கும் ஒரு நிகழ்வாகவும் விளையாடுவதற்கான வாய்ப்பை குறைவகக் கொண்டவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகவும் அமைவதோடு சமூகத்தின் மத்தியில் கால்பந்தாட்டத்திற்கான ஆர்வத்தையும் இது அதிகரிக்க செய்யும்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் “எமது நிறுவனம் இது மட்டுமின்றி பல்வேறு சமூக பொறுப்பு செயற்திட்டங்களை செயற்படுத்தி வரும் இவ்வேளையில் உள்நாட்டு சர்வதேச நிறுவனம் என்ற வகையில் இலங்கை சமூகத்திற்கு உதவ வேண்டும் என்ற ஊக்கம் இப்பயிற்சி முகாமை மேலும் வலுவாக்கியுள்ளது” என்று தெரிவித்தார்.
YKK முன்னெடுத்து வருகின்ற இவ் முகாமின் காரணமாக REAL MADRID FOUNDATION இந்த ஸ்பானிய கால்பந்து வீரர்களின் நேரடி வழிகாட்டலை பெரும் வாய்ப்பு பல்லாயிரம் வசதிகளற்ற சிறுவர்களுக்கு கிடைக்கிறது. இச் சிறுவர்களில் சிலர் தொழில்முறை பயிற்றுவிப்பாளர்களின் கீழ் பயிற்சி பெற்று விளையாடும் அறிய வாய்ப்பையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இவ் முகாமில் பங்குபெறும் அனைவருக்கும் YKK மற்றும் REAL MADRID FOUNDATION வழங்கும் பூரண சீருடை தொகுதியொன்றும் (மேற்சட்டை, காற்சட்டை, காலுறை), கால்பந்தாட்ட காலணிகள், சான்றிதழ்கள் மற்றும் நானாவித பொருட்களும் வழங்கப்படவுள்ளன. உள்நாட்டில் கால்பந்தாட்டத்தின் மீதான ஆர்வத்தை வளர்ப்பதற்கு பங்குகொள்ளும் சமூகங்களுக்கு முகாமின் போது காற்பந்துகளும், பயிற்சி உபகரணங்களும் நன்கொடையாக வழங்கப்படவுள்ளன.
வாழ்நாளில் அரிதாக கிடைக்கின்ற இத்தகைய நிகழ்வில் பங்குபற்றும் சிறுவர்களின் வாழ்வில் நல்வழியை உண்டாக்குவதற்கு இத்தகைய செயற்திட்டங்கள் எதோ ஒருவகையில் பங்களிப்பாக இருக்க வேண்டும் என்பதே YKK வின் குறிக்கோளாகும்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்