1952ஆம் ஆண்டு – துலிப் மெண்டிஸ் பிறப்பு
இலங்கை கிரிக்கட் அணியின்முன்னாள் தலைவர் மற்றும் துடுப்பாட்ட வீரரான துலிப் மெண்டிசின் பிறந்த தினமாகும். இலங்கை டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் இலங்கை அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை இந்திய அணிக்கு எதிராக 1985 – 1986 ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு பி.சாரா மைதானத்தில் நடைபெற்ற போது இலங்கை அணியை வெற்றிக்கு வழிநடத்திய பெருமை இவரையே சாரும்.
- முழுப் பெயர் : லூயிஸ் ரோஹன் துலீப் மென்டிஸ்
- பிறப்பு : 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்ஆ 25ம் திகதி
- பிறந்த இடம் : மொரட்டுவ
- வயது : 64
- களத்தடுப்பு இடம் – விக்கட் காப்பாளர்
- விளையாடிய காலப்பகுதி : 1975ஆம் ஆண்டு தொடக்கம் 1989ஆம் வரை
- துடுப்பாட்ட பாணி : வலதுகை துடுப்பாட்டம்
- விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் : 24
- மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 1329
- அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் : 124
- டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி : 31.64
- விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் : 79
- மொத்த ஒருநாள் ஓட்டங்கள் : 1527
- அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் : 80
- ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 23.49
வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 24
1995ஆம் ஆண்டு – அன்றெவ் ஸைமன்ஸ் 254
1995ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து கவுண்டி போட்டி ஒன்றில் கிலாமோர்கன் மற்றும் குளுக்கோஸ்டெர்ஷைர் அணிகள் மோதின இதில் முதலில் ஆடிய கிலாமோர்கன் தமது முதல் இனிங்ஸில் 334 ஓட்டங்களைப் பெற்றது. பின் தமது முதல் இனிங்ஸிற்காக ஆடிய குளுக்கோஸ்டெர்ஷைர் அணி 461 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணி சார்பாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அன்றெவ் ஸைமன்ஸ் ஆட்டம் இழக்காமல் 206 பந்துகளில் 254 ஓட்டங்களைப் பெற்றார். இதில் 22 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்ஸர்கள் உள்ளடங்கும். அன்றெவ் ஸைமன்ஸ் இந்த அதிரடி ஆட்டத்தை ஆடும் போது அவருக்கு வயது வெறுமனே 20 ஆகும்.
ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1906 ஜிம் ஸ்மித் (இங்கிலாந்து)
- 1962 ஷாஹித் மஹ்பூப் (பாக்கிஸ்தான்)
- 1965 சஞ்சீவ் சர்மா (இந்தியா)
- 1967 அணிநா பர்கர் (தென் ஆப்ரிக்கா)
- 1969 விவேக் ரேடான் (இந்தியா)
- 1976 ஜாவேத் காதீர் (பாக்கிஸ்தான்)
- 1981 ஜன் பெரி பர்கர் (நமீபியா)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்