இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது. 118 தரவரிசைப் புள்ளிகளுடன் டெஸ்ட் தொடரைத் தொடங்கிய அவுஸ்திரேலியா 0-3 என தொடரை இழந்தது. கொழும்பில் நடந்த கடைசிப் போட்டியில் 163 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதையடுத்து ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பறிகொடுத்த அவுஸ்திரேலிய அணி, 108 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திற்கு சென்றது. இதனால் 112 புள்ளிகள் பெற்றிருந்த இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியது.
அவுஸ்திரேலிய அணியின் தோல்வி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்ததால் பாகிஸ்தான் அணி 111 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திற்கு முன்னேறியது. அதேசமயம் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்தியா ஜெயிக்காவிட்டால் பாகிஸ்தான் அணி முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறியிருக்கும்.
இலங்கை அணியைப் பொருத்தவரை, 85 தரவரிசைப் புள்ளிகளுடன் இந்தத் தொடரைத் தொடங்கியது. 3 போட்டிகளிலும் அவுஸ்திரேலியாவை வென்றதால் தற்போது 95 புள்ளிகளுடன் தென்ஆபிரிக்காவை முந்தி 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.
டெஸ்ட் தரவரிசை விவரம்: இந்தியா (112), பாகிஸ்தான் (111), அவுஸ்திரேலியா (108), இங்கிலாந்து (108), நியூசிலாந்து (99), இலங்கை (95), தென் ஆபிரிக்கா (92), மேற்கிந்திய தீவுகள் (65), பங்காளதேசம் (57), சிம்பாப்வே (8).