இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கொழும்பில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சண்டிமால் (132), தனஞ்செயா டி சில்வா (129) ஆகியோரின் சதத்தால் 355 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் அவுஸ்திரேலியா அணி முதல் இனிங்ஸைத் தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 141 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் ஷேன் மார்ஷ் 64 ஓட்டங்களுடனும், ஸ்மித் 61 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்தினார்கள்.
அவுஸ்திரேலியா அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 267 ஓட்டங்களாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 246 ஓட்டங்கள் சேர்த்தனர். ஸ்மித் 119 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஹேரத் பந்தில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். மார்ஷ் 130 ஓட்டங்கள் எடுத்த நிலையில் லக்மல் பந்தில் க்ளீன் போல்டானார்.
அடுத்து வந்த வோக்ஸ் 22 ஓட்டங்களிலும், ஹென்றிக்ஸ் 4 ஓட்டங்களுக்கும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்கள். அதன்பின் வந்த மிட்செல் மார்ஷ் அரைச்சதம் அடித்து விளையாடினார். இவர் அரைச்சதம் அடிக்க மற்ற வீரர்களை ஹேரத் வெளியேற்ற அவுஸ்திரேலியா அணி முதல் இனிங்சில் 379 ஓட்டங்கள் சேர்த்து சகல விக்கட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி தரப்பில் பந்துவீச்சில் ரங்கனா ஹேரத் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பின்னர் 24 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இனிங்ஸைத் தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக தில்ருவான் பெரேரா, கருணாரத்ன ஆகியோர் களம் இறங்கினார்கள்.
பெரேரா 8 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆகி வெறியேறினார். அடுத்து கௌசல் சில்வா களம் இறங்கினார். இலங்கை அணி 5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 22 ஓட்டங்கள் சேர்த்திருக்கும்போது 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
சில்வா 6 ஓட்டங்களுடனும், கருணாரத்ன 8 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை இலங்கை அணி 2 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 9 விக்கெட்டுக்கள் உள்ளன. 2-வது இனிங்ஸில் 200 ஓட்டங்களுக்கு மேல் முன்னிலை பெற்றால் இலங்கை அணி இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற வாய்ப்புள்ளது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை அணி – 355/10
தனஞ்சய டி சில்வா 129, தினேஷ் சந்திமால் 132, ரங்கன ஹேரத் 33, மிச்சல் ஸ்டார்க் 63/5, நேதன் லியன் 110/3
அவுஸ்திரேலிய – 379/10
ஷோன் மார்ஷ் 130, ஸ்டீவ் ஸ்மித் 119, மிச்சல் மார்ஷ் 53, ரங்கன ஹேரத் 81/6, டில்ருவான் பெரேரா 129/2
இலங்கை – 22/1
திமுத் கருணாரத்ன 08*, கவ்ஷால் சில்வா 06*, மிச்சல் ஸ்டார்க் 19/1
இலங்கை அணி 02 ஓட்டங்கள் பின்னிலையில்
Batsmen | Dismissal | Runs | Balls |
Kaushal Silva | c Smith b Starc | 0 | 15 |
Dimuth Karunarathne | b Starc | 7 | 34 |
Kusal Perera | c Smith b Lyon | 16 | 32 |
Kusal Mendis | c Smith b Starc | 1 | 12 |
Angelo Mathews | c Starc b Lyon | 1 | 4 |
Dinesh Chandimal | c Nevill b Starc | 132 | 356 |
Dhananjaya De Silva | c S Marsh b Lyon | 129 | 280 |
Dilruwan Perera | c Lyon b Holland | 16 | 25 |
Rangana Herath | Retired Hurt | 33 | 71 |
Suranga Lakmal | c M Marsh b Starc | 5 | 11 |
Lakshan Sandakan | Not Out | 4 | 8 |
Extras (11) | TOTAL | 355 (141.1 overs) |
Fall of wickets : 1-2 (Silva, 4.4 ov), 2-21 (MDKJ Perera, 11.6 ov), 3-23 (Karunaratne, 14.1 ov), 4-24 (Mathews, 15.1 ov), 5-26 (Mendis, 16.2 ov), 6-237 (de Silva, 103.2 ov), 7-267 (MDK Perera, 109.6 ov), 7-340* (Herath, retired not out, 136.6 ov), 8-348 (Chandimal, 139.2 ov), 9-355 (Lakmal, 141.1 ov)
Bowler | Overs | Maidens | Runs | Wickets |
Mitchell Starc | 25.1 | 11 | 63 | 5 |
Josh Hazelwood | 18 | 4 | 52 | 0 |
Nathan Lyon | 50 | 11 | 110 | 3 |
Jon Holland | 37 | 8 | 69 | 1 |
Mitchell Marsh | 10 | 1 | 45 | 0 |
Steve Smith | 1 | 0 | 5 | 0 |
Batsmen | Dismissal | Runs | Balls |
David Warner | c K Perera b De Silva | 11 | 9 |
Shaun Marsh | b Lakmal | 130 | 281 |
Steve Smith | st K Perera b Herath | 119 | 218 |
Adam Voges | LBW b Herath | 22 | 63 |
Moises Henriques | st K Perera b Herath | 4 | 13 |
Mitchell Marsh | c Mendis b Herath | 53 | 92 |
Peter Nevill | LBW b D Perera | 14 | 34 |
Mitchell Starc | Not Out | 9 | 19 |
Nathan Lyon | c Mendis b D Perera | 3 | 9 |
Josh Hazelwood | b Herath | 0 | 6 |
Jon Holland | c Mathews b Herath | 1 | 7 |
Extras (13) | TOTAL | 379 (125.1 overs) |
Fall of wickets : 1-21 (Warner, 3.6 ov), 2-267 (SE Marsh, 82.5 ov), 3-275 (Smith, 85.2 ov), 4-283 (Henriques, 89.1 ov), 5-316 (Voges, 103.5 ov), 6-353 (Nevill, 114.6 ov), 7-367 (MR Marsh, 119.5 ov), 8-376 (Lyon, 122.2 ov), 9-377 (Hazlewood, 123.5 ov),10-379 (Holland, 125.1 ov)
Bowler | Overs | Maidens | Runs | Wickets |
Dilruwan Perera | 44 | 4 | 129 | 2 |
Dhananjaya De Silva | 7 | 0 | 27 | 1 |
Rangana Herath | 38.1 | 11 | 81 | 6 |
Lakshan Sandakan | 19 | 0 | 70 | 0 |
Suranga Lakmal | 13 | 0 | 54 | 1 |
Angelo Mathews | 4 | 1 | 5 | 0 |
Batsmen | Dismissal | Runs | Balls |
Dilruwan Perera | LBW b Starc | 8 | 4 |
Dimuth Karunarathne | Not Out | 8 | 12 |
Kaushal Silva | Not Out | 6 | 14 |
Extras (0) | TOTAL | 22/1 (5 overs) |
Fall of wickets : 1-8 (MDK Perera, 0.4 ov)
Bowler | Overs | Maidens | Runs | Wickets |
Mitchell Starc | 3 | 0 | 19 | 1 |
Nathan Lyon | 2 | 0 | 3 | 0 |