தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அபிவிருத்தி அணியினர் முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் விளையாட்டு அணியுடன் நேற்று சென்வஸ் பார்க் மைதானத்தில் மோதியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க வளர்ந்துவரும் விளையாட்டு அணியின் தலைவர் அகெர்மன் முதலில் தனது அணியினை துடுப்பெடுத்தாடப் பணித்தார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய மோகோட்ஸி , கோமாரி 30 மற்றும் 43 ஆட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடிய ப்ளூய், ஸ்மித் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தினைப் பகிர்ந்து கொண்டனர். 46 ஓட்டங்கள் பெற்ற வேளையில் விஜேரத்னே வின் பந்துவீச்சுக்கு அமில அபோன்சோ விடம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார்.
நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித் முதல் நாள் முடிவில் ஆட்டமிழக்காமல் 13 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கலாக 124 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை அபிவிருத்தி அணியின் பந்து வீச்சைப் பொருத்தமட்டில் சதுரங்க, ரமேஷ் புத்திக்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டினை வீழ்த்தினர். விஜேரத்ன, அமில அபோன்சோ ஆகியோர் தலா 2 விக்கட்டுகளைப் பதம் பார்த்தனர்.
முதல் நாள் முடிவில் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் விளையாட்டு அணியினர் 83 ஒவர்களுக்கு முகம் கொடுத்து 352 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுக்களை இழந்துள்ளனர். ஆடுகளத்தில் ஸ்மித், குருகெர் ஆகியோர் 64 ஓட்டங்கள் இணைப்பாட்டத்துடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
2ஆவது நாள் ஆட்டம் எவ்வாறு அமையப்பெரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
போட்டியின் சுருக்கம் :
தென்னாபிரிக்க வளர்ந்துவரும் விளையாட்டு அணி – 382/6
ஸ்மித் 124*, டு ப்ளூய் 46, கோமாரி 43, மகன்யா 30, குருக்கர் 28*
விஜேரத்தன 2/64, அமிலோ அபோன்சோ 3/82, சதுரங்க 1/92, புத்திக்க 1/29