டயலொக் அனுசரணையில் இடம்பெற்ற இலங்கை சூப்பர் 7s றக்பி போட்டிகளில் மொபிடெல் ஈகல்ஸ் அணி மற்றும் இசிபதன கல்லூரி அணி வெற்றிபெற்றது.
முதலாம் நாள்
கொழும்பு ரேஸ் கோஸ் மைதானத்தில் சூப்பர் 7s போட்டிகளின் இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 12ஆம் திகதி ஆரம்பமாகியது. குழு மட்டத்திலான போட்டிகள் முதலாம் நாள் நடைபெற்றது.
பாடசாலை மட்டத்திலான போட்டி
பாடசாலை மட்டத்திலான முதல் நான்கு போட்டிகளிலும் இசிபதன கல்லூரி, பீட்டர்ஸ் கல்லூரி, ஜோசப் கல்லூரி மற்றும் வெஸ்லி கல்லூரி அணிகள் வெற்றிபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் ஸாஹிரா கல்லூரி பீட்டர்ஸ் அணியுடனான போட்டியை சமநிலையில் முடித்து அதிர்ச்சி கொடுத்தது. தொடர்ந்து பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியும் வெஸ்லி கல்லூரியை 24-5 என்று தோல்வியடையச் செய்தது.
புனித பீட்டர்ஸ் கல்லூரி வெஸ்லி கல்லூரியோடு வெற்றிபெற ஸாஹிரா கல்லூரி பிரின்ஸ் ஒப் வேல்ஸ் அணியை வென்று வலுவடைந்தது. முதலாம் பாகத்தின் வெற்றியாளர்களான ஜோசப் கல்லூரியை இசிபதன கல்லூரி வெற்றிகொண்டது. தொடர்ந்து தோமஸ் கல்லூரி, டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியை 29-05 எனவெற்றிகொண்டதன் மூலம் பாடசாலை போட்டிகள் முதலாம் நாளில் நிறைவு கண்டது.
திறந்த மட்டப் போட்டி
முதலாவது போட்டியில் முதலாம் பாகத்தின் வெற்றியாளர்களாகிய மொபிடெல் ஈகல்ஸ் அணி, சென்ற பாகத்தில் ஒரு போட்டியிலேனும் வெற்றிப் பெறாத அக்சஸ் கிங்ஸ் அணியிடம் தோல்வியுற்று அதிர்ச்சி கொடுத்தது. ஈ.சி.வை. வூல்வ்ஸ் அணி 31-14 என்று கே.பி.எஸ்.எல். டிராகன்ஸ் அணியுடன் தோல்வியுற்றது. மற்ற இரு போட்டிகளிலும் வைப்பர்ஸ் அணி மற்றும் காகில்ஸ் கிளேடியேட்டர்ஸ் அணி வெற்றிபெற்றன.
சென்ற பாகத்தின் வெற்றியாளர்களாகிய மொபிடெல் ஈகல்ஸ் அணி இரண்டாவது போட்டியிலும் கே.பி.எஸ்.எல். டிராகன்ஸ் அணியிடம் தோல்வியுற்றது. ஈ.சி.வை. வூல்வ்ஸ் மற்றும் சொப்ட்லொஜிக் வொரியர்ஸ் அணி தமது இரண்டாம் ஆட்டத்தில் வெற்றிபெற்றது.
முதலாம் நாளில் காகில்ஸ் கிளேடியேட்டர்ஸ் அணி அக்சஸ் கிங்ஸ் அணியுடன் சமநிலை செய்து எந்த போட்டியிலும் தோல்வியுறாது குழுவில் முதலாம் இடத்தைப் பிடித்த அதே வேளையில் சென்ற பாகத்தின் வெற்றியாளர்களாகிய மொபிடெல் ஈகல்ஸ் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றது. முதலாம் நாளில் எடிசலாட் பந்தர்ஸ் அணி வாக்கர்ஸ் வைப்பர்ஸ் அணியை வெற்றிகொண்டது.
இரண்டாம் நாள்
பாடசாலை மட்டம்
காலிறுதியில் ஆரம்பிக்கப்பட்ட 2ஆம் நாளில் முதல் 4 காலிறுதிகளிலும், பீட்டர்ஸ் அணி,ஜோசப் அணி, ஸாஹிரா அணி மற்றும் பீட்டர்ஸ் அணிகள் முறையே டி.எஸ்.சேனநாயக்க,பிரின்ஸ் ஒப் வேல்ஸ் ,தோமஸ் அணி மற்றும் வெஸ்லி அணிகளை வேர்கொண்டு அரையிறுதிக்கு தகுதி பெற்றன .
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் அணி மற்றும் வெஸ்லி அணி முறையே டி.எஸ்.சேனநாயக்க மற்றும் தோமஸ் கல்லூரிகளை வெற்றிகொண்டு பொவுல் இறுதிப் போட்டிக்குத் தெரிவாக தோல்விகண்ட அணிகள் ஷீல்ட் இறுதி போட்டிக்கு தெரிவாகின.
கப் அரையிறுதிப் போட்டியில் பீட்டர்ஸ் அணி ஜோசப் கல்லூரியிடம் தோல்வி கண்டது, இரண்டாவது அரை இறுதியில் இசிபதன கல்லூரி ஸாஹிரா கல்லூரியை இலகுவாக வென்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.
கப் இறுதிப் போட்டியில் ஜோசப் கல்லூரியை இசிபதன கல்லூரி 33-12 என்ற புள்ளி வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிகொண்டு இரண்டாவது பாகத்தின் மற்றும் சூப்பர் 7s போட்டிகளின் வெற்றியாளர்களாக மகுடம் சூட்டப்பட்டது. பிளேட் இறுதிப் போட்டியில் பிரபல பீட்டர்ஸ் அணியை ஸாஹிரா கல்லூரி வெற்றிபெற்று பிளேட் கிண்ணத்தை வென்றது.
திறந்த போட்டிகள்
காலிறுதிப் போட்டிகளில் கே.பி.எஸ்.எல்.டிராகன்ஸ் அணி வாக்கர்ஸ் வைப்பர்ஸ் அணியை வென்றது.மொபிடெல் ஈகல்ஸ் அணி, சொப்ட்லொஜிக் அணியை வெற்றிகொள்ள அக்சஸ் கிங்ஸ் மற்றும் காகில்ஸ் கிளேடியேட்டர்ஸ் அணி முறையே எடிசலாட் அணி மற்றும் ஈ.சி.வை வூல்வ்ஸ் அணிகளை வெற்றிக்கொண்டு அரை இறுதிக்குத் தகுதி பெற்றது.
சொப்ட்லொஜிக் அணி வைப்பர்ஸ் அணியை வெற்றிக்கொள்ள எடிசலாட் அணி, ஈ.சி.வை வூல்வ்ஸ் அணியை தோற்கடித்து பொவுள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. தோல்விகண்ட இரு அணிகளும் ஷீல்ட் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகின.
அரை இறுதிப் போட்டியில் மொபிடெல் ஈகல்ஸ் அணி கே.பி.எஸ்.எல்.டிராகன்ஸ் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தெரிவாக காகில்ஸ் கிளேடியேட்டர்ஸ் அணி அக்சஸ் கிங்ஸ் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.
பிளேட் இறுதிp போட்டியில் அக்சஸ் கிங்ஸ் அணி, கே.பி.எஸ்.எல்.டிராகன்ஸ் அணியை வெற்றிகொண்டு பிளேட் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
இறுதிப் போட்டியில் எந்த போட்டியிலும் தோல்வியுறாத மொபிடெல் ஈகல்ஸ் அணியை 28-17 என தோற்கடித்து காகில்ஸ் கிளேடியேட்டர்ஸ் அணி இரண்டாம் பாகத்தை வெற்றிபெற்றனர். எனினும் முதலாம் பாகத்தில் வெற்றிபெற்றதன் காரணமாக மொபிடெல் ஈகல்ஸ் அணி புள்ளிகள் அடிப்படையில் சூப்பர் 7s வெற்றியாளர்களாக மகுடம் சூட்டப்பட்டனர்.