வரலாற்றில் இன்று : ஆகஸ்ட் மாதம் 08

426
OTD-Aug-8

1990ஆம் ஆண்டுகேன் விலியம்சன்  பிறப்பு

நியூசிலாந்து கிரிக்கட்  அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் மற்றும் தலைவரான கேன் விலியம்சனின்  பிறந்த தினமாகும்.

தற்போதைய நியூசிலாந்து அணியில் உள்ள தலைசிறந்த  முன் வரிசை துடுப்பாட்ட வீரரான கேன் விலியம்சன் நியூசிலாந்து கிரிக்கட் அணிக்காக 2010ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது  வரையிலான 06 வருட காலப் பகுதியில் 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 49.73 என்ற துடுப்பாட்ட சராசரியில் 4128 ஓட்டங்களையும் (அதிகபட்ச ஓட்டம் 242 ஆட்டம் இழக்காமல் ), 93 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 47.00 என்ற துடுப்பாட்ட சராசரியில் 3666 ஓட்டங்களையும் (அதிகபட்ச ஓட்டம் 145 ஆட்டம் இழக்காமல்), 35 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 34.53 என்ற துடுப்பாட்ட சராசரியில் 967 ஓட்டங்களையும் (அதிகபட்ச ஓட்டம் 72 ஆட்டம் இழக்காமல் ) பெற்றுள்ளார்.

இவர் தற்போது நடைபெறும் சிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் போட்டியிலும் 113 ஓட்டங்களை பெற்று ஆட்டம் இழந்து இருந்தார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 7

ஆகஸ்ட்  மாதம் 08ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1909 பில் வொயிஸ்  (அவுஸ்திரேலியா)
  • 1951 பில் கார்ல்சன் (அவுஸ்திரேலியா)
  • 1952 சுதாகர் ராவ் (இந்தியா)
  • 1964 பால் டெய்லர் (இங்கிலாந்து)
  • 1968 அபே குருவில்லா (இந்தியா)
  • 1973 ஷென் லீ (அவுஸ்திரேலியா)
  • 1977 முஹமத் வசீம் ( பாகிஸ்தான்)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்