2003ஆம் ஆண்டு – க்ரெஹெம் ஸ்மித்தின் இரட்டைச் சதம்
2003ஆம் ஆண்டு இங்கிலாந்து லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இங்கிலாந்து மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென் ஆபிரிக்க அணி முதலில் பந்து வீச்சைத் தீர்மானம் செய்தது.
இதன் படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 173 ஓட்டங்களுக்கு சுருண்டது. பின் தமது முதல் இனிங்ஸிற்காக ஆடிய தென் ஆபிரிக்க அணி 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 682 ஓட்டங்களைப் பெற்று தமது ஆட்டத்தை இடை நிறுத்தியது.
இதில் தென் ஆபிரிக்க அணியின் தலைவாரக் செயற்பட்டு ஆரம்ப துடுப்பப்ட்ட வீரராக களமிறங்கிய க்ரெஹெம் ஸ்மித் மிக அபாரமாக ஆடி 370 பந்துகளில் 34 பவுண்டரிகள் அடங்கலாக 259 ஓட்டங்களை விளாசினார். இதன் மூலம் தென் ஆபிரிக்க அணி இனிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்தது.
வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 1
ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1928 மால்கம் ஹில்டன் (இங்கிலாந்து)
- 1931 எடி புல்லர் (தென் ஆப்ரிக்கா)
- 1973 டேனி கெல்டர் (நமீபியா)
- 1975 கேட் லோவ் (இங்கிலாந்து)
- 1979 டேரன் பாட்டின்சன் (இங்கிலாந்து)
- 1981 டிம் மர்தாஹ் (அயர்லாந்து)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்