வரலாற்றில் இன்று : ஜூலை மாதம் 31

409
Hasitha Fernando

1997ஆம் ஆண்டு – அசித்த பெர்னாண்டோ பிறப்பு

இலங்கை அணியின் வளர்ந்து வரும் வேகப் பந்து முத்துக்களில் ஒருவரான அசித்த பெர்னாண்டோவின் பிறந்த தினமாகும். இந்த வருடம் ஆரம்பத்தில் பங்களாதேஷில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணியில் இவர் இடம்பெற்று இருந்தார். அதன் பின் இங்கிலாந்து சென்ற இலங்கை “ஏ” அணியில் இடம்பிடித்த இவர் பாகிஸ்தான் “ஏ” அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசி இலங்கை அணி 153 என்ற வெற்றி இலக்கை கட்டுப்படுத்தி வெற்றி பெற பெரும் பங்களிப்பு செய்து இருந்தார். அத்தோடு தற்போது இலங்கை வந்துள்ள அவுஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் குழாமில் இவர் இடம்பெற்று இருப்பது சிறப்பான அம்சமாகும்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூலை மாதம் 30

ஜூலை மாதம் 31ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1916 வெர்டன்  ஸ்காட் (நியூசிலாந்து)
  • 1939 ரோஜர் பிரடக்ஸ்  (இங்கிலாந்து)
  • 1963 டேவிஸ் ஜோசப் (கனடா)
  • 1968 சயீத் அல்-சபர் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்)
  • 1975 ஆஷிஷ் படேல் (கனடா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்