17 வருட சாதனையை முறியடித்து வெற்றியைப் பதித்தது இலங்கை

284
Day 5 sl v aus

கண்டி பல்லேகலே மைதானத்தில் இடம்பெற்ற  இலங்கை அவுஸ்திரேலிய அணிகள் மோதிய 1ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 106 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலியா கிரிக்கட் அணி மூன்று டெஸ்ட், 2 டி20 மற்றும் 5 ஒருநாள் சர்வதசேப் போட்டிகளைக் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை வந்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கண்டி பல்லேகலேயில் கடந்த 26ஆம் திகதி தொடங்கியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ் முதலில் துடுப்பாட்டத்தைத் தீர்மானம் செய்தார். இலங்கை அணி சார்பாக தனன்ஜய டி சில்வா மற்றும் லக்ஷன் சந்தகன் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார்கள்.

இதன் படி முதலில் துஇடுப்பெடுத்தாடிய இலங்கை  அணி முதல் இனிங்ஸில் 117 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அறிமுக வீரர்  தனன்ஜய டி சில்வா 24 ஓட்டங்களையும், குசல் ஜனித் பெரேரா 20 ஓட்டங்களையும் இன்னுமொரு அறிமுக வீரர்  லக்ஷன் சந்தகன் ஆட்டம் இழக்காமல் 19 ஓட்டங்களையும் தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ் மற்றும் உப தலைவர் தினேஷ் சந்திமால் ஆகியோர் தலா 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் ஹசில்வுட், நேதன் லியன் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளையும், ஸ்டார்க், ஓ’கீபே ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளையும், வீழ்த்தினார்கள்.

பின்னர் அவுஸ்திரேலிய அணி தமது முதல் இனிங்சில் 203 ஓட்டங்களைப் பெற்றது. இதில் எடம் வொக்கஸ் 47 ஓட்டங்களையும், மிட்சல் மார்ஷ் 31 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 30 ஓட்டங்களையும் உஸ்மான் கவாஜா 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் ஹேரத் மற்றும் அறிமுக வீரராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் சந்தகன் ஆகியோர்  தலா 4 விக்கட்டுகளைக் கைப்பற்றினர்.

பின்னர் 86 ஓட்டங்கள் பின்னிலையில் இலங்கை அணி தமது 2ஆவது இனிங்ஸில் துடுப்பெடுத்த்தாடி குசல் மெண்டிஸின் அருமையான 176 ஓட்டங்களின் உதவியோடு 353 ஓட்டங்களைப் பெற்றது. இதன் விளைவாக அவுஸ்திரேலிய அணிக்கு 268 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த இலக்கை நோக்கி அவுஸ்திரேலிய அணி தமது 2ஆவது இனிங்ஸை தொடங்கியது. வார்னர், பர்ன்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் இனிங்ஸில் டக் அவுட் ஆன வார்னர் 1 ஓட்டம் எடுத்த நிலையில் ஹேரத்தின் பந்தில் கிளீன் போல்டானார்.

அடுத்து வந்த கவாஜா 18 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் பர்ன்ஸ் 29 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.

27 ஓவர்கள் முடிந்த நிலையில் அவுஸ்திரேலியா 3 விக்கட்டுகள் இழப்பிற்கு 83 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வந்த நிலையில் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.

அதன் பின் அந்த நிலைமை நீண்ட நேரம் தொடர்ந்ததால் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

பின் இன்று 5ஆம் நாளில் தமது ஆட்டத்தைத் தொடர்ந்த அவுஸ்திரேலிய அணி தமது இரண்டாவது இனிங்ஸில் 161 ஓட்டங்களை மாத்திரமே பெற்று  106 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 55 ஓட்டங்களைப் பெற்றிருந்ததோடு, இலங்கையணி சார்பாக பந்துவீச்சில் ரங்கன ஹேரத் ஐந்து விக்கட்டுகளைக் கைப்பற்ற லக்ஷன் சந்தகன் 3 விக்கட்டுகளை வீழ்த்தினார். போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மென்டிஸ் தெரிவானார்.

இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி பெற்ற தோல்வியே, ஸ்டீவன் ஸ்மித் அணித்தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அடைந்த முதல் தோல்வியாகும். அத்தோடு இலங்கை அணி பெற்ற இந்த வெற்றி அவுஸ்திரேலிய அணியோடு டெஸ்ட் போட்டி ஒன்றில் 17 வருடங்களுக்குப்  பிறகு பெற்ற வெற்றியாகும்  என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை –  117/10 ( 34.2 )

தனன்ஜய டி சில்வா 24, குசல் ஜனித் பெரேரா 20, லக்ஷன் சந்தகன் 19*, எஞ்சலோ மெதிவ்ஸ் 15,  தினேஷ் சந்திமால் 15

நேதன் லியோன் 12/3, ஜோஸ் ஹசலவூட் 21/3, மிச்சல் ஸ்டார்க் 51/2, ஸ்டிவ்  ஓ’கீபே  32/2

அவுஸ்திரேலியா – 203/10

எடம் வொக்கஸ் 47, மிட்சல் மார்ஷ் 31, உஸ்மான் கவாஜா 26 , ஸ்டீவ்  ஸ்மித் 30

ரங்கன ஹேரத் 49/4, லக்ஷன் சந்தகன் 58/4

இலங்கை  –  353/10

குசல்  மெண்டிஸ் 176, தினேஷ் சந்திமால் 42, தனன்ஜய டி சில்வா 36

நேதன் லியோன் 98/2, மிச்சல் ஸ்டார்க் 44/2

அவுஸ்திரேலியா  – 161/10

ஸ்டீவ்  ஸ்மித்  55, ஜோ பார்ன்ஸ் 29, மிச்சல் மார்ஷ் 25, உஸ்மான் கவாஜா 18

ரங்கன ஹேரத் 54/5, லக்ஷன் சந்தகன் 49/3,

இலங்கை அணி 106 ஓட்டங்களால் வெற்றி

Full Scorecard[/vc_column_text][/vc_column][/vc_row]

Batsmen Dismissal Runs Balls
Dimuth Karunarathne LBW b Starc 5 12
Kaushal Silva c Voges b Hazelwood 4 25
Kusal Mendis LBW b Hazelwood 8 7
Dinesh Chandimal  c Nevill b Hazelwood 15 54
AD Mathews  c Smith b O’Keefe 15  24 
Dhananjaya De Silva  c Burns b Lyon  24  38
Kusal Janith Perera  b Lyon  20  15
Dilruwan Perera  LBW b Lyon
Rangana Herath  LBW b Starc  10
Lakshan Sandakan  Not Out  19  15
Nuwan Pradeep c Smith b O’Keefe   0
Extras (1) TOTAL  117 (34.2 overs)

Fall of wickets :1-6 (Karunaratne, 4.1 ov), 2-15 (Mendis, 5.3 ov), 3-18 (Silva, 9.1 ov), 4-43 (Mathews, 14.2 ov), 5-67 (Chandimal, 25.6 ov), 6-87 (de Silva, 28.2 ov), 7-87 (MDK Perera, 28.4 ov), 8-94 (MDKJ Perera, 30.2 ov), 9-100 (Herath, 31.6 ov), 10-117 (Pradeep, 34.2 ov)

Bowler Overs Maidens Runs Wickets
Mitchell Starc  11 1 51 2
Josh Hazelwood 10 4 21 3
Steve O’Keefe 10.2 3 32 2
 Nathan Lyon   3 12
Batsmen Dismissal Runs Balls
Joe Burns b Herath 3 15
David Warner b Pradeep 0 5
Usman Khawaja LBW b Herath 26 62
Steve Smith st Chandimal b Herath 30 53
Adam Voges ct Mendis b Pradeep 47 115
Mitchell Marsh b Sandakan 31 63
Peter Neville ct Perera b Herath 2 11
Steve O’Keefe ct Mendis b Sandakan 23 80
Mitchell Starc ct Perera b Sandakan 11  29
Nathan Lyon LBW b Sandakan  17 25
Josh Hazelwood Not Out 2 18
Extras (11) TOTAL  203 (79.2 overs)

Fall of wickets: 1-3 (Warner, 2.2 ov), 2-7 (Burns, 3.6 ov), 3-69 (Smith, 21.2 ov), 4-70 (Khawaja, 23.2 ov), 5-130 (Marsh, 45.4 ov), 6-137 (Nevill, 48.3 ov), 7-160 (Voges, 62.1 ov), 8-179 (Starc, 69.5 ov), 9-190 (O’Keefe, 73.6 ov), 10-203 (Lyon, 79.2 ov)

Bowler Overs Maidens Runs Wickets
Nuwan Pradeep 16 6 36 2
Rangana Herath  25 8 49 4
Dilruwan Perera 14 1 43 0
 Lakshan Sandakan  21.2 58 4
 Angelo Mathews  3 1 6
Batsmen Dismissal Runs Balls
Kusal Janith LBW b Starc 4 5
Kaushal Silva LBW b O’Keefe 7 32
Dimuth Karunarathne LBW b Starc 0 3
Kusal Mendis c Neville b Starc 176 254
Angelo Mathews c Burns b Lyon 9 31
Dinesh Chandimal LBW b Marsh 42 100
Dhananjaya De Silva c Khawaja b Lyon 36 62
Dilruwan Perera LBW b Hazelwood 12 22
Rangana Herath c Henriques b Hazelwoood 35 34
Lakshan Sandakan  b Starc 9 7
Nuwan Pradeep Not Out 10 12
Extras (13) TOTAL 353 (93.4 overs)

Fall of wickets: 1-6 (MDKJ Perera, 2.2 ov), 2-6 (Karunaratne, 2.5 ov), 3-45 (Silva, 12.2 ov), 4-86 (Mathews, 27.1 ov), 5-203 (Chandimal, 58.1 ov), 6-274 (de Silva, 77.3 ov), 7-290 (Mendis, 82.1 ov), 8-314 (MDK Perera, 87.4 ov), 9-323 (Sandakan, 88.5 ov), 10-353 (Herath, 93.4 ov)

Bowler Overs Maidens Runs Wickets
Mitchell Starc 19 4 84 4
Josh Hazelwood 18.4 3 59 2
Steve O’Keefe 16.2 3 42 1
Nathan Lyon 27 2 108 2
David Warner 1 0 10 0
Adam Voges 1.4 0 3 0
Mitchell Marsh 9 1 33 1
Steve Smith 1 0 1 0
Batsmen Dismissal Runs Balls
Joe Burns b Sandakan 29 57
David Warner  b Herath 1 4
Usman Khawaja LBW b Perera 18 26
Steve Smith LBW b Herath 55 125
Adam Voges c & b Herath 12 47
Mitchell Marsh LBW b Herath 25 37
Peter Nevill c Chandimal b De Silva 9 115
Mitchell Starc c & b Sandakan 0 3
Nathan Lyon LBW b Sandakan 8 16
Steve O’Keefe b Herath 4 98
Josh Hazelwood Not Out 0 7
Extras (0) TOTAL 161 (83.3 overs)

Fall of wickets: 1-2 (Warner, 1.2 ov), 2-33 (Khawaja, 8.1 ov), 3-63 (Burns, 17.6 ov), 4-96 (Voges, 34.2 ov), 5-139 (Marsh, 47.3 ov), 6-140 (Smith, 49.4 ov), 7-141 (Starc, 50.2 ov), 8-157 (Lyon, 56.1 ov), 9-161 (Nevill, 85.5 ov), 10-161 (O’Keefe, 88.3 ov)

Bowler Overs Maidens Runs Wickets
Nuwan Pradeep 6 3 16 0
Rangana Herath 33.3 16 54 5
Dilruwan Perera 13 3 30 1
Lakshan Sandakan 25 8 49 3
Dhananjaya De Silva 11 7 12 1