வரலாற்றில் இன்று : ஜூலை மாதம் 30

307
OTD-July-30

1982ஆம் ஆண்டு – ஜேம்ஸ் எண்டர்சன் பிறப்பு


இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் எண்டர்சனின் பிறந்த தினமாகும்.

ஜிம்மி என்ற புனைப் பெயரைக் கொண்ட 6 அடி 2 அங்குலம் உயரம் கொண்ட வலதுகை வேகப் பந்து வீச்சாளரான இவர் இங்கிலாந்து அணிக்காக 2002ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான 14 வருட காலப் பகுதியில் 117 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 28.23 என்ற பந்து வீச்சு சராசரியில் 458 விக்கட்டுகளையும், 194 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 29.22 என்ற பந்து வீச்சு சராசரியில் 269 விக்கட்டுகளையும், 19 டி20 போட்டிகளில் விளையாடி 30.66 என்ற பந்து வீச்சு சராசரியில் 18 விக்கட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.

1989ஆம் ஆண்டு – வெயன் பார்னெல் பிறப்பு


தென் ஆபிரிக்க அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர் வெயன் பார்னெலின் பிறந்த தினமாகும். பிஜன், பார்னி என்ற புனைப் பெயரைக் கொண்ட இடதுகை வேகப் பந்து வீச்சாளரான இவர் தென் ஆபிரிக்க  அணிக்காக 2009ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான 7 வருட காலப் பகுதியில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36.85 என்ற பந்து வீச்சு சராசரியில் 7 விக்கட்டுகளையும், 51 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 30.28 என்ற பந்து வீச்சு சராசரியில் 70 விக்கட்டுகளையும், 35 டி20 போட்டிகளில் விளையாடி 23.44 என்ற பந்து வீச்சு சராசரியில் 38 விக்கட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.

ஜூலை மாதம் 29ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்


1910 டோரதி மெக்வொய் (இங்கிலாந்து)

1965 டிம் மண்டன்  (இங்கிலாந்து)

1963 பீட்டர் பவ்லர் (இங்கிலாந்து)

1969 எர்ரோல் ஸ்டீவர்ட் (தென் ஆப்ரிக்கா)