வரலாற்றில் இன்று : ஜூலை மாதம் 28

392
OTD-July-28

1936ஆம் ஆண்டு – கெரி சோபர்ஸ் பிறப்பு

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைசிறந்த துடுப்பாட்ட வீரரான கெரி சோபர்சின் பிறந்த தினமாகும். 5 அடி 11 அங்குலம் உயரமுடைய சகலதுறை வீரராக செயற்பட்டுள்ள இவர் 1954ஆம் ஆண்டு தொடக்கம் 1974ஆம் ஆண்டு வரையிலான 20 வருட காலப்பகுதியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஒரே ஒரு ஒருநாள் போட்டியிலும், 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 57.78 என்ற துடுப்பாட்ட சராசரியில் 8032 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

1978ஆம் ஆண்டு – ஜெகொப் ஓரம் பிறப்பு

நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரரான ஜெகொப் ஓரமின் பிறந்த தினமாகும். 1.98 மீற்றர் உயரமுடைய இடதுகைத் துடுப்பப்ட்ட வீரரான இவர் நியூசிலாந்து அணிக்காக 2001ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரையிலான 11 வருட காலத்தில் 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36.32 என்ற துடுப்பாட்ட சராசரியில் 1780 ஓட்டங்களையும், 160 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 24.09 என்ற துடுப்பாட்ட சராசரியில் 2434 ஓட்டங்களையும், 36 டி20 போட்டிகளில் விளையாடி 20.60 என்ற துடுப்பாட்ட சராசரியில் 474 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

ஜூலை மாதம் 26ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1891 ரான் ஆக்சன் (அவுஸ்திரேலியா)

1902 விப்ரட்வைய்ட்டைத் (வெஸ்ட் இண்டீஸ்)

1924 எரிக் ஃபிஷர் (நியூசிலாந்து)

1931 ஜானி மார்ட்டின் (அவுஸ்திரேலியா)