தென்னாபிரிக்காவின் வளர்ந்து வரும் அணியினருக்கு இலகு வெற்றி

290
SA VS SL D MATCH

இலங்கை அபிவிருத்தி அணியினர் தென்னாபிரிக்க சென்று விளையாடிக் கொண்டிருக்கும் முக்கோண சுற்றுப் போட்டித்தொடரின் முதலாவது போட்டி நேற்று நடைபெற்றது.

இலங்கை அபிவிருத்தி அணி, தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி, தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணி ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முக்கோண சுற்றுப் போட்டித் தொடரின் முதலாவது போட்டி நேற்று பிரிட்டோரிய மைதானத்தில் இலங்கை அபிவிருத்தி அணிக்கும் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணிகளுக்கிடையில் இடம்பெற்றது.  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடினர்.49.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றனர்.

இதில் ஜேசன் ஸ்மித் அதிரடியாக ஆடி 112 பந்துகளை எதிர் கொண்டு  134 ஓட்டங்களைக் குவித்தார்.

பெட்ரிக் குருகெர் 47 பந்துகளுக்கு 47 ஓட்டங்களைப் பெற்றார்.  அனுக் பெர்னாண்டோ 67 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அபிவிருத்தி அணியினர் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகளை இழந்து 225 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தனர்.  லஹிரு மிலந்த 77 பந்துகளை எதிர் கொண்டு 59 ஓட்டங்களை குவித்தார். பிஜோரின் போர்ச்சுன் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும், திசேப்பு நிடூலி 40 ஓட்டங்களுக்கு 2  விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் சாரம்சம் 

தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி – 294 (49.5)

ஜேசன் ஸ்மித் 134, பெட்ரிக் குருகெர் 47, மார்க்ஸ் அகெர்மன் 41

அணுக் பெர்னாண்டோ 3/67, விஜேரத்ன 2/59, அகில தனஜய 2/68

இலங்கை அபிவிருத்தி அணி – 225/8 (50)

லஹிரு மிலந்த 59, ஹஸன் துமிந்து 49, அஞ்சேலோ ஜெயசிங்கே 33, பிஜோரின் போர்ச்சுன் 2/31, திசேப்பு நிடூலி 40/2 

தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியினர் 69 ஓட்டங்களால் வெற்றியடைந்து ஆட்ட நாயகனாக ஜேசன் ஸ்மித் தெரிவு செய்யப்பட்டார்.