1955ஆம் ஆண்டு – எலன் போர்டர் பிறப்பு
அவுஸ்திரேலிய அணியில் விளையாடிய தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படும் எலன் போர்டரின் பிறந்த தினமாகும்.
வடக்கு சிட்னி ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்ற 5 அடி 9 அங்குலம் உயரமுடைய இடதுகைத் துடுப்பாட்டவீரரான எலன் போர்டர் அவுஸ்திரேலிய அணிக்காக 1979ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரையிலான 15 வருட காலத்தில் 156 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 50.56 என்ற துடுப்பாட்ட சராசரியில் 11174 ஓட்டங்களையும், 273 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 30.62 என்ற துடுப்பாட்ட சராசரியில் 6524 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். மத்தியதர வரிசைத் துடுப்பாட்ட வீரரான இவர் பயிற்சிவிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.
1969ஆம் ஆண்டு – ஜொண்டி ரோட்ஸ் பிறப்பு
கிரிக்கட் உலகில் களத்தடுப்புக்கு வர்ணிக்கப்படும் ஜொண்டி ரோட்ஸின் பிறந்த தினமாகும். அற்புத களத்தடுப்பு வீரரான இவர் அயர்லாந்து அணிக்காகவும் விளையாடியுள்ளார்.
ஆனால் அதிகபடியாக தென் ஆபிரிக்க அணியையே பிரதிநித்துவப்படுத்தி விளையாடியுள்ள ஜொண்டி ரோட்ஸ் 1992ஆம் ஆண்டு தொடக்கம் 2003ஆம் ஆண்டு வரையிலான 11 வருட காலப்பகுதியில் தென் ஆபிரிக்க அணிக்காக 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 35.66 என்ற துடுப்பாட்ட சராசரியில் 2532 ஓட்டங்களையும், 245 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 35.11 என்ற துடுப்பாட்ட சராசரியில் 5935 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
ஜூலை மாதம் 27ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
1933 ரோஜர் ஹாரிஸ் (நியூசிலாந்து)
1963 நவீத் அஞ்சும் (பாக்கிஸ்தான்)
1967 நீல் ஸ்மித் (இங்கிலாந்து)
1985 அஜ்மல் ஷெஸத் (இங்கிலாந்து)