அவுஸ்திரேலியா கிரிக்கட் அணி மூன்று டெஸ்ட், 2 டி20 மற்றும் 5 ஒருநாள் சர்வதசேப் போட்டிகளைக் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை வந்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கண்டி பல்லேகலேயில் இன்று தொடங்கியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ் முதலில் துடுப்பாட்டத்தைத் தீர்மானம் செய்தார். இலங்கை அணி சார்பாக தனன்ஜய டி சில்வா மற்றும் லக்ஷன் சந்தகன் ஆகியோர் இன்று டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார்கள்.
அதன்படி இலங்கை அணியின் கருணாரத்ன, கௌசல் சில்வா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை 6 ஓட்டங்களாக இருக்கும்போது கருணாரத்னவின் விக்கெட்டை மிட்செல் ஸ்டார்க் சாய்த்தார்.
இதன் மூலம் காயத்தில் இருந்து மீண்டு நீண்ட இடைவெளிக்குப்பின் டெஸ்ட் போட்டிக்கு திரும்பிய ஸ்டார்க் அசத்தினார்.
அதன்பின் இலங்கை விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் லியோன், ஓ’கீபே ஆகியோரின் அபார பந்து வீச்சால் 34.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அணி முதல் இனிங்ஸில் 117 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அறிமுக வீரர் தனன்ஜய டி சில்வா 24 ஓட்டங்களையும், குசல் ஜனித் பெரேரா 20 ஓட்டங்களையும் இன்னுமொரு அறிமுக வீரர் லக்ஷன் சந்தகன் ஆட்டம் இழக்காமல் 19 ஓட்டங்களையும் தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ் மற்றும் உப தலைவர் தினேஷ் சந்திமால் ஆகியோர் தலா 15 ஓட்டங்களையும் பெற்றனர்
அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் ஹசில்வுட், நேதன் லியன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், ஓ’கீபே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், வீழ்த்தினார்கள்.
பின்னர் அவுஸ்திரேலிய அணி முதல் இனிங்ஸைத் தொடங்கியது. மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற முத்தரப்பு தொடரின் பாதியிலேயே காயம் காரணமாக வெளியேறிய டேவிட் வோர்னர் இந்த டெஸ்டில் இடம்பிடித்திருந்தார். அவர் 5 பந்துகளை சந்தித்த நிலையில் பிரதீப்பின் பந்தில் க்ளீன் போல்டாகி ஓட்டம் ஏதும் பெறாமல் ஆட்டம் இழந்தார்.
அவரோடு களமிறங்கிய மற்றொரு தொடக்க வீரர் பர்ன்ஸ் 3 ஓட்டங்களை எடுத்து ஹேரத்தின் பந்தில் போல்டானார். இதனால் அவுஸ்திரேலிய அணி 7 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் 3ஆவது விக்கெட்டுக்கு கவாஜாவுடன் தலைவர் ஸ்மித் இணைந்தார்.
இவர்கள் இருவரும் நிதானமான ஆட்டத்தைக் கடைபிடித்து தேநீர் இடைவேளை வரை சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி அவுஸ்திரேலிய அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதன்படி தேநீர் இடைவேளையின் போது அவுஸ்திரேலிய அணி 2 விக்கட்டுகள் இழப்பிற்கு 66 ஓட்டங்களைப் பெற்று இருந்தது.
Photo Album – Sri Lanka vs Australia 1st Test Match – Day 1
அதன் பின் தேநீர் இடைவேளையின் போது மழைக் குறுக்கிட்டது. அந்த மழை மற்றும் மப்பும் மந்தாரமுமான காலநிலை தொடர்ந்ததால் நடுவர்கள் முதல் நாளை முடிவுக்குக் கொண்டு வார்ந்தார்கள்.
இதன் படி அவுஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கட்டுகள் இழப்பிற்கு 66 ஓட்டங்களைப் பெற்று இருந்தது. உஸ்மான் கவாஜா 25 ஓட்டங்களோடும் ஸ்டீவ் ஸ்மித் 28 ஓட்டங்களோடும் ஆடுகளத்தில் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
நுவான் பிரதீப் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் தலா 1 விக்கட் வீதம் இலங்கை அணியின் பந்து வீச்சுத் தரப்பில் பங்கு போட்டனர்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை – 117/10 ( 34.2 )
தனன்ஜய டி சில்வா 24, குசல் ஜனித் பெரேரா 20, லக்ஷன் சந்தகன் 19*, எஞ்சலோ மெதிவ்ஸ் 15, தினேஷ் சந்திமால் 15
நேதன் லியோன் 12/3, ஜோஸ் ஹசலவூட் 21/3, மிச்சல் ஸ்டார்க் 51/2, ஸ்டிவ் ஓ’கீபே 32/2
அவுஸ்திரேலியா – 66/2
உஸ்மான் கவாஜா 25* , ஸ்டீவ் ஸ்மித் 28*
நுவான் பிரதீப் 3/1, ரங்கன ஹேரத் 15/1
Batsmen | Dismissal | Runs | Balls |
Dimuth Karunarathne | LBW b Starc | 5 | 12 |
Kaushal Silva | c Voges b Hazelwood | 4 | 25 |
Kusal Mendis | LBW b Hazelwood | 8 | 7 |
Dinesh Chandimal | c Nevill b Hazelwood | 15 | 54 |
AD Mathews | c Smith b O’Keefe | 15 | 24 |
Dhananjaya De Silva | c Burns b Lyon | 24 | 38 |
Kusal Janith Perera | b Lyon | 20 | 15 |
Dilruwan Perera | LBW b Lyon | 0 | 2 |
Rangana Herath | LBW b Starc | 6 | 10 |
Lakshan Sandakan | Not Out | 19 | 15 |
Nuwan Pradeep | c Smith b O’Keefe | 0 | 4 |
Extras (1) | TOTAL | 117 (34.2 overs) |
Fall of wickets :1-6 (Karunaratne, 4.1 ov), 2-15 (Mendis, 5.3 ov), 3-18 (Silva, 9.1 ov), 4-43 (Mathews, 14.2 ov), 5-67 (Chandimal, 25.6 ov), 6-87 (de Silva, 28.2 ov), 7-87 (MDK Perera, 28.4 ov), 8-94 (MDKJ Perera, 30.2 ov), 9-100 (Herath, 31.6 ov), 10-117 (Pradeep, 34.2 ov)
Bowler | Overs | Maidens | Runs | Wickets |
Mitchell Starc | 11 | 1 | 51 | 2 |
Josh Hazelwood | 10 | 4 | 21 | 3 |
Steve O’Keefe | 10.2 | 3 | 32 | 2 |
Nathan Lyon | 3 | 0 | 12 | 3 |
Batsmen | Dismissal | Runs | Balls |
Joe Burns | b Herath | 3 | 15 |
David Warner | b Pradeep | 0 | 5 |
Usman Khawaja | Not Out | 25 | 54 |
Steve Smith | Not Out | 28 | 46 |
Extras (10) | TOTAL | 66/2 (20 overs) |
Fall of wickets: 1-3 (Warner, 2.2 ov), 2-7 (Burns, 3.6 ov)
Bowler | Overs | Maidens | Runs | Wickets |
Nuwan Pradeep | 5 | 3 | 3 | 1 |
Rangana Herath | 6 | 2 | 15 | 1 |
Dilruwan Perera | 4 | 1 | 19 | 0 |
Lakshan Sandakan | 2 | 0 | 13 | 0 |
Angelo Mathews | 3 | 1 | 6 | 0 |